நேஷனல் ஹைஃபீல்ட் லேபைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் அதி வலிமையான காந்தத்தை உருவாக்கி யுள்ளனர்.
32 டெஸ்லா வலிமை கொண்ட இக்காந்தம், முந்தைய காந்தத்தை விட 3 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது.
காந்தத்தின் தொழில் நுட்பத்தில் இது முக்கியமான முன்னேற்றம் என உற்சாகமாகிறார் மேக்லேப் இயக்குநர் கிரேக் போபிங்கர்.
இந்த காந்தங்களால் எக்ஸ்ரே உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவி கள் இன்னும் மேம்பட வாய்ப்புள்ளது.
இவ்வாண்டு மேக்லேப் உருவாக்கிய ரெசிஸ்டிவ் காந்தம், 41.4 டெஸ்லா சக்தி கொண்டது. இதன் மீது பாய்ச்சப்பட்ட 32 மெகாவாட் மின்சாரத்தின் ஆற்றலை விரைவில் இழந்து விடும் தன்மை கொண்டிருந்தது.
1911 ஆம் ஆண்டு குறைந்த வெப்ப நிலையில் செயல்படும் (-253 டிகிரி செல்சியஸ்) காந்தம் கண்டுபிடிக்கப் பட்டது.
மின்கடத்தும் தன்மை அதிகம் கொண்ட காந்தங்கள் எம் ஆர் ஐ ஸ்கேன்களில் பெரிதும் உதவின. இதன் வெப்ப நிலைக்கு ஹீலியம் தேவை.
குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள் !
தற்போது அதிக வலிமையான காந்த சக்தி கொண்ட காந்தத்தை வேதியியல், இயற்பியல், உயிரியல் துறைகளில் பயன்படுத்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.
Thanks for Your Comments