வேலை வாய்ப்பு பெற இணை இல்லாத படிப்புகள் !

0
வேலை வாய்ப்பு அடிப்படையில், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் எந்ததெந்த படிப்புகள், எந்தெந்த படிப்புகளுக்கு இணையானது அல்ல என்பதை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
வேலை வாய்ப்பு பெற இணை இல்லாத படிப்புகள் !
தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சிலவற்றில் வழங்கப்படும் படிப்புகள், சில முக்கியமான படிப்புகளுக்கு இணை யானவையாக கருதப்படுவ தில்லை. 
இதனால் அந்த படிப்புகளை படிப்பவர்கள் வேலை வாய்ப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
 
இந்த நிலையில், சில பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இணை இல்லாத படிப்புகள் எவை என்பது பற்றிய தகவலை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது, வேலை வாய்ப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.காம் கணினி பயன்பாடு படிப்பு, பி.காம் படிப்புக்கு இணையான படிப்பு இல்லை.
 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் வழங்கும் எம்.ஏ கூட்டுறவு படிப்பு, எம்.காம் படிப்புக்கு இணையானது அல்ல. ஐதராபாத் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்.சி பயன்பாட்டு கணிதம், எம்.எஸ்.சி கணித படிப்புக்கு சமமானது அல்ல.
 
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்.சி சுற்றுச் சூழலியல் படிப்பு, எம்.எஸ்.சி நுண்ணுயிரியல் படிப்புக்கு இணையானது அல்ல. 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.லிட் படிப்பு, பி.ஏ தமிழ் படிப்புக்கு இணையானதாகக் கருதப்படாது.
 
சென்னை பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்.சி நுண்ணுயிரியல் படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்.சி உயிரி- தொழில்நுட்ப படிப்பும், பி.எஸ்.சி விலங்கியல் படிப்புக்கு இணையாக ஏற்றுக் கொள்ளப்படாது.
சென்னை மாநில கல்லூரியால் வழங்கப்படும் எம்.எஸ்.சி நுண்ணுயிரியல் படிப்பும், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் எம்.எஸ்.சி உயிரி- தொழில்நுட்ப படிப்பும், 
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் எம்.எஸ்.சி மரையன் பயாலஜி படிப்பும், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் எம்.எஸ்.சி பயோ-மெடிக்கல் சயின்ஸ் படிப்பும், எம்.எஸ்.சி விலங்கியல் படிப்புக்கு இணையாக ஏற்றுக் கொள்ளப்படாது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings