ஹிட்லரை பணிய வைத்த செண்பகராமன் !

0
15-9-1891-ல் திருவனந்தபுரம் புத்தன் சந்தை என்ற ஊரில் செண்பகராமன் பிறந்தார். அவரது பெற்றோர் சின்னசாமி பிள்ளை - நாகம்மா ஆவர். 15 வயதில், ஆஸ்திரியா (Austria) சென்றார். 
ஹிட்லரை பணிய வைத்த செண்பகராமன் !

அங்குள்ள ஒரு பள்ளியில், பள்ளிக் கல்வி பயின்றார். பள்ளி கல்வி முடித்ததும், பொறியியல் டிப்ளமோ (Diploma) பயின்றார்.

தென்னாட்டு போஸ் என்றும், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்தையும் கிளர்ந்தெழச் செய்யும் ஜெய்ஹிந்த் என்னும் கோஷத்தின் தந்தையாகவும் போற்றப்படுபவர் மாவீரன் செண்பகராமன்.
 
1914-ம் ஆண்டு முதல் உலக போர் நடந்த காலமாகும். உலகின் வயிற்றை கங்காரு குட்டி போல் மரண பயம் கவ்வியிருந்தது. 
 
இந்தியாவில் பிரிட்டன் மயான அமைதி ஏற்படுத்தி இருந்தது. செப்டம்பர் 24-ந் தேதியன்று சென்னையில் திடீரென்று மூன்று குண்டுகள் வீசப்பட்டன. 
 
துறைமுகம் மற்றும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இரண்டும், உயர்நீதி மன்றத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒன்றும் என மூன்று குண்டுகள் வீசப்பட்டன. 
 
எங்கிருந்து வந்தன அந்த குண்டுகள்? வெள்ளையர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர். நிச்சயம் வான் வழியில்லை. இவை கடல் வழியே எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் மூலம் வந்தவை. 

கடலில் கப்பல்கள் மிதந்து வருவது ராட்சத வண்ணப்பறவை நீந்துவது போல் இருக்கும். எம்டனோ நீர்மூழ்கி கப்பல் ஆகும். இந்த கப்பலை இயக்கிய வழிகாட்டி செண்பகராமன் ஆவார். 

பிரிட்டிஷ் கப்பல் படை சுதாரிப்பதற்குள் செண்பகராமன் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி பறந்து விட்டார். குழந்தை பிராயத்திலே செண்பகராமன் பெரும் நாட்டுப் பற்றுடன் இருந்தார். 
 
வெள்ளையருக்கு எதிரான அவரின் கலக மனநிலையை உணர்ந்த வெள்ளை அரசு அந்த ஊரை விட்டு அவர் வெளியேறக் கூடாது என தடை விதித்தது. 
 
செண்பகராமனுக்கு அப்போது கிடைத்த துணை சர் வில்லியம் ஸ்ட்ரிக்லாண்ட் ஆவார். இவர் ஜெர்மானிய உளவு அதிகாரி. முதலில் இருவரும் ரகசியமாக கப்பல் மூலம் இலங்கை சென்றனர். 
அங்கிருந்து இத்தாலி பயணமாயினர். அப்போது செண்பகராமன் வயது 15 ஆகும். போன இடத்தில் இத்தாலி மொழியைப் பயின்று இலக்கியமும், அறிவியலும் கற்றார். 
 
பின்பு செண்பகராமன் அங்கிருந்து சுவிட்சர்லாந்து சென்றார். அங்கு அறிவியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 
 
மீண்டும் செண்பகராமன் ஜெர்மனி போனார். பொறியியல் பயின்று அங்கு முனைவர் பட்டம் பெற்றார். மாணவராக இருந்து கொண்டே செண்பகராமன் பொதுநலப் பற்றும் கொண்டிருந்தார். 
 
உலகில் எந்த மூலையில் ஒரு நாடு அடிமைப்பட்டு கிடந்தாலும் செண்பகராமன் மனம் குமுறுவார். பர்மா, துருக்கி, தென்ஆப்பிரிக்கா சென்று கிளைகளை அமைத்தார். 

ஆப்பிரிக்கா கண்டத்தில் நிலவிய நிறவெறி செண்பகராமனுக்கு மேலும் ஆத்திரம் தந்தது. நீக்ரோ மக்களுக்காக முழு சக்தியுடன் குரல் கொடுத்தார். 

கலிபோர்னியா, அமெரிக்க நாடுகளுக்கும் செண்பகராமன் பயணம் செய்தார். செண்பகராமனின் உரை அக்னி சுடராக தெறித்து தூங்கிய மூடர்களையும் தட்டி எழுப்பியது. 
 
