கார் தொழில்நுட்பங்களும், பாதுகாப்பு அம்சங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வேகமாக மேம்பட்டு வருகின்றன.
அந்த காலத்தில் அம்பாசடர், ஃபியட் கார்களில் பிரேக் தொழில்நுட்பங்கள் இப்போது அளவுக்கு சிறப்பான விஷயம் இல்லை.
ஆனாலும், வாகன எண்ணிக்கையும், வாகனங்களின் அதிகபட்ச வேகம் குறைவாக இருந்ததால், விபத்துக்கள் என்பது சற்றே அரிதான விஷயம்.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் வேகமும், சாலை கட்டமைப்புகளின் தரமும் வெகுவாக உயர்ந்து விட்டன.
அதற்கு இணையாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. எனவே, அதற்கு தக்கவாறு, கார்களின் பிரேக் சிஸ்டத்தை மேம்படுத்துவது அவசியமாகியது.
- [துணுக்கு செய்தி
- நாம் சாப்பிடும் உணவுடன் வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்த பிறகுதான் உணவின் சுவையை உணர முடியும்.]
அதற்கு மிகவும் உகந்த தொழில்நுட்பமாக பரவலாக தற்போது ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் [ABS] பயன்படுத்தப் படுகிறது
கார்கள் இன்று நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை தாண்டி சர்வ சாதாரணமாக செல்கின்றன. அவ்வாறு செல்கையில், திடீரென பிரேக் பிடிக்கும் போது டயர்கள் சறுக்கிச் சென்று விபத்தில் சிக்கி விடுகின்றன.
இதனால், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிலை குலைந்து விபத்தில் சிக்கி விடுகின்றன.
இந்த குறையை போக்கும் வகையில், சக்கரங்களில் பிரேக் அமைப்பு செயல் இழந்து போவதை தவிர்க்கும் தொழில்நுட்பம் தான் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்றழைக்கப் படுகிறது.
தொலைதூர பேருந்துகள், அல்லது மகிழுந்து போன்றவற்றில் நாம் செல்லும் பொழுது அதன் சாரதி திடீரென்று பிரேக் போட வேண்டியிருந்தால் நான்கைந்து முறை விட்டு விட்டு பிரேக் பெடலை அழுத்துவார்கள்,
அந்நேரம் உள்ளுக்குள் இருப்பவர்கள் டக் .டக் என்று முன்னால் இருக்கும் இருக்கையிலும் அடுத்தவர் மேலும் விழுந்து சாரதியை திட்டுவார்கள்.
ஆனால் உண்மையில் அது தான் ஏபிஎஸ் .அவர் பிரேக் பெடலை ஓங்கி ஒரே மிதி அழுத்தினார் என்றால் வாகனம் தறிகெட்டு கவிழ்ந்து விடும்.
அல்லது அதன் சக்கரங்கள் சாலையிலிருந்து இடப்புறமாக, வலது புறமாகவோ விலகி மேற்கொண்டு சூழ்நிலையை விபரீதமாகி விடும்.
அது ஏனென்றால் ஒரேயடியாக பெடலில் அழுத்தம் இருக்கும் பொழுது ,சக்கரங்கள் சுழலும் நிலையிலிருந்து பூஜ்ய நிலையாக சில நொடிகளில் நின்று விடுவதால்
இயக்க விசை முழுவதுமாக பூஜ்யத்துக்கு வராமல் விபத்தை உண்டாக்கி விடுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் சக்கரங்களில் அதற்கு இணையாக ஒரு வட்டு பொருத்தப் பட்டிருக்கும்.
அதில் நிறைய சிறு துளைகள் இருக்கும். சக்கரங்கள் சுழலும் பொழுது அதன் மேல் மாட்டியிருக்கும் ஒரு சாதனத்திலிருந்து சக்கரத்தின் வேகத்தினை அதாவது வாகனத்தின் வேகத்தை கவனித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு நிமிடத்திற்கு 60 சுற்றுகள் ,இருபது சுற்றுக்கள் என்ற வகையில் கவனித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று பிரேக் பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால்
- [துணுக்கு செய்தி
- உண்மையில் நாம் பார்ப்பது கண்களினால் அல்ல ! மூளையினால் ! கண் விழிகள் லென்சுகள் போல் செயல்பட்டு பார்வை நரம்புகள் மூலம் கண்களினால் காணும் காட்சியை மூளையை பார்க்க வைக்கிறது !.]
அதிக வேகத்திற்கு தகுந்தாற் போல ஒரு நொடிக்கு பதினைந்திலிருந்து முப்பது முறை கூட அந்த சக்கரத்தில் இணைக்கப்பட்ட வட்டினை தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு பிரேக் பிடிக்கப்படும்.
இவ்வாறு பிடிக்கப்படும் பொழுது தொடர் அழுத்தமாக பிரேக் பிடிக்க பிடிப்பதை விட, வெகு சுலபமாக சக்கரங்கள் இயக்க நிலையிலிருந்து நிலை நிறுத்தத்திற்கு வந்து விடும்.
பாதுகாப்பாக சக்கரங்கள் லாக் ஆகாது.
நேர்கோட்டில் வாகனம் வெண்ணையில் கத்தி சொருகியது பாதுகாப்பாக நின்று விடும்.
எண்பது கிலோமீட்டர் வேகத்தில் வரும் ஒரு வாகனம் நிற்பதற்கு 30 மீட்டர் தேவை என்றால் இது போல ஒரு நொடிக்கு 15 முறை பிரேக் விட்டு விட்டு பிடிக்கும் பொழுது சக்கரங்கள் 15 மீட்டர் தூரத்திலேயே நிலை நிறுத்தத்திற்கு வந்து விடும்.
இது இது இரு சக்கர வாகனங்களுக்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கும் விசேஷமாக வடிவமைக்கப் பட்டிருக்கும்.
நான்கு சக்கரங்களிலிருந்தும்
தனியாக சென்சார்கள் வேலை செய்து கண்ட்ரோல் யூனிட் எனப்படும் மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் தானியக்கமாக கவனிக்கப்பட்டு செயல் படுகின்றது.
இந்த ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் இயக்கமும் ,பவர் ஸ்டேரிங் எனப்படும் இயக்கமும் தான் இன்றைக்கு பெருமளவில்
சாரதிகளின் கஷ்டத்தையும் குறைத்து சாலைகளில் அதிவேக வாகனங்களின் பாதுகாப்பான இயக்கத்தையும் அளிக்கின்றது.
Thanks for Your Comments