கோவை மாவட்டம், சூலூர், கண்ணம் பாளையம் பகுதியில் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு உணவு உட்கொள்ள வந்த மாணவர்கள் அசைவ உணவு அதிகமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, பணியிலிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மறுத்திருக்கின்றனர்.
டச்ஸ்கிரீன்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா? வராதா?இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியிருக்கிறது.
இரு தரப்பினரும் விறகுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு மாறி மாறித் தாக்கி யிருக்கின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீஸார், அவர்களைச் சமாதானம் செய்தனர். கல்லூரி நிர்வாகமும் இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். மாணவிகள் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஏற்கெனவே திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்களைத் தாக்கும் வீடியோ வைரலான நிலையில், தற்போது இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Thanks for Your Comments