20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கம் கொண்ட பெண் !

0
அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார் அமெரிக்க பெண். உணவு விசயத்தில் நம்மில் பலருக்கும் சில வினோத பழக்கங்கள் இருக்கும். 
20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கம் கொண்ட பெண் !
சிலேட் குச்சி, விபூதி போன்றவற்றை விரும்பி சாப்பிடுபவர்கள் உண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார். 
சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி?
அதுவும் இன்று, நேற்று அல்ல கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த விசித்திர பழக்கத்துக்கு அவர் அடிமையாகி உள்ளாராம். 

25 வயதான ஜெனிபர் என்கிற அந்த பெண் பிரபல அமெரிக்க டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் என் விசித்திரமான போதை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பின்னரே அவரின் இந்த வினோத பழக்கம் வெளியுலகத்துக்கு வந்திருக்கிறது.
 
தனது 5 வயதில் இருந்தே மெத்தையை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பதாகவும், முதன் முதலில் கார் சீட்டில் இருந்த பஞ்சுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்ததாகவும் ஜெனிபர் கூறுகிறார்.
 
நாட்கள் செல்ல செல்ல பழக்கம் மோசமானதே தவிர, அதனை விட்டொழிக்க முடியவில்லை என்றும், தற்போது ஒரு நாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு அதற்கு அடிமையாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருசமயம் தனது மெத்தை முழுவதையும் சாப்பிட்டு முடித்த பின்னர் தனது தாயாரின் மெத்தையையும் சாப்பிட்டு முடித்தாரம் ஜெனிபர்.
 
எனினும் அதிர்ஷ்டவசமாக ஜெனிபரின் இந்த பழக்கமானது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்த வித உடல்நல பாதிப்புகளையும் இதுவரை ஏற்படுத்த வில்லை என்று கூறப்படுகிறது.
மலச்சிக்கல் தீர கவனிக்க வேண்டிய விஷயங்கள் ! 
அதே சமயம், ஜெனிபருக்கு உடல் பருமன் அதிகரித்து இருப்பதால், மெத்தையை சாப்பிடுவதை நிறுத்தா விட்டால், எதிர்பாராத உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings