சமீபத்தைய மோசமான காலநிலை நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியை உறைய வைத்துள்ளது.
மேல் பகுதி பனிப்பாளங்களால் நிறைந்திருந்தாலும், கொட்டும் தண்ணீர் முழுமையாக உறையாத நிலையில் அது வேகமாகவும் நிதானமாகவும் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகின்றது.
வாழ்க்கையின் மிகவும் கசப்பான உண்மை?
உல்லாசப் பயணிகள் செல்ல விரும்பும் மிக முக்கிய உலகப் பிரசித்தமான இடங்களுள் ஒன்றான இந்த நீர்வீழ்ச்சி, புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட Buffalo இலிருந்து 40கி.மீற்றர் தொலைவில் உள்ளது.
கிறிஸ்மஸ் கொண்டாட்ட முடிவில் இங்கு வீசிய மிக மோசமான சூறாவளி 30பேருக்கு அதிகமானவர்களைச் சாகடித்ததோடு, ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகளின் மின்சார இணைப்பை துண்டித்து விட்டது.
கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.
போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது.
கேவியட் மனு என்றால் என்ன...?
சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
நியூயோர்க் மாவட்டத்திற்கும் கனடாவின் ஒன்ராறியோ பிராந்தியத்திற்கும் இடையிலான எல்லையை ஒட்டி இந்த நீர் வீழ்ச்சி காணப்படுகின்றது.
ஒரு கணிப்பின் படி ஒவ்வொரு வினாடியும் 3,160 தொன் எடையுள்ள நீர், ஒரு வினாடிக்கு 32 அடி என்ற கணக்கில் மேலிருந்து கொட்டுகின்றது.
எனவே நீர் முழுமையாக உறைதல் என்பது அசாத்தியமானதென அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
Thanks for Your Comments