நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப் படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப் படுகிறது.
துருக்கியில் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் கடந்து உள்ளது. இது அதிகார பூர்வமான பலி எண்ணிக்கை மட்டும் தான்.
உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 30 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சிரியாவில் 5700 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக காயம் அடைந்து உள்ளனர்.
துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன் மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும்.
துருக்கி நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்து உள்ளன.
100 கிமீ தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டு உள்ளது.
பூமியின் நிலநடுக்கங்கள் ஒன்றாக இல்லாமல் திடீரென நகர்ந்து செல்வது தான் நிலநடுக்கம்.
பூமி அடுக்குகளில் திடீர் நகர்தல் தான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த துருக்கி நிலநடுக்கத்தில் அரேபியன் பிளேட் அன்டோலியன் பிளேட் மீது நகர்ந்து உள்ளது.
அடுத்தடுத்து மூன்று முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதோடு ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்களும் நகரும் சூழ்நிலை ஏற்படும்.
இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும். இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் இருக்கும். இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள்.
துருக்கி நிலநடுக்கத்தில் இப்படித் தான் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இத்தாலி நிலநடுக்க ஆய்வாளர், புவியியல் வல்லுனர் கார்லோ டோஃலோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியின் நில அடுக்குகள் 10 மீட்டர் வரை நகர்ந்து உள்ளன.
துருக்கி மொத்தமாக இதனால் 10 மீட்டர் அல்லது அதற்கும் மேல் நகர்ந்து இருக்கலாம். சிரியா இதைவிட கொஞ்சம் குறைவாக நகர்ந்து இருக்கலாம்.
ஆனால் இது முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில் தான் சொல்லப் படுகிறது. முழுமையான விவரங்கள் கிடைத்த பின் துருக்கி எவ்வளவு தூரம் நகர்ந்தது என்று சொல்ல முடியும் என்று கூறப்பட்டு உள்ளது.
மொத்தம் 190 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் நிலம் அப்படியே பெயர்ந்து, வெடித்து உள்ளது.
இதனால் மொத்த துருக்கியும் மொத்தமாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் வெளியே தெரிந்த நிலநடுக்கத்தை விட தெரியாத நிலநடுக்கங்கள் 5-6 சிறிய அளவில் இடை இடையே ஏற்பட்டு உள்ளன.
இதனால் துருக்கி தற்போது இருக்கும் இடத்தில் இருந்து லேசாக தென் மேற்கு திசையில் நகர்ந்து உள்ளது, என்று அந்த ஆய்வாளர் குறிப்பிட்டு உள்ளார்.
Thanks for Your Comments