டைட்டன் நிறுவனம் தமிழக அரசு தொடங்கியதா?

0
இன்று உலகம் முழுவதும் பல நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் முக்கியமான கைக்கடிகார நிறுவனங்களில் ஒன்று டைட்டன்.
டைட்டன் நிறுவனம் தமிழக அரசு தொடங்கியதா?
டாடா நிறுவனத்தின் தயாரிப்பான டைட்டன் கைக்கடிகாரங்கள் உருவாவதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என்பது தெரியுமா?
 
சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் கைக்கடிகாரங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் ஒரு சில கைக்கடிகார நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் கைக்கடிகாரங்கள் தயாரித்து வந்தன. 

பல நிறுவனங்கள் கைக்கடிகார தயாரிப்புக்கு அரசிடம் அனுமதி கேட்டாலும் கிடைப்பதில் சிரமம் இருந்தது.

நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளது? 

அந்த சமயத்தில் டாடா நிறுவனம் கைக்கடிகார தயாரிப்பில் ஈடுபட விரும்பியது. அதற்கான முயற்சியில் ஜெர்ஜெஸ் தேசாய் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 

கைக்கடிகார தொழில்நுட்பத்தை வைத்திருந்த பெரிய உலக நிறுவனங்களிடம் அவர் இந்தியாவில் புதிய கைக்கடிகார நிறுவனம் தொடங்க பேசி வந்தார். ஆனால் எதுவும் சாத்தியமாக வில்லை.
 
அப்போது தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி கழகம் கைக்கடிகார தயாரிப்பிற்காக பிரான்ஸை சேர்ந்த கடிகார நிறுவனத்திடம் பேசியிருந்தது. 
டைட்டன் நிறுவனம் தமிழக அரசு தொடங்கியதா?
தமிழ்நாட்டில் கைக்கடிகார தயாரிப்பை மேற்கொள்ள கூட்டாளி நிறுவனம் ஒன்று தேவைப்பட்ட நிலையில் டாடா நிறுவனம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.
 
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமான டிட்கோவும், டாடாவும் இணைந்து டைட்டன் என்ற புதிய பெயரில் கைக்கடிகார தயாரிப்புக்கு விண்ணப்பித்து அனுமதியும் பெற்றனர். 
ஓசூரில் 1986ல் அமைக்கப்பட்ட தொழிற்சாலை மூலமாக சில மாதங்களில் லட்சக் கணக்கான கைக் கடிகாரங்களை விற்று டைட்டன் சாதனை படைத்தது.
 
பின்னர் 1989ல் உத்தரகாண்டின் டெராடூனில் புதிய தொழிற்சாலை தொடங்கப் பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் கைக்கடிகார கேஸ் தயாரிக்கப் படுகிறது.
 
தற்போது டைட்டன் நிறுவனம் கைக் கடிகாரங்கள் மட்டுமல்லாமல் வேறு பல பொருட்களையும் தயாரித்து மிகப்பெரும் நிறுவனமாக உள்ளது. அதன் பிரதான பங்குதாரர்களின் ஒருவராக இன்றும் டிட்கோ உள்ளது.
 
டைட்டன் பெயர் எப்படி வந்தது?
டைட்டன் நிறுவனம் தமிழக அரசு தொடங்கியதா?
டைட்டன் நிறுவனம் தொடங்கப் படுவதற்கு முன் அந்த நிறுவனத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு விவாதமே நடந்தது. காரணம், 

டாடா தொடங்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் அந்த நிறுவனத்தின் பெயர் ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கும்.
 
அந்த வகையில் பலரும் கூடி விவாதித்தார்கள். கடைசியில், `TATA Industries (TI), Tamilnadu (TAN)’ என்கிற இரண்டு வார்த்தைகளில் இருக்கும் சில எழுத்துகளை எடுத்து டைட்டன் என்கிற பெயரை உருவாக்கினார்கள். 

கொரோனாவை எதிர்க்கும் ஆண்டிபாடி.. சூப்பர் ஹியூமன் இம்யூனிட்டி !

இந்தப் பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிப்பதாக இருந்தது. கிரேக்கப் புராணங்களில் டைட்டன் பலத்துக்கும் உறுதிக்குமான கடவுள். 

டைட்டனின் தயாரிப்புகளும் பலமாகவும் உறுதியாகவும் இருக்கும் என்கிற அர்த்தம் தரும் என்பதற்காக இந்தப் பெயரை வைத்தார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings