அரசியலுக்கு ஆசைப்படும் விஷால்... ஒர்க் அவுட் ஆகவிலையே !

1 minute read
0
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் விஷால் நடிப்பில் லக்கி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. 
அரசியலுக்கு ஆசைப்படும் விஷால்... ஒர்க் அவுட் ஆகவிலையே !
மேலும் இதை அடுத்து இவருடைய அடுத்த படமான துப்பறிவாளன் இரண்டு படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அண்மையில் லத்தி படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்திருந்த விஷால் தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய விதத்தில் சில விளக்கங்களை தந்திருந்தார்.
இந்த விளக்கத்தில் இவரது அரசியல் ஆசை பற்றிய சில குறிப்புகளும் இருந்தது. மேலும் அரசியலில் களம் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். 

ஆனால் எதிர்பாராத விதமாக அது இவருக்கு ஒர்க்கவுட் ஆகவில்லை. 

தற்போது தனது மனநிலையை மாற்றிக் கொண்டு சினிமாவில் நடிப்பதன் மூலம் கிடைக்கின்ற பெயரை போதும் சி…சி… இந்த பழம் புளிக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். 
இனி அரசியலுக்கு விஷால் வரமாட்டார் என்று தெரிந்ததும் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

ஏனென்றால் விஷாலின் நடவடிக்கைகள் எல்லாமே அரசியலுக்கு வர வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு அதற்குரிய வகையில் இவர் செயலாற்றி இருக்கிறார்.
 
அதன் படி தான் நடிகர் சங்கத் தேர்தலில் தீயாக வேலை செய்து பதவியை கைப்பற்றியவர்.

இப்போது அதிகாரம் ஒட்டு மொத்தமாக தன் கைக்குள் வைத்திருக்கும் இவர் நடிகர் சங்கக் கடனை அடைத்தேன் மேலும் கட்டிடம் கட்டுவேன் என்று வீரவசனம் பேசியது அனைவருக்குமே நினைவில் இருக்கலாம்.
 
மேலும் கடனை அடைப்பதற்காக ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவும் இருந்தார். ஆனால் இவர் கொண்டு இருந்த தீவிர அரசியல் ஆசையால் இவர் அந்த படத்தில் நடிப்பதற்கு மறுத்து விட்டார்.
அதற்கு காரணமாக ஆர்கே நகர் தொகுதியில் தான் போட்டியிடப் போகிறேன் என்று கூறியது தான் முக்கியமான விஷயம். 2007 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அந்தத் தொகுதியில் தேர்தல் நடந்தது. 
அப்போது நடிகர் சங்க தேர்தலும் நடந்து முடிந்த சமயம் என்பதால் விஷால் அந்த தேர்தல் தனக்கு சாதகமாக அமையும் என்று கோட்டை கட்டி இருந்தார்.
 
அதனை அடுத்து அவர் நினைத்திருந்த அந்த கோட்டை இப்போது மண் கோட்டையால் தரைமட்டம் ஆகிவிட்டது. அந்த தொகுதியில் போட்டியிட நினைத்த இவரது நாமினேஷன் மனுவானது புறக்கணிக்கப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings