ரயில்களில் பிரேக் ஃபெயிலியர் நடந்தால் என்ன நடக்கும்? ரயில்கள் எப்படி நிறுத்தப்படும்? பிரேக் ஃபெயிலியர் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இது குறித்த தெளிவான முழுமையான விபரங்களைக் காணலாம் வாருங்கள். நாம் எல்லோரும் பயணம் என்ற விஷயத்தைப் பற்றி யோசிக்கும் போது எல்லாம் விபத்து ஏற்படுமே என்ற பயம் நமக்கு இருக்கும்.
குறிப்பாகச் சாலை வழிப் பயணத்தில்தான் அதிகமாக விபத்துக்கள் நடக்கிறது. ஆனால் ரயில் மற்றும் விமான பயணங்களில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பார்த்தால் மிகவும் அதிகமாக இருக்கிறது.
இதனால் ரயில் மற்றும் விமான பயணங்களில் பாதுகாப்பான பயணம் என்பது மிகவும் முக்கியம். சிறு தவறு கூட பல ஆயிரம் உயிர்களைக் காவு வாங்கி விடும்.
சாலை விபத்துக்களும் பல நேரங்களில் முக்கிய காரணம் கவனக் குறைவாக இருந்தாலும் வாகன பராமரிப்பும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
பலர் தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதால் திடீரென பிரேக் பிடிக்காமல் போவது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது. இதனாலும் அதிகமாக விபத்துக்கள் நடக்கிறது.
இப்படியாக ரயில்களில் பிரேக் பிடிக்காமல் போனால் என்ன நடக்கும் என என்றாவது ஒருநாள் யோசித்துள்ளீர்கள்? அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி நடந்தால் என்ன ஆகும்? ரயிலை பிரேக் இல்லாமல் எப்படி நிறுத்துவார்கள்?
இது பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரயிலில் பிரேக்கிங் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரயில்களில் ஏர் பிரஷர் பிரேக்கிங் சிஸ்டம் தான் அமைக்கப் பட்டுள்ளது. இன்ஜினில் பிரேக் பிடித்தால் அது ஏர் பிரஷர் மூலம் எல்லா பெட்டிகளிலும் பிரேக் பிடிக்கும்படி இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதற்காக இரண்டு கம்பிரஷர்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கம்பிரஷரின் பிரஷர் 4 ரிசர்வர்களில் சேமிக்கப் படுகிறது.
இதில் 8.5 கிலோ முதல் 10.5 கிலோ வரையிலான பிரஷர் மெயிடெயின் செய்யப்படும். இந்த பிரஷர் பிரேக் பைப் மூலம் ரயில் முழுவதும் இணைக்கப் பட்டிருக்கும்.
இந்த பிரேக் பைப்பில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 5 கிலோ வரை பராமரிக்கப்படும். பிரேக் பிடிக்கும் போது பிரேக் பைப்பில் உள்ள பிரஷர் ரிலீஸ் செய்யப்பட்டு அதன் காரணமாக பிரேக் பிடிக்கும்.
இந்த பிரஷரை கம்பிரஷர் ரயில் இன்ஜினிலிருந்தே உருவாக்கிக் கொள்ளும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது பிரஷர் ரிலீஸ்.
ஆனால் தான் பிரேக் பிடிக்கும் பிரஷர் இருந்தால் பிரேக் பிடிக்காது. என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேலை பிரஷர் ரிலீஸ் ஆகியும் பிரேக் பிடிக்கவில்லை என்றால் அது மெக்கானிக்கல் அசெம்பிளில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.
இது முழு ரயிலுக்கும் இப்படியாக நடக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு தான். ஒரிரு வீல்களில் ஏற்படலாம். ஆனால் அதனால் பிரேக் பிடிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
ஒரு ரயில் தயாரிக்கப்படும் போதே எம்வி5 என்ற பிரேக்கிங் சான்று ஒவ்வொரு ரயிலுக்கும் வழங்கப் படுகிறது.
