ராப் ஸ்டைல் உடற்பயிற்சி... ஐஸ்வர்யா பதிவு வைரல் !

0
நடிகர் ரஜினிகாந்த் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டா பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. 
ராப் ஸ்டைல் உடற்பயிற்சி... ஐஸ்வர்யா பதிவு வைரல் !
3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கிய பின்னர் சிறிது காலம் திரைப்படங்கள் ஏதும் இயக்காமல் இருந்தார். 

பல வருடங்கள் கழித்து சமீபத்தில் இவர் இயக்கிய பாடல் காணொளியான ‘பயணி’ இணைய தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
தினமும் 3 கப் டீ குடிச்சா.. இடுப்பளவை குறைக்கலாம் !
இதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகின. அவர் கைவசம் பல கதையும் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் இதுவரை எதுவும் வெளியாகாமல் இருந்தது. 

இதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் திடீரென வெளிவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 
அதன்படி, லால் சலாம் என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 
இப்படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

மேலும், இப்படம் ஏ. ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வருகிறது. ஐஸ்ர்யா ரஜினிகாந்த் இப்படத்தின் பணிகள் தொடர்பாக பிஸியாக உள்ளார்.
 
இதற்கிடையில் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். 
இயக்குநரும் நடிகரும் நடன அமைப்பாளருமான பிரபுதேவா உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அந்தப் பதிவில், ரப்பர் மேன் பிரபுதேவா அண்ணாவுடன் சில ராப் ஸ்டைல் உடற்பயிற்சி என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings