இந்த எத்தனால் (எத்தில் ஆல்கஹால்) வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே உற்பத்தி செய்யப் படுகிறது. இவை பழச்சாறுகளை நொதிக்க வைத்து அதன் மூலம் தயாரிக்கப் படுகிறது.
எத்தனால் தானிய ஆல்கஹால் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பெரும்பாலும் சோளம் (மக்காச்சோளம்), கோதுமை, கம்பு மற்றும் பார்லி போன்ற தானியங்களில் இருந்தே தயாரிக்கப் படுகிறது.
தானியமானது முதலில் தண்ணீரில் கொதிக்க வைக்கப்படுகிறது. இது வோர்ட்டாக மாற்றப்பட முளைத்த பார்லியுடன் சேர்த்து அடைக்கப் படுகிறது.
பார்லியானது டயஸ்டேஸ் (diastase) எனும் நொதியை உற்பத்தி செய்கிறது. இது தானியத்தில் உள்ள மாவுச்சத்தை மால்டோஸ் எனும் சர்க்கரையாக மாற்றுகிறது.
வோர்ட்டானது, மதுபானத்திலிருந்து பெறப்பட்ட ஈஸ்டுடன் அடைக்கப் படுகிறது.
இந்த வோர்ட் (wort) என்பது, சர்க்கரைக்கூறுகள் (மால்டோஸ் மற்றும் மால்டோட்ரியோஸ்) அடங்கிய சாறாகும்.
இது மால்டோஸை குளுக்கோஸாக மாற்ற மால்டேஸ் என்ற நொதியையும், குளுக்கோஸை எத்தனாலாக மாற்ற சைமேஸ் என்ற நொதியையும் சுரக்கிறது.
குளுக்கோஸில் உள்ள ஆறு கார்பன் அணுக்களில் இரண்டு கார்பன் டை ஆக்சைடு ( CO2)
ஆக்சிஜனேற்றம் செய்யப் படுகிறது. இந்த ஆக்சிஜனேற்றம் ஈஸ்ட் செல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது.
நொதித்தல் மூலம் எத்தனால் தயாரிக்கும் முறையானது மிகவும் விலை உயர்ந்த முறையாகும்.
தொழில்துறையில் எத்தனாலானது, எத்திலினுடன் ( C2H4) நீரை அதிக அழுத்தம் மற்றும் 300°C வெப்பநிலையில் வினையூக்கமாக சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப் படுகிறது.
அழகு சாதனப் பொருட்களில் எத்தனால் ஒரு பொதுவான மூலப்பொருளாகப் பயன்படுகிறது.
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகளைக் கொல்லும் திறன் கொண்டதால் இது பல, கை சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப் படுகிறது.
எத்தனால் நீர் மற்றும் பல கரிமச் சேர்மங்களுடன் எளிதில் கலக்கிறது.
மேலும் வண்ணப் பூச்சுகள், அரக்கு, வார்னிஷ், அத்துடன் வீட்டைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் பொருட்களில் தயாரிப்புகளில் ஒரு சிறந்த கரைப்பானாக பயன்படுத்தப் படுகிறது.
எத்தனால் மற்ற இரசாயனங்கள், மருந்துகள், வாசனைத் திரவியங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப் படுகிறது.
எத்தனால் ஒரு சிறந்த மோட்டார் எரிபொருளாகும். டீசலுக்கு மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்த முடியாது. ஆனால் பெட்ரோலுக்குப் பதிலாக எத்தனாலைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டலாம்.
அமெரிக்க பெட்ரோலில் அதிகமாக எத்தனால் உள்ளது. பொதுவாக E10 எனப்படும் கலவை, 10 சதவிகிதம் எத்தனால் மற்றும் 90 சதவிகித பெட்ரோல் ஆகியவற்றால் ஆனது.
எரிபொருளை ஆக்ஸிஜனேற்றுவதற்கும், காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் சிறந்த தீர்வாகும்.
Thanks for Your Comments