நிலவின் மண்ணும் பாறைகளும் முழுக்க எரிமலை வெடித்ததால் உருவானவை. பூமியில் ஏராளமான நீரும், மழையும் சேர்ந்து அதன் தன்மையை மாற்றி விட்டது.
ஆனால் நிலவில் அப்படி எதுவுமில்லை. தவிர பலகோடி ஆண்டுகளாக நிலவின் மேற்பரப்பு சூரிய கதிர் வீச்சால் தாக்கபட்டு கொண்டிருக்கிறது. நிலவின் தூசியில் 43% ஆக்ஸிஜன், 20% சிலிகான். கண்ணாடி செய்ய பயன்படும் மணல்.
கதிர்வீச்சால் கண்ணாடி தொடர் தாக்குதலுக்கு உள்ளாகையில் என்னவாகும்? சூடாகி உடைந்து பொடியாக அரைக்கபடும். ரேடியேஷன் பாதிப்புக்கு உள்ளாகி சார்ஜ் ஆகி இருக்கும்.
அதன்மேல் வாகனம் இறங்கையில், அஸ்ட்ர நாட்டுகள் நடக்கையில் ஏராளாமான தூசி மேலே எழும்பும். விண்வெளி உடையில் இருக்கும் சிறு,சிறு ஓட்டைகள் வழியே உள்ளே நுழையும்.
எலெக்ட்ரானிக்ஸ் பாகங்களை பழுதடைய வைக்கும். அஸ்ட்ர நாட்டுகளின் நுரையிரலில், கண், மூக்கில் எல்லாம் நுழைந்து விடும். ஆர்ம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் 21 மணிநேரம் நிலவில் தங்கினார்கள்.
அதில் ஏழுமணிநேர உறக்கமும் அடக்கம். நிலவில் நீண்டநாள் மனிதன் தங்கியது 3 நாட்கள் தான். ஆனால் அப்போது மூச்சுவிட மிக சிரமபட்டார்கள்.
நிலவின் தூசி மனிதனின் கண்ணுக்கே தென்படாத அளவு சிறியது. மிக, மிக சிறிய மைக்ரோ ஓட்டைகளுக் குள்ளும் புகுந்து விடும் திறன் படைத்தது. பூமிக்கு திரும்பி பலர் மூச்சுகுழாய் வியாதிகளில் அவதிப்பட்டார்கள்.
மீண்டும் நிலவுக்கு போனால் ஒரு வாரத்துக்கு மேல் தங்குவதும், மாதக்கணக்கில் தங்குவதும் மிகப்பெரிய ரிஸ்க் என்கிறது நாசா. மூன்று நாள் பயணத்துக்கு போய் என்ன பயன்?
கண்ணில் தூசி ஏறிவிட்டால் மருத்துவ சிகிச்சைக்கு என்ன செய்வது? தவிர கொன்டு போகும் எலெக்ட்ரானிக் கருவிகள் பழுதானால் என்ன செய்ய?அதனால் மிக ஸ்பெஷல் ஆன விண்வெளி உடைகளை தயாரிக்காமல் போக முடியாது.
நிலவின் மண்ணை வைத்து செங்கற்களை தயாரித்து வீடுகளை கட்டினால் பிரச்சனை இல்லை எனவும் ஒரு முறை அப்படி வீடு, ஷெட் மாதிரி கட்டி விட்டால் அங்கேயே மாதக்கணக்கில் தங்கி ஆராய்ச்சி செய்யலாம் எனவும் ஒரு ஆலோசனை உள்ளது.
ஆனால் ஏ.ஐ ரோபாடிக்ஸ் எல்லாம் இத்தனை முன்னேறியபின் மனிதன் இனி எங்கும் போகும் அவசியம் இல்லை. எல்லா ஆராய்ச்சிகளையும் ரோபாட்களை வைத்தே செய்யலாம்.
அவற்றுக்கு விண்வெளி உடை அவசியம் இல்லை. தூசியால் எலெக்ட்ரானிக்ஸ் பாதிப்படையாமல் வடிவமைத்தால் போதும். வீட்டை கூட அதுவே கட்டிக் கொள்ளும்.
Thanks for Your Comments