இந்தியாவில் யாராவது இரட்டை குடியுரிமை வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது என்பது தான் முதன்மையாக விடையாக கிடைக்கும்.
இந்திய அரசியலமைப்பில் இரட்டை அல்லது பல குடியுரிமை வழங்கப்பட வில்லை. ஒரு இந்தியர் வேறொரு நாட்டில் பாஸ்போர்ட்டைப் பெற்றால், அவர்களது இந்திய குடியுரிமையை தானாகவே இழந்து விடுவர்.
பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் படி, அனைத்து இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும்
மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றவுடன் உடனடியாக அருகிலுள்ள இந்திய அலுவலகத்தில் பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டியது கட்டாயமாகும்.
நாவல்பழ மில்க்ஷேக் செய்வது !
அப்படி இருக்கும் போது இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு கிராமத்து வாசிகள் மட்டும் 2 நாட்டு குடியுரிமைகளை வைத்துள்ளனர்.
ஆமாம், நாகலாந்தில் உள்ள லாங்வா என்ற கிராம வாசிகள் மட்டும் இந்திய மற்றும் மியான்மர் குடியுரிமையை பெற்றுள்ளனர்.
அதற்கு காரணம் இந்த கிராமம் இந்திய - மியான்மார் எல்லையில் அமைந்துள்ளது. சர்வதேச எல்லை இதன் வழியாகச் சென்றாலும் கிராமம் ஒருங்கிணைந்து இருப்பதால் இந்த முறை அமலில் உள்ளது.
அதே போல் எப்போதும் சர்வதேச எல்லை என்றால் வேலி போட்டு காவலர்களை நிறுத்தி பாதுகாப்பார்கள் என்று பார்த்திருப்போம்.
ஆனால் இங்கு அப்படி ஏதும் கிடையாது. சொல்லப் போனால் சர்வதேச எல்லை இந்த கிராமத்தை நிர்வகிக்கும் கிராமத் தலைவர் அல்லது ஆங்கின் வீட்டின் வழியாக செல்கிறது.
ஆம்புலன்ஸ் தராத அரசு மருத்துவமனை - மாணவி உயிரிழந்த சோகம் !
நாகாலாந்தில் உள்ள லாங்வாவின் ஆங் என்பது மோன் மாவட்டத்தில் உள்ள ஏழு ஆங்களில் ஒன்றாகும்.
பல சிறிய கிராமங்களின் மீது ஆங்ஸ் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அவற்றில் சில மோன், அருணாச்சல பிரதேசம் மற்றும் மியான்மரில் உள்ளன.
லோங்வா கிராமத்தில் இந்தியாவில் உள்ள மனிதர்களை வேட்டையாடும் இனத்தவர்களில் கடைசியாக உள்ள கொன்யாக் நாகா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.
ஆனால் 1960 இல் கிறுத்துவ மதத்தின் பரவலால் மனிதர்களை வேட்டையாடும் பழக்கத்தைக் கை விட்டனர்.
கொன்யாக் பழங்குடியினருக்கு தலையை வேட்டையாடும் பழக்கம் கலாச்சார ரீதியாக முக்கியமானது.
பீப் உணவுகளை எடுத்துச் செல்ல மறுக்கும் ஸொமாட்டோ ஊழியர்கள்... பின்னணி ?
பழைய காலத்தில் தங்கள் போட்டிக் குடியினருடன் சண்டையிட்டு வென்று தலையைக் கொணர்வது பாரம்பரிய பழக்கமாக கடைபிடிக்கப் பட்டது.
சக்தி, வலிமை, செழிப்பு மற்றும் கருவுறுதல் போன்றவற்றின் அடையாளமாக எதிரிகளின் தலைகளை வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வந்தனர் என்ற கதைகளும் உண்டு.
தெரியுமா? : நைட்ரேட் இறைச்சியைப் பதனிடவும், இறைச்சிக்கு வர்ணம் கொடுக்கவும், இறைச்சியின் சுவையைக் கூட்டுவதற் காகவும் பயன்படுத்தப் படுகிறது.
கொன்யாக்கள் தங்கள் முகம் மற்றும் பிற உடல் பாகங்களில் பச்சை குத்திக் கொண்டனர். அது அவர்களின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று.
அது போக இந்த கிராமத்தை சுற்றி இந்தியாவின் இரண்டு மற்றும் மியான்மரின் இரண்டு என மொத்தம் நான்கு ஆறுகள் பாய்வதால் இயற்கை அழகு அபரிமிதமாக இருக்கும்.
நாகர்களின் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளவும் இரண்டு நாடுகளின் எல்லை இவ்வளவு நட்புறவாக இருக்கும் இடத்தின் இயல்பை அனுபவிக்கும் பயணிகள் இந்த இடத்திற்கு நிச்சயம் செல்லலாம்.
சயனைட் கொலையாளி வைத்தியராய் - விசித்திரமான விஞ்ஞானி !
சுற்றி மலை மற்றும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். தமிழகத்தில் இருந்து அசாம் போஜு ரயில் நிலையம் வரை சென்று அங்கிருந்து சில்குறி வழியாக நாகலந்தின் மோன் மாவட்டத்தை அடையலாம்.
Thanks for Your Comments