கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளியைச் சேர்ந்த, கஸ்தூரியின் மகன் க்ரித்தி வர்மா (15), அப்பகுதியில் உள்ள நெடுமருதி அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவி்ல், 437 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் !
தமிழில் 82 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 79 மதிப்பெண்ணும், கணிதத்தில் 93 மதிப்பெண்ணும்; அறிவியல் எழுத்துத் தேர்வில் 62 மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண், சமூக அறிவியலில் 96 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
மேலும், மதிப்பெண்கள் அடிப்படையில் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். சாதிப்பதற்கு எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்த, மாணவன் க்ரித்தி வர்மாவை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மாணவன் க்ரித்தி வர்மா, சின்ன வயசுல எல்.கே.ஜி படிக்கும் போது, கோழிப் பண்ணையில மின்சாரம் தாக்குனதுல, என்னோட இரு கைகளோட பாதிய இழந்துட்டேன். ஒரு காலில் 3 விரல்களும் சர்ஜரியில் அகற்றிட்டாங்க.
நான் இந்த கைகள வெச்சு எழுதரேன், சைக்கிளிங் போறதோட, நடனப்பயிற்சி எடுத்து போட்டிகளிலும் ஜெயிச்சுருக்கேன்.
நல்லா படிச்சு அரசு அதிகாரியாகி மக்களுக்கும், என்னமாதிரி இருக்கறவங் களுக்கு சேவை செய்யணும், உதவி செய்யணும், இது தான் என் லட்சியம், என, நம்மிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நம்மிடம் பேசிய க்ரித்தி வர்மாவின் தாய் கஸ்தூரி, எங்க அம்மா மற்றும் உறவினர்கள் வீட்டுல தங்கியிருக்க நான், கூலி வேலைக்கு போய், க்ரித்தி வர்மாவ வளர்த்திட்டு வர்றேன்.
என் மகன் பள்ளியில முதலிடம் பிடிச்சத நெனச்சு ரொம்ப பெருமையா இருக்கு. அவன நல்லா படிக்க வெச்சு, அவன் வாழ்க்கையில பெரிய உயரத்துக்கு கொண்டு வரணும், அதான் என் லட்சியம்.
அரசு, எனக்கு எதாவது அரசுப்பணி கொடுத்தா என் மகன நல்லபடியா பார்த்துப்பேன். வீடும் இல்லாததால, அனைவருக்கும் வீடு திட்டத்துல அரசு ஒரு வீடு கொடுத்து உதவணும், என்றார் நம்மிடம்.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் இந்த மாணவனின் தாயை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருப்ப தாகவும், மாணவனின் சிகிச்சைக்கு உதவுதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Thanks for Your Comments