காதல், திருமணம், திருமணங்களில் கமிட்மென்ட், பொறுப்பு, லிவின் ரிலேஷன்ஷிப் என்பதெல்லாம் நகரங்களில் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்போம்.
ஆனால் சிறு நகரங்கள் மற்றும் டவுன்கள் ஆகியவற்றில் உறவுகள் பார்க்கப்படும் கண்ணோட்டம் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கும்.
சிறு நகரங்களில் திருமணம், திருமணம் சார்ந்த பொறுப்புகள், என்பதைப் பற்றி சமீபத்தில் முதல் முதலாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அந்த ஆய்வு வெளியிட்ட முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று எல்லா வகையான திருமணங்களிலும் தம்பதிக்குள் பிரச்சனை ஏற்படும்.
ஒரு நபருடன் நீண்ட காலம் வாழ்வது என்பது வாழ்க்கையை எளிதாக்கும். மற்றொரு பக்கத்தில் ஒரே மாதிரியான வாழ்க்கை என்று சலிப்பையும் உண்டாக்குகிறது.
பல தம்பதிகள், மற்றவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ தம்பதிகள் மனமொத்து வாழ்கிறார்களோ இல்லையோ திருமணம் ஆகி விட்டது என்ற ஒரு காரணத்தினாலேயே பிரியாமல் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த சூழல் எல்லாம் தற்போது மாறி வருகிறது. திருமணத்தை பொறுத்தவரை அடிப்படையாக நம்பிக்கை மற்றும்
ஒருவருக் கொருவர் பரஸ்பர மரியாதை செலுத்துவது, கமிட்மென்ட் ஆகியவை மிக மிக அவசியம்.
ஆனால் அவையெல்லாம் இப்பொழுதும் இருக்கிறதா என்பதற்கு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தற்பொழுது எந்த அளவுக்கு சாத்தியம் என்று யோசிக்கும் அளவுக்கு உறவுகள் மாறி விட்டன.
நம்முடைய அலை வரிசையுடன் ஒத்துப் போகும் ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் ஈடுபடுவது சகஜமாகி வருகிறது.
நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் க்ளீடன் என்ற ஒரு டேட்டிங் ஆப், திருமணத்தை கடந்த உறவுகள் அதாவது எக்ஸ்ட்ரா மெரைட்டல் ரிலேஷன்ஷிப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற கண்ணோட்டம் என்பது ஒரு சமூகம் நமக்கு விதித்த கட்டுப்பாடு என்று ஆய்வில் கலந்து கொண்ட 55% நபர் கூறி இருக்கின்றனர்.
பெற்றோர்கள் பார்த்த திருமணம் மட்டுமல்லாமல், காதல் திருமணங்களும் இவ்வாறு தான் இருக்கின்றதா? எனவே, காதல் என்பது உண்மையா இல்லையா என்ற கேள்வி எழுகிறது?
பெரும்பாலானவர்கள் காதலித்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், எல்லாருக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, எப்படியாவது காதலிக்க வேண்டும்.
அந்த உணர்வைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், காதலை முழுமையாக உணர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், காதலே ஒருவர் உறவை நீடிப்பதற்கும், முறித்துக் கொள்வதற்கும் காரணமாக இருக்கிறது.
ஈர்ப்பு காதலாகி, உறவு நீடிக்குமா அல்லது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி!
இருவரில் ஒருவருக்கு உறவில் கமிட் செய்ய விருப்பமில்லை அல்லது ஒருவர் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் இது ஏற்படும்!
ஆய்வு வெளியிட்ட அறிக்கையின் படி, 63% திருமணம் செய்தவர்கள் வேறு உறவில் இருப்பதற்கு முக்கிய காரணமாக உறவில் ஈர்ப்பு இல்லாததையே காரணமாகக் கூறி இருக்கிறார்கள்.
8% பங்கேற்பாளர்கள், மற்றொரு ஆண் / பெண் மீது ஏற்பட்ட காதல் என்று கூறியிருக்கிறார்கள்.
திருடனை பிடித்த சிறுவனுக்கு மெக்கானிக் வேலை - தேவையா?
10% பங்கேற்பாளர்கள், வேறு உறவில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமாக, ஏற்கனவே உள்ள கமிட்மென்ட், தீவிரமான கருத்து வேறுபாடுகளை காரணமாகக் கூறியுள்ளனர்.
வேறொரு நபருடன் உறவில் இருப்பது கணவன் / மனைவி எப்படி பார்க்கிறார்கள்?
காலம் காலமாக கணவன் மனைவி உறவு என்று வரும்போது, மற்றவருக்கு துரோகம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் இருந்து வருகிறது.
ஆனால், அதே நேரத்தில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பார்ட்னர்களுடன் இருந்தவர்களும் இருக்கிறார்கள்.
குறிப்பாக, பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண்கள். இதனால் திருமணத்தில் இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் இருந்த, இருக்கும் சூழலும் இருக்கிறது.
ஆனால், கால மாற்றத்துக்கு ஏற்ப, இன்னொரு பார்ட்னரைத் தேடும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இது பொருந்துகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
நகரங்களில் மட்டுமல்லாமல், சிறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளிலும் திருமணத்தைத் தாண்டிய உறவு என்பது அதிகமாக இருக்கிறது என்பதை IPSOS நடத்திய ஆய்வு வெளியிட்டது.
55% இந்தியர்கள் ஒரு முறையாவது தங்களது துணைக்கு துரோகம் செய்துள்ளார்கள் என்பது செய்திருக்கிறார்கள்.
தூக்கத்தின் பலன் பற்றி தெரிந்து கொள்ள !
காலம் மாறி வருகிறது, உறவுகளும் மாறுகிறது
கால மாற்றத்துக்கு ஏற்றார் போல உறவுகளும் மாறி வருகிறது. நமக்கு என்ன தேவை, எதற்கு முன்னுரிமை அளிப்போம்,
எதை வேண்டாம் என்று தவிர்ப்போம் என்று எல்லாவற்றிலும் ஏற்படும் மாற்றங்கள் உறவில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
தம்பதிகளுக் குள்ளேயும் எது வேண்டும். வேண்டாம் என்பதைக் கடந்து, பிசியான வாழ்க்கை, நேரமின்மை மிகவும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
தினமும் சுடுநீர் குடிப்பது கிடைக்கும் நன்மைகள் !
இது போன்ற சூழலில், தனக்கு தேவைப்படும் அன்பும், காதலும், ஆதரவும் ஒரு புதிய நபரிடம் இருந்து கிடைக்கும் போது, அவரை சார்ந்து இருப்பது இயல்பாகிறது.
Thanks for Your Comments