கூகிள் மேப்ஸின் ஸ்ட்ரீட் வியூ கேமரா பங்களாதேஷில் உள்ள இளம் மனிதரை கால்கள் இல்லாமல் மிதக்கும் மனிதராகப் படம் பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல கோடி பயனர்கள் பயன்படுத்தும் இந்த கோ-டு நேவிகேஷன் பயன்பாடு, புதிதாக ஒரு மிதக்கும் மனிதனின் விசித்திரமான புகைப்படத்தை உருவாக்கியுள்ளது.
உண்மையில் இந்த பறக்கும் மனிதரின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த புகைப்படம், டவ்ன்டவுன் எக்ஸ் என்ற ஒரு ரெடிட் பயனர் மூலம் வெளியிட்டுள்ளது. பங்களாதேஷில் மிதக்கும் மனிதன் என்ற தலைப்பில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவர் தனது கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பதைக் காட்டுகிறது, இருப்பினும் புகைப்படத்தில் அவரின் இரண்டு கால்கள் மட்டும் காணப்படவில்லை.
இருப்பினும், சில பார்வையாளர்கள் அவர் அருகில் இருக்கும் சுவற்றில், அந்த இளைஞரின் கால்களின் நிழல்கள் இருப்பதைக் கவனித்து கமெண்ட் செய்துள்ளனர்.
ஆகையால், உண்மையில் அவருக்கு கால்கள் இருந்துள்ளது என்பதை சுவற்றில் உள்ள நிழல் உறுதிப் படுத்தியுள்ளது.
கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் 360 டிகிரி புகைப்படத்தை கிளிக் செய்யும் பொழுது, 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்கள் கிளிக் செய்து அனைத்து கோணங்களின் படங்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒரே 360 வியூ படமாக வழங்குகிறது.
அப்படி அனைத்து படங்களையும் தொகுக்கும் போது இந்த சிறிய பிழை உருவாகி, இந்த இளைஞரின் கால்கள் மறைக்கப்பட்டு மிதப்பது போல் மாறி விட்டது என தெரிகிறது.
Thanks for Your Comments