கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன்... டான் பிராட்மேனின் சாதனை !

0
இவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு. The Don என்பது தான் அது. கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன் இவர் தான். Donald George Bradman என்பதே இவா் முழுப் பெயர்.
கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன்... டான் பிராட்மேனின் சாதனை !

அலெகெ்ஸான்டர் போர்க்களத்தில் இணையற்ற வீரர் என்பதால் மகா என்ற அடைமொழிச் சொல்லைச் சேர்த்துக் கொண்டது போல, ஆடுகளத்தில் விளாசிய இவரையும் மகாவீரர் என்று சொல்லி விடலாம்.

ஓட்டத்தில் குதிரையைத் தோற்கடித்த இளைஞர்.. இப்படி எல்லாம் கூட ஓட முடியுமா?

ஆஸ்திரேலியரான இவர் நியூசவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் தான் பிறந்தார். February 25, 2001இல் இவர் இறந்த போது வயது 92 .

52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6996 ஓட்டங்கள் ஆடிக் குவித்த ஒரு ரண்மெஷின். சராசரி 99.4!

இருபதாம் நுாற்றாண்டின் இணையற்ற கிரிக்கெட் வீரராக இருந்த இவர், 21ஆம் நுாற்றாண்டில், விளையாடுவதிலிருந்து விலகி விட்டாலும், 
 
இன்னொரு 50 ஆண்டுகள் administrator, selector, sage, cricketing statesman என்று கிரிக்கெட்டைச் சுற்றி சுற்றி வந்தவர் இந்த மகாவீரர்!

இவர் சாதனைகள் பலவற்றை இன்னொருவர் தகர்க்க முடியாத அளவு, நீடிப்பது, நம்மை வியப்புக்கு உள்ளாக்கும் ஓர் அம்சம்.

The Invincible என்றொரு ஹாலிவுட் திரைப்படத்தை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள். 1948இல் இந்தப் பெயர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குக் கொடுக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? 
மார்ச் 1948 ஆண்டுக்கு ஆண்டு விளையாடப்படும் ஆஷெஷ் தொடரும் வந்தது. கப்பலில் தான் பயணம். 8 வது மாத முடிவில் தான் மோதல்கள் நிறைவடைந்தன. 
கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன்... டான் பிராட்மேனின் சாதனை !

ஆஸ்திரேலிய அணித்தலைவர் பிராட்மான். இந்தத் தொடர் நிறைவுற்ற போது, ஆஸ்திரேலிய அணி எந்த மோதலிலும் தோற்காத ஒரு மலைப்பூட்டும் சாதனையைப் படைத்திருந்தது. 

கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா?

The Invincibles என்று புகழாரம் சூட்டின பத்திரிகைகள். தோற்கடிக்க முடியாதவர்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சரித்திரத்தில் மகத்தான சாதனை பின்னணியில் இருந்தவர் மகாவீரரான பிராட்மான் தான்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings