ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப் படுகிறது.
ஆதார் கார்டை பான் அட்டை, வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை என அனைத்துடனும் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ரயில் பயணம், வங்கி என முக்கிய இடங்களில் ஆதார் தேவைப்படும் போது நீங்கள் அதை மறந்து வைத்து விட்டு வந்துள்ளீர்கள் என்றால் கவலை வேண்டாம்.
இருந்த இடத்தில் இருந்தே இ-ஆதார் (டிஜிட்டல் ஆதார் கார்டு) டவுன்லோடு செய்யலாம். இதுவும் உங்கள் Physical ஆதார் கார்டிற்கு இணையாக பயன்படுத்தலாம். அடையாள அட்டையாக காண்பிக்கலாம்.
இ-ஆதார் டவுன்லோடு செய்வது எப்படி?
இப்போது உங்கள் ஆதார் எண் அல்லது enrolment ID (EID) எண் குறிப்பிட வேண்டும். பின்னர் உங்கள் பெயர், pin code மற்றும் அதில் உள்ள image captcha code பதிவிடவும்.
அடுத்து Get One Time Password (OTP) என்ற பட்டனை கிளிக் செய்து , உங்கள் போனுக்கு வந்த ஓ.டி.பி-யை பதிவிடவும். ஓ.டி.பி பதிவிட்ட பின் Download Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.
PDF ஃபைல் வடிவில் உங்கள் இ-ஆதார் கார்டு டவுன்லோடு செய்யப்படும்.
கொரோனா உணர்த்தும் மோசமான அறிகுறி... அசால்டா இருக்காதீங்க !
குறிப்பு:
டவுன்லோடு செய்யப்பட்ட PDF ஃபைல் ஓபன் செய்ய பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.
மற்றும் நீங்கள் பிறந்த ஆண்டு year of birth (YYYY) பதிவிட வேண்டும். இதைப் பயன்படுத்தி இ-ஆதார் கார்டு ஓபன் செய்யலாம்.
Thanks for Your Comments