தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 12, 11, 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இதை யடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று, படிப்படியாக முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் சென்று பார்க்கலாம். மாணவிகள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மாணவ, மாணவிகளின் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 91.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குழந்தைகளை உண்ணும் துரித உணவிலிருந்து காப்பாற்றுங்கள் !
அதில் மாணவிகள் 94.66 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களை விட 6.5 சதவீதம் அதிகமாக இருக்கிறது.
1 . பெரம்பலூர் 97.67 சதவீதம்
2 . சிவகங்கை 97.53 சதவீதம்
3 . விருதுநகர் 96.22 சதவீதம்
Thanks for Your Comments