நீங்கள் அறியாத ஒரு வினோதமான உண்மை புனுகு பூனையின் மலத்திலிருந்து எடுக்கப்படும் காபி தான் உலகிலேயே விலை உயர்ந்த காபியாக கருதப்படுகின்றது.
நீங்கள் அந்த லூவா காபியைப் (kopi luwak) பற்றி அறிந்திருக்கிறீர்களா? இந்த காபி வழக்கமான முறைகளில் இருந்து மாறுபட்டு தயாரிக்கப்படுகிறது.
புனுகு பூனை, மரநாய் என இருவேறு பெயர்களில் அழைக்கப்படும் Civet Cat எனும் பூனையின் கழிவுகளில் இருந்து தான் இந்த விலை உயர்ந்த காபி தயாரிக்கப் படுகிறது.
என்ன உங்களுக்கு இந்த இந்த விஷயம் அதிர்ச்சியாக இருக்கிறதா? அது தான் உண்மை. இந்த வகை பூனைகளுக்கு காபி பீன்கள் உணவாகக் கொடுக்கப்படுகிறது.
காபி பீன்களை சாப்பிடும் இந்த வகை பூனைகள், கொட்டைகளை விழுங்கி விட்டு அவற்றின் செரிமானத்துக்கு பின்னர் இந்த காப்பிக் கொட்டைகள் கழிவுகளில் வெளியேறும்.
பின்பு அதை அவர்கள் பத்திரமாக எடுத்து சுத்தம் செய்து உலகின் காஸ்ட்லி காபியான லூவா தயாரிக்கப் படுகின்றது என்று கூறப்படுகின்றது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க !
தற்போது வெளிநாடுகளில் பிரபலமான இந்த காபி, இப்போது இந்தியாவிலும் உற்பத்தியாகத் துவங்கி இருக்கிறது.
தென்னிந்தியாவைப் பொறுத்த வரை காபி உற்பத்திக்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் மாவட்டம் பெயர் பெற்றது.
அங்கு தான் இப்போது உலகிலேயே விலை உயர்ந்த இந்த காபி உற்பத்தி துவங்கி இருக்கிறது. இந்த காபி அதிக சத்து கொண்டது, என்று சொல்லப் படுகின்றது.
புனுகு பூனையால் செறிவு செய்யப்பட்ட கழிவுகளில் இருந்து தயாரிக்கப் படுவதில் உள்ள சிரமம் உள்ளிட்டவை காரணமாக இந்த காபி அதிக விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த 4 நோய்களுக்கும் வாழைக்காய் தான் மருந்து !
வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இதன் தேவை அதிகளவில் இருக்கிறது. இந்த நாடுகளில் ஒரு கிலோ காபி 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கப் காபியின் விலை இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய்கள் என கணக்கிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments