தலைமுடியை எமது தேவைக்கேற் முறையில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். பராமரித்து, நிறங்களை இட்டு என தமக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
ஏதாவது பிரச்சினை வந்தால் தலைமுடியை பிய்த்து எறியும் அளவுக்கு கோபம் வரும் நபர்களும் உள்ளனர். எதுவாயினும் எவருக்கும் தலை முடியின்றி இருப்பதை விரும்புவதில்லை.
அதற்கென்று செம்மறி ஆடு போல அடர்த்தியான முடியை எதிர் பார்க்கா விட்டாலும் குறைந்த பட்சம் சொட்டை விழாதவாறு பாதுகாக்க விரும்புவார்கள்.
அப்படி திடீரென சொட்டை விழத்தொடங்கி விட்டால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியாமல் இருக்கும். அதனால் காரணத்தை அறிந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கோதுமையில் உள்ள சத்துக்கள் !
குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடி தான் தலையாய பிரச்சினை.
தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம் காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்து விட்டது.
முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்து விடுகிறது.
நரை முடியை பிடிங்குதல்
நரைத்த அல்லது நிறம் மாறிய முடிக்கு அதிகமானோர் ஹெயார் கலரிங் (HAIR DYE) அடித்துக் கொள்வார்கள். ஆனால் சிலர் அந்த நரைத்த முடிகளை பிடுங்கி விடுவார்கள்.
பொதுவாக நரை முடியை அகற்றினால் அது தொடர்ந்து வரத்தான் செய்யும். வரவர பிடுங்கினால் தலையில் வழுக்கை விழாமல் என்ன நடக்கும்?
ஆகவே முடியின் நிறத்தை மாற்ற விரும்பினால் ஏதாவது தரமான கலரிங் அல்லது மருதாணி பூசிக்கொள்ளுங்கள்.
உண்மையை சொல்லப் போனால் அனைவரும் தத்தம் முடிகளை விரும்பிய டிசைனில் வெட்டிக் கொள்வதுண்டு. கிழமைக்கு இரண்டு தடவைகள் முடி வெட்டுவோரும் இருக்கத் தான் செய்கின்றனர்.
இவ்வாறு அடிக்கடி வெட்டுவதால் முடி சரியாக வளராமல் தடைப்படுகின்றது. அப்படி அடிக்கடி முடி வெட்டிக் கொள்வது முடிக்கு நல்லதல்ல.
புகைத்தல்
புகைப்பிடிப்பது உடலுக்கு நல்லதென எங்காவது கேள்விப் பட்டிருப்பீர்களா? அப்படிப்பட்ட புகைப்பழக்கம் தலையிலுள்ள முடியையும் விட்டு வைப்பதில்லை.
குறிப்பாக சிகரெட்டில் உள்ள நிகோடின் என்ற நச்சுப்பதார்த்தம் தலையில் முடிவளரும் ஹோர்மோனை தூங்க வைக்கிறது.
ஆனால் தூங்கிய ஹோர்மோன்கள் எழும்புவதற்கு வழமையை விட அதிக காலதாமதம் எடுத்துக் கொள்கிறது. காலதாமதம் ஏற்பட்டால் கொட்டிய முடி திரும்பி வளர்வதற்கும் தாமதமாகலாம்.
அதிகமான சந்தர்ப்பங்களில் அந்த இடத்தில் முடிவளராமலும் போகலாம். சில தொடர்ந்து புகைப்பவர்களாக இருந்தால் முடி மிகவும் மெலிதாகவும் இடையிடையே முடி குறைந்தும் இருக்கும்.
சூரிய வெளிச்சத்தின் சக்தி
சாதாரணமாக அனைவரும் மழை பெய்யும் போது குடை எடுத்து போவார்கள். ஆனால் வெயில் அடிக்கும் போது குடை கொண்டு போவதில்லை. வேண்டுமென்றால் கையால் முகத்தை மட்டும் மறைத்துக் கொள்வார்கள்.
ஏனென்றால் வெயிலினால் முகம் கருமையாகுமே! சருமம் கருமையடைவது போலவே முடிக்கூட தனது பொழிவினையும் வலிமையையும் இழக்கிறது.
அதாவது அதிகப்படியான வெயிலால் முடியின் வலிமை சுடுபடுவதால் அதன் போஷாக்குகளும் விரைவில் இழந்து விடுகின்றன.
வழுக்கையை புறக்கணித்தால் என்ன நடக்கும்?
உண்மையில் முடி உதிர்வதென்பது அவ்வளவு பெரிய விடயமல்ல. முடி உதிர்வதை கவனித்தால் அதற்கு தகுந்த மருந்துகளை அல்லது முறைகளை செய்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
ஆனால் அதனையே புறக்கணித்து தவிர்த்து வந்தால் சொட்டை விழுவது நிச்சயம். அதிகமானோருக்கு திடீரென வழுக்கை விழுவதற்கு இதுவும் காரணம்.
முறையான சீப்பு
முடியும் நமது உடம்பில் உள்ள ஒரு அங்கம் தான். அதையும் சரிவர கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கென்று பெரிய பெரிய கடுமையான முறைகளைப் பயன்படுத்தி கவனிக்க வேண்டிய அவசியமில்லை.
மிகவும் நெருக்கமாக அதிகமாக பற்கள் கொண்ட சீப்பு, பிரஷ் போன்றவற்றைப் பயன்படுத்துவது உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும். இது உங்கள் முடியை மெல்லியதாக ஆக்குகின்றது.
மன அழுத்தமும் காரணம்
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் கூட தலைமுடியை விரைவாக இழந்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க இப்போதெல்லாம் யோகா பயிற்சிகள், மன சிகிச்சை, தியானம் மற்றும் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
மன அழுத்தம் அதிகரிப்பதால் பிற்காலங்களில் உமது உடலுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதே போல தலையின் முடியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Thanks for Your Comments