கோய் மீன்கள் வெளிப்புறக் குளங்கள் அல்லது நீர்த் தோட்டங்களில் அழகு மீன்களாக வளர்க்கப் படுகின்றன. கோய் மீன் முதலில், சாதாரணக் கெண்டை வகைகளில் முறைசாரா பிரிவாகக் கருதப்பட்டது.
நிறம், வடிவம் மற்றும் செதிலமைப்பை வைத்துக் கோய் மீன்கள் பிரிக்கப் படுகின்றன. இவை, வெள்ளை, கறுப்பு, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் கிரீம் நிறத்தில் உள்ளன.
இவற்றில் பிரபலமானது கோசாகே வகையாகும், இது கோஹாகு, தைஷோசன் ஷோகோ மற்றும் ஷாசாசன் ஷோகுவில் இருந்து உருவாக்கப்பட்டது.
ஜப்பானிய மொழியில் கோய் என்றால் பாசம் அல்லது அன்பு என்று பொருள். எனவே, ஜப்பானில் காதல் மற்றும் நட்பின் அடையாளம் கோய் ஆகும்.
மீன் வளர்ப்பது என்ன ஸ்பெசல்? நானும் தன மீன் தொட்டி வெச்சிருக்கேன்னு சொல்லக் கூடாது.
ஜப்பான் கோய் மீன் வளர்ப்பு எல்லாம் 2கே கிட்ஸ் பாஷையில் சொல்லணும்னா வேற லெவல்
கொய் மீனின் நிறம் சிகப்பும், வெள்ளையும். ஜப்பானின் கொடி நிறமும் அது தான் என்பதால் கோய் வளர்ப்பு நாட்டுபற்று மிகுந்த விசயமாக ஆகி விட்டது.
அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், வீடுகளில் எல்லாம் ரொம்ப சிரத்தை எடுத்து வளர்ப்பார்கள்.
அதுவும் சரியான நிறம், சரியான டிசைனில் அதன் முதுகில் இருக்கும் கோடுகள் இருக்கணும்னு சொல்லி தனியாக மீன் பண்ணைகள் அமைத்து வளர்ப்பார்கள்.
கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !
மிகுந்த தரமான கோய் மீன்கள் 15 கோடி ரூபாய் வரை ஏலம் போகும்.
நாய் வளர்ப்பு போட்டி மாதிரி கோய் மீன் வளர்ப்பு போட்டிகள் எல்லாம் நடக்கும். அதில் ஜெயிக்கும் மீன்கள் ஏலத்தில் கூடுதல் விலைக்கு எடுக்கபடும்.
அப்படி போட்டியில் ஜெயித்த மீன்களின் வம்சாவளி மீன்களும் நல்ல விலைக்கு போகும். இம்மாதிரி சூப்பர்ஸ்டார் மீன்களின் தாத்தா, கொள்ளூதாத்தா வரலாறு எல்லாம் பதிவேடுகளில் இருக்கும்.
ஒரு மீனுக்கு இத்தனை அலப்பறையா?
அதான் ஜப்பான்
Thanks for Your Comments