அன்னாசிப்பூ என்பது மூலிகை, மருத்துவ குணமிக்க இதை மசாலாக்களில் அதிகம் பயன்படுத்துகிறோம். இவை மருத்துவ குணங்கள் கொண்டவையும் கூட.
ஆனால் இதை அதிகமாக பயன்படுத்தும் போது பலவித பக்க விளைவுகளும் உண்டாகும்.
அன்னாசிப்பூ மசாலாக்களில் மட்டுமல்ல உணவுகள், பானங்கள், இனிப்புகள் புத்துணர்ச்சி தரக்கூடிய அனைத்திலும் இவை பயன்படுத்தப் படுகிறது.
இது தவிர சோப்புகள், க்ரீம்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிலும் இதன் நறுமணத்துக்காக பயன்படுத்தப் படுகிறது.
அன்னாசிப்பூ
அன்னாசிப்பூ மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின்- ஏ வைட்டமின்-சி போன்ற பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
இது நட்சத்திர வடிவம் கொண்ட ஒரு மசாலா பொருள். இது சக்தி வாய்ந்த பயோ ஆக்டிவ் சேர்மங்களை ஈர்க்கும் ஆதாரமாக சொல்லப்படுகிறது.
இது உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவையும் கூட. இதன் அடர்த்தியான ஃப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் கொண்டிருக்கலாம்.
இதில் லினினூல், குர்செடின், அனெத்தோல், ஷிகிமிக் அமிலம், கல்லிக் அமிலம், லிமோனைன் போன்ற
கலவைகள் இதற்கு ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி மைக்ரோபியல் பண்புகளுக்கு உதவுகிறது.
பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
இது குறித்து விலங்குகள் மீது ஆராய்ச்சி கொண்டதில் நன்மையான தகவல்கள் உண்டு என்றாலும்
மனிதர்களுக்கு இதில் உள்ள பயோசேர்மங்கள் என்ன விதமான நன்மை அளிக்கும் என்பதை அறிய கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை.
அன்னாசிப்பூ எப்படி செயல்படுகிறது?
அன்னாசிப்பூவில் இதன் விதைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றூம் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக் கூடிய பொருள்கள் உண்டு.
இது காய்ச்சலுகு எதிராக சிகிச்சையளிக்க கூடும். அதோடு இது ஷிகிமிக் அமிலத்தின் நல்ல மூலமும் கூட. இது காய்ச்சல் சிகிச்சைக்கான மருந்தில் பயன்படுத்தப் படுகிறது.
அதே நேரம் காய்ச்சல் வைரஸ் எதிராக அன்னாசிப்பூ செயல்படுகிறது என்பதற்கான ஆய்வுகள் இல்லை.
உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை !
அதே போன்று அன்னாசிப்பூ இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல், இன்பாண்டோலிக், வாய்வு, பசியிழப்பு, மாதவிடாய் கோளாறூகள்,
வயிற்று கோளாறுகள், தாய்ப்பால், பிரசவத்தை எளிதாக்குவது, தாம்பத்தியத்தில் ஈடுபாடு உண்டாக்குகிறது.
சுவாசக்குழாய் நெரிசலை போக்குகிறது இப்படி பல விதமான நன்மைகள் அன்னாசிப்பூ அளிக்கிறது என்று பயன்படுத்தினாலும் இதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை.
ஆய்வுகள் சொல்வது என்ன?
இந்த அன்னாசிப்பூவை உணவுகளிலும் பொடியை பானங்களிலும் மசாலாவாக பயன்படுத்துகிறோம். இதன் விதை எண்ணெய் சுவைக்கு பயன்படுத்தப் படுகிறது.
அழகு பொருள்களில் கலவைகள் சேரும் போது விரும்பத்தகாத வாசனையை மறைக்க இது உதவுகிறது.
அன்னாசிப்பூ நுரையீரல் தொற்று, வாய்வு, குழந்தைகளில் பெருங்குடல் மற்றும் இன்னும் பல பிரச்சனைகளுக்கு அன்னாசிப்பூவை பயன்படுத்தி வருகிறோம்.
எனினும் இந்த பயன்பாடுகளுக்கு நிரூபனமான சரியான ஆய்வுகள் இல்லை.
மருந்தாக அன்னாசிப்பூ எடுக்கும் போது
அன்னாசிப்பூ மருத்துவ குணங்களை கொண்டது என்றால் இது மருந்தாக அப்படியே எடுத்துகொள்வது பாதுகாப்பானது அல்ல.
இதை உணவாக நுகர்வது தான் பாதுகாப்பானது. ஏனெனில் அன்னாசிப்பூவை மருந்தாக பயன்படுத்து குறித்து போதுமான ஆய்வுகள் இல்லை.
அதே நேரம் நீங்கள் பயன்படுத்தும் அன்னாசிப்பூ தரமானதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஜப்பானிய அன்னாசிப்பூ வேறு பக்க விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக இவை என்ன மாதிரியான பக்க விளைவை உண்டாக்கும் என்று பார்க்கலாம்.
40+ உடனே செக் செய்து கொள்ளுங்கள்
சருமத்தில் பயன்படுத்தும் போது
நட்சத்திர சோம்பான அன்னாசியை நேரடியாக சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும் போது அதில் உள்ள இரசாயனங்கள் சருமத்தில் வீக்கம், கொப்புளங்கள் மற்றும் சரும பிரச்சனைகளை உண்டாக்கி விடும்.
அதனால் இதை தனித்து பயன்படுத்த கூடாது பிற பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் பரிசோதனைக்கு பிறகு ஒவ்வாமை இல்லையெனில் பயன்படுத்தலாம்.
கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் போதும்
கர்ப்பக்காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் இதை உணவில் சேர்த்து எடுப்பது குறித்து பிரச்சனையில்லை.
இதை தனித்து மருந்தாக எடுத்துகொள்வது பாதுகாப்பானதா என்பதை அறிய போதுமான தகவல்கள் இல்லை.
அதனால் கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இதிலிருந்து விலகி இருப்பது நல்லது தான்.
கலப்படமிக்க அன்னாசிப்பூ
அன்னாசிப்பூ கலப்படமிக்கதை பயன்படுத்தினால் அது அபாயகரமான விளைவுகளை உண்டாக்கலாம். வலிப்பு தாக்கங்கள், குமட்டல் போன்ற கடுமையான அறிகுறிகளை உண்டாக்கலாம்.
ஏனெனில் இதில் சக்திவாய்ந்த நியூரோ டாக்சின்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது.
உடலை எப்பவும் ஆரோக்கியமாக வைக்கும் எலுமிச்சை.!
ஒரு வேளை உங்களுக்கு அன்னாசிப்பூவின் தரத்தை பரிசோதிக்க தெரியவில்லை எனில் அளவை குறைத்து பயன்படுத்துவது நல்லது.
Thanks for Your Comments