சொட்டு சொட்டாக சிறுநீர் கசிவு ஏற்பட காரணம்? சிகிச்சை முறைகள் !

3 minute read
0
சிலர் உடல் அளவில் திடீரென்று அழுத்தத்தை சந்திக்கின்ற போது, அவர்களையே அறியாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. 
சொட்டு சொட்டாக சிறுநீர் கசிவு ஏற்பட காரணம்? சிகிச்சை முறைகள் !
SUI என்று அழைக்கப்படுகின்ற இந்த குறைபாடு உலகெங்கிலும் பல கோடி மக்களுக்கு இருக்கிறது. 

இருமல், தும்மல், சிரிப்பு அல்லது உடற்பயிற்சி செய்வது என உடல் அழுத்தங்களை எதிர் கொள்ளும் போது இவ்வாறு சிறுநீர் கசிவு ஏற்படுகிறது.
 
இது பெரும் மனக் கவலையை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அபாயகரமான நோய் அல்ல என்றாலும், சிறுநீர் கசிவு மூலமாக அசௌகரியமான உணர்வு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஆனால், சரியான முறையில் அணுகினால் இதற்கு தீர்வு காண முடியும். 
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, கட்டுப்பாடின்றி சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இடுப்புப் பகுதி பலவீனமாக இருப்பது தான். 

இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் தான் சிறுநீர் பையை இறுக்கமாக வைத்திருக்க உதவும். சிறுநீர் வெளியேற்றத்தை இது தான் கட்டுப்படுத்தும். ஆனால், இடுப்பு பகுதி தசைகள் பலவீனம் அடைவதன் காரணமாக சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. 

கர்ப்பம், பிரசவம், மோனோபாஸ், வயது முதிர்வு, உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் இது போன்ற எஸ்யூஐ ஏற்படலாம். 

ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் என்று தெரிவித்தார்.
 
தீர்வு என்ன?
சொட்டு சொட்டாக சிறுநீர் கசிவு ஏற்பட காரணம்? சிகிச்சை முறைகள் !
எஸ்யூஐ பிரச்சினைக்கு பல வழிமுறைகளில் தீர்வு காண முடியும். அதில் முக்கியமானது இடுப்புப் பகுதியை பலப்படுத்துகின்ற கீகல் பயிற்சி முறையாகும். 

இது இடுப்புப் பகுதி தசைகளை வலுப்படுத்தி எஸ்யூஐ பிரச்சினைக்கு தீர்வளிக்கும். உடல் எடையை குறைப்பது, சிறுநீர் பைக்கு எரிச்சல் ஏற்படுவதை தடுப்பது போன்றவற்றின் மூலமாக தீர்வு காணலாம்.
புதினா கீரையும் அதன் மருத்துவ குணங்களும் !
செய்ய வேண்டிய பயிற்சி 
 
சௌகரியமான வகையில் உட்கார்ந்து கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடுப்புப் பகுதிக்கு பயிற்சி செய்யலாம். 

சாதாரணமாக மூச்சுழுத்து விடுவதுடன், கால்கள், இடுப்புப் பகுதி, வயிற்று தசைப்பகுதி போன்றவற்றை விரிவடையும் வண்ணம் பயிற்சி செய்யலாம்.
மருந்துகள்
 
எஸ்யூஐ பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையிலான மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

சில சமயம் இடுப்பு தசை அல்லது சிறுநீர் பை போன்ற இடங்களில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடலாம். இது தவிர, அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் சிகிச்சையின் மூலமாகவும் தீர்வு பெறலாம்.
 
கவலையை விடுங்க
சொட்டு சொட்டாக சிறுநீர் கசிவு ஏற்பட காரணம்? சிகிச்சை முறைகள் !
உலகெங்கிலும் உள்ள பல கோடி மக்களை பாதிக்கக் கூடியதாக எஸ்யூஐ பிரச்சினை இருக்கிறது. உடற்பயிற்சிகள், வாழ்வியல் மாற்றங்கள், மருந்துகள், அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை என எண்ணற்ற தீர்வு முறைகள் உள்ளன. 
ஆகவே, இந்த குறைபாடு ஏற்பட்டால் அதிகம் கவலை கொள்ளாமல் உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 28, March 2025
Privacy and cookie settings