ஆரோக்கியமாக இருக்க நீச்சல் என்பது சிறந்த வழியாகும். வாழ் நாள் முழுவதும் தொடர கூடிய சிறப்பான ஒன்றாக நீச்சல் இருக்கிறது.
எல்லா வயதினருக்கும் நீச்சல் ஒரு சிறந்த பொழுது போக்கு நடவடிக்கையாகவும் இருக்கிறது.
சுவையான வாழை இலை மீன் பொள்ளிச்சது செய்வது எப்படி?
நமது முழு உடல் மற்றும் இதய அமைப்புகளை நீச்சல் திறம்பட இயங்க உதவும். தொடர்ந்து நீச்சல் அடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றை இங்கே பார்க்கலாம்..
நீச்சலின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று தலை முதல் கால் வரை வேலை செய்கிறது. உடலுக்கு அழுத்தம் கொடுக்காமல் இதய துடிப்பை அதிகரிக்கிறது. உடலுக்கு ஸ்டாமினா மற்றும் ஸ்ட்ரென்த் அளிக்கிறது.
நீச்சல் ஒர்க்கவுட்டில் உள்ள பேக் ஸ்ட்ரோக், சைட்ஸ்ட்ரோக், ஃப்ரீஸ்டைல் உள்ளிட்ட பல வெரைட்டிகள் உடலின் தசைகளை வலுப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகின்றன.
நீச்சல் அடிப்பதால் தசைகளுக்கு நல்ல வொர்க்அவுட் கிடைக்கிறது. இதனால் இதயம், நுரையீரல் பலப்படுகிறது.
பாஸ்தா உடலுக்கு ஆரோக்கிய நன்மை தருமா? படிங்க !
இதனால் ஒருவரின் மரண அபாயம் குறையும் என்பது நிபுணர்கள் கருத்து. நீச்சல் ரத்த அழுத்தத்தை குறைக்க, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும் என்று காட்டுகின்றன.
கலோரிகளை எரிக்க நீச்சல் ஒரு சிறந்த வழி. சுமார் 73 கிலோ எடையுள்ள ஒருவர் குறைந்த அல்லது மிதமான வேகத்தில் நீந்தும் போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 423 கலோரிகளை எரிக்கிறார்.
அதுவே 90 கிலோ எடையுள்ள நபர் மிதமான வேகத்தில் நீந்தினால் ஒரு மணி நேரத்திற்கு 528 முதல் 892 கலோரிகள் வரை எரிக்க கூடும். இரவில் நன்றாக உறங்க உதவும் சக்தி நீச்சலுக்கு உண்டு.
நீச்சல் என்பது உடல் ரீதியாக சோர்வடைய செய்வதை தவிர, மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
நீச்சல் செய்வது எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது இயற்கையான உணர்வு ஹார்மோன்கள் ஆகும். இது மனநிலையை மேம்படுத்தி உற்சகமாக இருக்க உதவுகிறது.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
டிமென்ஷியா பாதிப்பு கொண்டவர்களின் வாழ்விலும் நீச்சல் நல்ல பலனை தருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆர்த்ரைட்டிஸ், காயம் உள்ளவர்களுக்கு நீச்சல் ஒரு பாதுகாப்பான உடற்பயிற்சியாக இருக்க கூடும். நீச்சல் வலியை குறைக்க அல்லது காயத்திலிருந்து மீள கூட உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆர்த்ரைட்டிஸ் மற்றும் மூட்டுவலி பிரச்னை உள்ளவர்கள் நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்ட பிறகு பிரச்சனைகள் குறைந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.
நீச்சல் என்பது ஆஸ்துமாவிற்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் இது நுரையீரல் திறனை விரிவுபடுத்தவும், சுவாச கட்டுப்பாட்டைப் பெறவும் உதவுகிறது.
நீச்சல் குளங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சில நேரங்களில் ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கலாம்.
எனவே குளோரினுக்கு பதிலாக உப்பு நீரை பயன்படுத்தும் swimming pool-ஐ பயன்படுத்தலாம். தண்டுவட மரப்பு நோய் உள்ளவர்களுக்கு நீச்சல் நன்மை பயக்கும்.
சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?
நீர்வழி அல்லது நீச்சல் இந்த நோயின் முன்னேற்றத்தை தாமதப் படுத்தலாம் மற்றும் பேலன்ஸ் மற்றும் நடைபயிற்சி திறனை மேம்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தத்தை விரைவாகக் குறைக்க நீச்சல் ஒரு சக்தி வாய்ந்த வழி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள்.
நீச்சல் போன்ற உடல் செயல்பாடுகள் மூளையைத் தூண்டி நரம்பியல் ரசாயனங்களை வெளியிடுவதால் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நன்றாக உணர வைக்கிறது.
குக்கரில் சுவையான சாக்லேட் பனானா கேக் செய்வது எப்படி?
நீச்சல் என்பது ஒரு வேடிக்கையான செயல் உடற்பயிற்சி செய்வது போல் உணர வேண்டிய அவசியமில்லை.
எனவே நீச்சல் பயிற்சி குழந்தைகளுக்கு ஏற்றது அவர்களின் உடல் மட்டும் தசைகளை வலிமையாக மாற்ற சிறந்த வழி.
Thanks for Your Comments