போக்குவரத்து அபராத தொகையை மொபைல் மூலம் செலுத்துவது எப்படி?

0

போக்குவரத்து விதிகளை பராமரிக்க அரசு, சாலைகளில் கேமராக்கள் மற்றும் பிற சென்சார்களை நிறுவி இருக்கிறது. விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க இந்த சாதனங்கள் வழிவகுக்கிறது. 

போக்குவரத்து அபராத தொகையை மொபைல் மூலம் செலுத்துவது எப்படி?
டிஜிட்டல் இந்தியா அறிவிப்பு பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓட்டுனர்களுக்கான அபராதம் மற்றும் சலான் செலுத்தும் முறை ஆன்லைனில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பார்கள் அந்த சமயம் உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் போலிசாரிடம் அப்போதே அபராதத்தை கட்டி விடலாம் 

வதக்கு சட்னி அல்லது கதம்ப சட்னி செய்வது எப்படி?

ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்றால் நீங்கள் செலானை வாங்கி விட்டு பிறகு ஆன்லைனில் அபராத தொகையை செலுத்தி கொள்ளலாம். 

போக்குவரத்து சலான்கள் விதிக்கப்பட்டு அவற்றை முறையாக செலுத்தப்படாத பட்சத்தில் அதிக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் நிலை ஏற்படலாம். 

இது போன்ற சமயங்களில் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கக் கூடிய எளிதான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். 

உங்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து, அந்த டிராஃபிக் சலானை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

நீங்கள் உங்கள் ஊரில் உள்ள பிரவுசிங் செண்டர், அல்லது போஸ்ட் ஆபிஸ், அல்லது இ-சேவை மையங்கலிலும் கட்டி கொள்ளலாம்

இல்லை எங்கும் அலையாமல் அபராத தொகையை நீங்களே எப்படி ஆன்லைனில் கட்டுவது என தற்போது பார்க்கலாம்.

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் இருந்தால் மீண்டும் அவர் போலீசாரிடம் சிக்கும் போது,

எத்தனை முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டோர் கட்ட வேண்டிய அபராத தொகை போன்ற விபரங்கள் தெரிந்து விடும்.

செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

வாகன பதிவு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றாலும், இணையதளம் மூலம் தெரிந்து விடும். 

இதற்கு முன்பு வாகன ஓட்டிகள், டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாகவும், நீதி மன்றத்திலும் அபராதம் செலுத்தி வந்தனர். 

தற்போது புதிய முறைப்படி எங்கும் அலையாமல் உங்கள் மொபைல் போன் மூலம் நீங்களே அபராத தொகையை செலுத்தலாம்

செலான் என்றால் என்ன:-

வழக்கமாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போக்குவரத்து அபராதம் விதிக்கப் பட்டால் போலிசார் ஒரு ரசீதை கொடுப்பார்கள். 

அந்த ரசீதில் உங்கள் பெயர், தேதி, மாதம், வருடம், நேரம், லைசன்ஸ் எண், வாகன எண், வாகன வகை, என்ன விதிமீறல், செலுத்த வேண்டிய அபராத தொகை,  Challan Number போன்ற தகவல்கள் இடப் பெற்றிருக்கும்.

இந்த ரசீதின்  மின்னணு வடிமே e-Challan ஆகும். இந்த e-Challan மூலம் நீங்கள் Online  மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.
அபராத தொகையை மொபைல் போன் மூலம்  செலுத்துவது எப்படி?

1. முதலில் மொபைல் போனில் இங்கு  கிளிக் செய்யுங்கள், அல்லது echallan.parivahan இந்த லின்ங்கை கிளிக் செய்யவும்.

2. அடுத்து அதில் உங்கள் வாகன எண் , அல்லது லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் ஏதாவது ஒன்றை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள்.

ஒரு வேளை தங்களிடம் Challan இல்லா விட்டால் Vehicle Number அதாவது உங்கள் பைக், கார் நம்பரை உள்ளிடுங்கள். 

சுவையான பாதாம் பிஸ்தா அல்வா செய்வது எப்படி?

அதன் பிறகு Chassis Number Last 5 Characters அல்லது Engine No Last 5 Characters எண்ணினை பதிவிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. அதில் உங்கள் போக்குவரத்து விதிமீறல் விவரம் மற்றும் அபராத தொகை இருக்கும் அதன் அருகில்  pay now என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

4. அடுத்து பணம் செலுத்த உங்கள் மொபைல் நம்பரை பதிவிடுங்கள் அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிடுங்கள்.

5.அடுத்து பணம் செலுத்துவதற்கான வலை தளத்திற்கு செல்லும் அதில் Payment Gateway இல் SBI ePay என்பதை தேர்வு செய்யவும். பிறகு Check Box யை டிக் செய்து Continue என்பதை அழுத்தவும். 

6. அடுத்து அதில் நெட் பேங்கிங், கார்டு பேமெண்ட் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நீங்கள் உங்கள் அபராத தொகை செலுத்த வேண்டும். 

அடுத்து பணம் செலுத்திய பின் challan payment has been received successfully என்று வரும் அவ்வளவு தான்.  

பணம் கட்டிய சலானை பிரிண்ட் எடுப்பது எப்படி : .

போக்குவரத்து அபராத தொகையை மொபைல் மூலம் செலுத்துவது எப்படி?

1. முதலில் மொபைல் போனில் இங்கு  கிளிக் செய்யுங்கள், அல்லது echallan.parivahan இந்த லின்ங்கை கிளிக் செய்யவும்.

2. அடுத்து அதில் உங்கள் வாகன எண், அல்லது லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் ஏதாவது ஒன்றை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள்.

சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?

ஒரு வேளை தங்களிடம் Challan இல்லா விட்டால் Vehicle Number அதாவது உங்கள் பைக், கார் நம்பரை உள்ளிடுங்கள். 

அதன் பிறகு Chassis Number Last 5 Characters அல்லது Engine No Last 5 Characters எண்ணினை பதிவிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. அதில் உங்கள் போக்குவரத்து விதிமீறல் விவரம் மற்றும் அபராத தொகை இருக்கும் அதன் அருகில் பிரிண்ட் என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவு தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings