ஆடு படம் போட்டு மெஸ்ஸியை பாராட்டுவதின் காரணம் !

0

உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றி காரணமான மெஸ்ஸியை அனைவரும் ஆடு படம் போட்டு பாராட்டி வருகின்றனர்.

ஆடு படம் போட்டு மெஸ்ஸியை பாராட்டுவதின் காரணம் !
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த

வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகி உள்ளது. 

ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. 

அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.

டீன் ஏஜ் பருவத்தினருக்கான பொது அறிகுறிகள்

இறுதிப் போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மெஸ்ஸி இருந்தார் என்பதும் கூடுதல் சிறப்பு.

மேலும்,உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார்.

2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி. 

சமகாலம் மட்டுமின்றி வரலாற்றில் மிகச் சிறந்தவர் என்பதை குறிக்கும் Greatest Of All Time-ன் சுருக்கமே GOAT என சமூக வலை தளங்களில் அழைக்கப் படுகிறது.

அந்த GOAT என்ற சொல் ஆங்கிலத்தில் ஆடு என பொருள்படுவதால் ஆடு படம் பயன்படுத்தி அவரை வாழ்த்துகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings