85 வயது முதியவர் சொத்துக்களை அரசுக்கு தானமாக கொடுத்தார்... ஏன் தெரியுமா?

0
உத்தரப் பிரதேசத்தில் 85 வயது முதியவர் தனது பிள்ளைகளால் கை விடப்பட்டதால், தனது 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அம்மாநில அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
85 வயது முதியவர் சொத்துக்களை அரசுக்கு தானமாக கொடுத்தார் ஏன் தெரியுமா?
உத்தரப் பிரதேச மாநிலம், முப்பார் நகரைச் சேர்ந்த நது சிங். இவருக்கு வயது 85. இந்நிலையில் இவர் 1.5 கோடி மதிப்பிலான வீடு மற்றும் நிலத்தை சொந்தமாக வைத்து இருந்தார். 

இவருக்கு ஒரு மகனும் நான்கு மகளும் உள்ளனர். இந்நிலையில், மகன் ஆசிரியராகவும், மகள்கள் திருமணமாகி கணவருடனும் வசித்து வருவதாக சொல்லப் படுகிறது. 

மேலும் நது சிங்கின் மனைவி இறப்புக்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பின்னர், அவரை கவனித்துக் கொள்ள யாருமில்லை என்பதால் அவரே, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார்.
 
மேலும் முதியோர் இல்லத்தில் நதுசிங்கை அவரது பிள்ளைகள் யாரும் சென்று பார்க்காமல் இருந்துள்ளனர். 

இதனால் மிகவும் மனவருத்தம் அடைந்த நதுசிங், தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் உத்தரப்பிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
அதோடு, தனது சொத்து மூலமாக வரும் பணத்தை வைத்து, தனது மரணத்துக்கு பிறகு பள்ளி அல்லது மருத்துவமனையை அரசு கட்ட வேண்டும் என நது சிங் கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் தன்னுடைய இறப்புக்கு பிறகு, தனது உடலையும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் படிப்புக்காக ஆய்வு செய்ய அனுமதி கொடுத்துள்ளார்.
 
இந்த உயிலை பதிவிட்டுக் கொண்ட அப்பகுதியின் துணைப்பதிவாளர், நதுசிங்கின் பிரமாணப் பாத்திரம் தங்களுக்கு கிடைத்து இருப்பதாகவும், அவரது இறப்புக்கு பிறகு, அது செயல் படுத்தப்படும் என கூறியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings