ஆண் ஆக்டோபஸ் இனப்பெருக்க காலத்தில் தன்னுடைய மூன்றாவது கையை பெண்ணின் மேண்டல் குழியில் நுழைத்து விந்தணுக்களை செலுத்துகின்றது.
ஒரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால், அதற்குப் பின் ஆண் ஆக்டோபசுகள் அதிகபட்சம் சில மாதங்களே உயிர் வாழும்.
ஒரு பெண் ஆக்டோபஸ் 4,00,000 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகள் பொரிய ஐந்து மாதங்கள் ஆகும்.
அத்தனை நாள்களும் அந்தப் பெண் ஆக்டோபஸ் இரவு பகல் பாராமல் முட்டைகளைப் பாதுகாக்கும். இதனால் பெரும்பாலும் அந்த கால கட்டத்தில் உணவுகளைக் கூட தவற விடுகிறது.
அதிகபட்சம் பெண் ஆக்டோபசுகள் தன் முட்டைகள் பொரிந்த பின் ஒரு சில நாள்களே உயிர் வாழ்கின்றன.
உண்மைக்குமே இது தியாகம் தானே?
சிறந்த தாய் என்பதில் தவறில்லையே ?
ஆக்டோபஸ்சில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட வகைகள் உன்டு. பெரும்பாலும் அவை கடல்களையும், கடற்பரப்புகளையும் உறைவிடமாகக் கொண்டிருக்கும்.
நண்டுகள், இறால்களை உணவாகக் கொள்ளும். பொதுவாக ஆக்டோபஸ் 16 அடி வரை வளரும். 50 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும்.
பசிபிக் பெருங்கடலில் வாழும் ராட்சத ஆக்டோபஸ்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆக்டோபஸ்.
Thanks for Your Comments