அதன்படி ரயிலில் உளு்ள ஒவ்வொரு பிரேக்களும் சோதனை செய்யப்பட்டுச் சரியாக வேலை செய்கிறது என்பதைச் சோதித்தே இந்த சான்று வழங்கப் படுகிறது.
அதனால் மெக்கானிக்கல் ஃபெயிலியர் பிரேக்களில் வருவது அரிது தான்.
அதே போல ஒவ்வொரு லோகோ பைலட்களுக்கும் கார்டுகளுக்கும் ஒரு ரயிலில் பொறுப்பாக ஏறிய பிறகு என்னென்ன விஷயங்களை எல்லாம் சோதனை செய்ய வேண்டும் என்ற பட்டியல் இருக்கிறது.
அதன்படி ரயிலை ஸ்டார்ட் செய்யும் முன்பு முதலில் லோகோ பைலட் பிரஷரை ரிலீஸ் செய்து பிரேக் பிடிப்பதை செக் செய்வார். இதை ரயிலின் பின்னால் இருக்கும் கார்டு உறுதி செய்வார்கள்.
பின்னர் பிரஷர் ஏற்றப்படும். அதன் பின்னர் கார்டு பிரஷரை அவர் சைடிலிருந்து ரிலீஸ் செய்வார். இதை லோகோ பைலட் உறுதி செய்வார். இதன் பின்பே ரயில் கிளம்பும்.
இது மட்டுமல்ல ரயில் கிளம்பு முன்பு ரயிலின் கார்டு அவர் பக்கத்திலிருந்து 10 பெட்டிகள் வரை அனைத்து வீலிலும் பிரேக் சரியாகப் பிடிக்கிறதா என பிசிக்கலாக சென்று சோதனை செய்வார்.
இது மட்டுமல்ல ரயில் கிளம்பி பயணிகளை ஏற்றுவதற்காக பிளாட்பாரத்திற்கு எடுத்து வரும் போது ரயில் குறைவான வேகத்தில் வரும் போது லோகோ பைலட் பிரேக் பிடித்து மீண்டும் ஒரு முறை ரயிலின் பிரேக்கிங் சிஸ்டத்தை சோதனை செய்வார்.
இதனால் ரயிலில் பிரேக்கிங் சிஸ்டம் என்பது ஃபெயிலர் ஆவது என்பது நடக்காத ஒன்று தான்.
ஒரு வேளை அப்படியே ஃபெயிலியர் ஆனாலும் அதற்குக் காரணம் பிரேக் பிடிக்காமல் இருப்பதாகத் தான் இருக்குமே தவிர மெக்கனிக்கல் பிரச்சனையாக இருக்காது.
அப்படியே பிரேக் பிடிக்காமல் போனாலும் ஆபத்து என்பது குறைவு தான் இன்று எதிரில் வரும் ரயிலில் மோதி விபத்து ஏற்படுத்தாமல் இருக்கப் பல அட்வான்ஸ்டு சிஸ்டம்கள் வந்து விட்டது.
ரயிலில் டிரைவர்கள் 30 விநாடிக்கு ஒரு முறை ரயிலில் உள்ள பிஸிக்கல் விஷயங்களான ஆக்ஸிரேட்டர், பிரேக், ஹாரன் அல்லது ரீசெட் பட்டனை அழுத்த வேண்டும்.
ஒரு வேளை டிரைவர் தூக்கியோ அல்லது வேறு பிரச்சனைகளால் பிரேக் போடாமல் இருந்தால் அவர் வேறு எந்த வேலையும் செய்திருக்க மாட்டார் அதனால் ரயில் தானாக நின்றிருக்கும்.
அதனால் ரயிலில் பிரேக் ஃபெயிலியர் நடப்பது மிகவும் அரிதான விஷயம் தான் அதனால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
Thanks for Your Comments