செண்பகராமனின் வெள்ளையர் எதிர்ப்பு ஒரே நேரத்தில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் அவர் மீது சினம் கொண்டன. அவர் மீது வழக்கு தொடுத்து உலகெங்கும் அவரை வெள்ளையர்கள் தேடத் தொடங்கினர். 
 
செண்பகராமனுக்கு பாதுகாப்பாக தெரிந்த இடம் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் ஆகும். ஜெர்மனியின் அதிபர் கெய்சர் செண்பகராமனால் ஈர்க்கப்பட்டார். 
அனைத்து அரசு விழாக்களுக்கும் செண்பகராமன் அழைக்கப் பட்டார். அவரை சிறப்பிக்கும் வகையில் ஜெர்மன் அரசு வொன் என்ற சிறப்பு விருதளித்தது. 
 
செண்பகராமன் லட்சுமிபாய் என்பவரை 1930-ல் திருமணம் செய்தார். மறுபுறம் செண்பகராமன் சிந்தனை இந்தியாவை சுற்றியே இருந்தது. 
 
ஹிட்லரை பணிய வைத்த செண்பகராமன் !

இந்திய விடுதலையை வலுப்படுத்த இந்திய ஆதரவு சர்வதேச அமைப்பை செண்பகராமன் உருவாக்கினார். மேலும் அதன் தலைவராக இயங்கினார். 

ஐரோப்பாவில் இந்திய நிலைமையை பட்டவர்த்தனமாக சொல்ல ஒரு பத்திரிகையை தொடங்கினார். வியன்னாவில் நடந்த ஒரு மாநாட்டில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை சந்திக்கும் வாய்ப்பு செண்பகராமனுக்கு கிடைத்தது. 
அப்போது தான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நேதாஜியிடம் செண்பகராமன் பயன்படுத்தினார். அந்த வார்த்தை பின்னாளில் இந்தியாவின் தாரக மந்திரமானது. 
 
இது போலவே செண்பகராமன் உருவாக்கி இருந்த இந்திய தேசிய தொண்டர் படை குறித்து நேதாஜியிடம் விளக்கினார். 
 
பின்னாளில் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு அது தான் அடிப்படை என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 
 
செண்பகராமன் தன் வாழ்நாளில் சந்தித்த இரு பெரும் ஆளுமைகள் லெனினும், ஹிட்லரும் ஆவர். 

1917-ல் சோவியத் ருஷ்ய புரட்சியை நடத்திய லெனின் உலகின் வெவ்வேறு விடுதலை இயக்கங்களோடு தொடர்பு கொண்டு ஆதரவு தந்தார். இருவரும் நேரில் சந்தித்தனர். 

இதற்கு பிறகு காபூலில் செண்பகராமன் முதல் சுதந்திர அரசை அமைத்தார். அதில் வெளியுறவு அமைச்சரான செண்பகராமனுக்கு லெனின் வாழ்த்து அனுப்பினார். 
 
இதை போலவே செண்பகராமன் இரண்டாம் உலக யுத்தத்திற்கு காரணமாய் இருந்த நாஜிக்களின் தலைவர் ஹிட்லரையும் சந்தித்தார். 
 
எனினும் இந்நட்பு கூடா நட்பாய் அமைந்தது. ஒரு முறை ஹிட்லர் இந்தியர்கள் சுதந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று இழிவாக பேசி விட்டார். 
 
இதைக் கேட்டதும் கொதித்தெழுந்த செண்பகராமன் நீங்கள் இப்படி பேசியது தவறானது என்று எதிர்த்து பேசி இந்தியர்களின் பாரம்பரிய சிறப்புகளை அவர் புரியும் படி பேசி ஹிட்லர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 
மிரண்டு போன ஹிட்லர் செண்பகராமனிடம் மன்னிப்பு கோரினார். எனினும் செண்பகராமன் ஹிட்லரை எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்க வைத்தார்.

இச்சம்பவம் ஹிட்லரின் கூட இருந்த நாஜிக்களுக்கு கொதிப்பூட்டியது. தருணம் பார்த்து செண்பகராமனை பழித்தீர்க்க நினைத்தனர். 

ஒரு விருந்து நிகழ்வில் செண்பகராமன் உண்ணும் உணவில் மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து விட்டனர். செண்பகராமன் உடல் நலம் குன்றியது. தீவிர சிகிச்சை பெற்றும் பலனளிக்க வில்லை. 
செண்பகராமனின் வாழ்க்கை முடிவை நெருங்கியது. 26-5-1934-ல் அவர் மனைவி லட்சுமிபாய் மடியில் அவர் உயிர் பிரிந்தது. சாகும் தருவாயில் தன் மனைவியிடம் இரு கோரிக்கைகள் வைத்தார். 
 
செண்பகராமன் இறந்த பிறகும் அவர் மனைவி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கணவனின் சாம்பலை எடுத்து கரமணை ஆற்றில் கரைக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings