உங்கள் வாகனத்தின் பின் சக்கரத்தை நிறுத்தும் கால் பிரேக் அழுத்தமும், உங்கள் வாகனத்தின் முன் சக்கரத்தின் பிரேக்கை பிடிக்கும் கை விரல் அழுத்தமும் ஒரே அளவாக, அதாவது இணையாக இருக்க வேண்டும்.
பின்பக்க சக்கரத்தின் பிரேக்கை விட முன் பக்க பிரேக்கிங் அழுத்தம் அதிகமாக இருந்தால் வாகனம் தடுமாற வாய்ப்புண்டு. வெறுமனே முன் சக்கர பிரேக் மட்டுமே பிடித்தாலும் கூட.
வாகனத்தை தற்காலிமாக ஒரு ஏற்றம், அல்லது இறக்கத்தில் நாம் இரு கால்களையும் ஊன்றும் சமயம் அதாவது ஒரு காலினால் பிரேக் பிடிக்க முடியாத சூழ்நிலையில் முன் சக்கர பிரேக் பிடிக்கலாம்.
7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைக்க எளிய வழி !
ஸ்கூட்டர் மாடல் வாகனங்களுக்கு சமீபத்து மாடல்களில் இந்த குழப்பம் இருக்கக் கூடாது என்பதற்காக இடது பக்க பிரேக் லீவரை
பிடித்தாலே முன் பக்க பிரேக்கும், பின் சக்கரத்து பிரேக்கும் ஒரு சேர பிடிக்குமாறு வடிவமைத்து உள்ளார்கள்.
அதனை காம்பி பிரேக் (COMBI BRAKE) என்றழைக்கின்றார்கள். இவ்வாறு பிடிப்பது பாதுகாப்பு மட்டுமல்லாது, இரு சக்கர பிரேக்குகளும் ஒரு சேர தேய்மானம் அடையும்.
இதில் இரண்டு கேபிள் வயர்கள் இருப்பதை கவனியுங்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் ஒட்டு முடி வைத்தல் சரியா?
இடது கையிலிருக்கும் பிரேக் லீவரை அழுத்தினாலே இரண்டு சக்கர பிரேக்குகளும் ஒரு சேர வேலை செய்து வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தும்.
Thanks for Your Comments