சென்னையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் பட்டியல்
கடந்த இரு தசாப்தங்களுக்கு முன், உயர் கல்வியில் நுழையும் இளைய தலைமுறையினர் எண்ணிக்கை சொற்பமே.
ஆனால், இன்றைய நிலை அவ்வாறு இல்லை என்பதை நாம் அறிவோம். கல்வி தான் நமக்கான அனைத்து வாய்ப்புகளை நம் முன் நிறுத்தும் பேராயுதம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
ஆகையால், பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வழங்க அல்லாடுகின்றனர்.
தற்போது, கல்வியும் ஒரு வணிகம் என்றாகி விட்டதால், பெரும்பாலான பெற்றோர், சரியான, தரமான கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
அவர்களுக்கானது, இந்த கட்டுரை. இது, ஒரு முன் முயற்சி. அந்த வரிசையில், தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகள், அவை வழங்கும் பாடங்கள் குறித்த விபரங்களை கீழே காணலாம்.
இருப்பினும், அந்த கல்வி நிறுவனங்களில், தங்கள் மாணவர்களை சேர்க்கும் முன், ஒரு முறை 'விசிட்' அடிப்பதோடு மட்டுமின்றி, அனைத்தையும் ஆலோசித்து முடிவெடுங்கள்.
பாலிடெக்னிக் கல்வி
10 ஆம் வகுப்புக்கு பிறகு விரைவாக வேலைகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் படிப்புகள் ஒரு வரப்பிரசாதமாகும்.
பாலிடெக்னிக் என்பது பொறியியல் அல்லது டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்புகளின் தொழில்நுட்ப கல்வி. இது, நடைமுறை மற்றும் திறன் சார்ந்த பயிற்சியில் கவனம் செலுத்துகிறது.
இப்படிப்புகளின் காலம் 2-3 ஆண்டுகள்.
நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருவதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில், சென்னை மாநகரில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள், அதில் வழங்கப்படும் படிப்புகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்...!
மருந்தகம்
நாட்டில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநராக பணிபுரிய ஒரு நபருக்கு, 'பார்மஸி' படிப்பு தகுதியாகும்.
படிப்பை முடித்த பிறகு, தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் மருந்தாளுநராக வேலை வாய்ப்பு பெறலாம். கிளினிக்குகள், என்ஜிஓக்கள், சமூக சுகாதார மையங்கள் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும்.
ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பம்
ஹோட்டல் நிர்வாகம் சார்ந்த அனைத்து படிப்புகளும், கற்று கொள்வதற்கு எளிதானவை மட்டுமின்றி சிறந்ததாகும். டிப்ளமோ படிப்புகள், பட்டப் படிப்பு அல்லது சான்றிதழ் படிப்புகள் வாயிலாக, இப்படிப்பை கற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு கால அளவு உண்டு. வணிக நிர்வாக படிப்புக்கு, சராசரியாக ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை ஊதியம் கிடைக்கப் பெறும்.
ஸ்ட்ராடஜிக் டாஸ்க் மேலாண்மை, வணிக நுட்பம் ஆகியவை அதிக ஊதியம் பெறும் திறன்கள் ஆகும்.
ஜவுளி தொழில்நுட்பம் (டெக்ஸ்டைல் டெக்னாலஜி)
மாணவர்கள் தொழில்நுட்ப வடிவமைப்பு, தரக் கட்டுப்பாடு, பேட்டர்ன் மேக்கர், ஃபேஷன் ஆலோசகர், ஆடை வடிவமைப்பாளர், சில்லறை மேலாண்மை
மற்றும் டெக்ஸ்டைல் டெவலப்மென்ட் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில், ஒன்றை தாங்கள் விருப்ப தேர்வாக மேற்கொள்ளலாம்.
சிறந்த ஜவுளி ஆலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, திறமையான ஜவுளி பொறியாளர்கள் தேவை பன்மடங்கு ஆகும்.
இயற்பியல் மற்றும் வேதியியல் கோட்பாடுகளின் ஆய்வு, பாலிமர்களின் பகுப்பாய்வு மற்றும் ஆய்வுக்கு உதவியாக இருக்கும்.
தோல் தொழில்நுட்பம்
தோல், பிற ஒத்த தொழில்களில், உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, ஆராய்ச்சி மேலாண்மை, கொள்முதல், விற்பனை அல்லது
சந்தைப் படுத்தல் ஆகியவற்றில், அனுபவம் வாய்ந்த தோல் தொழில் நுட்பவியலாளர் (லெதர் டெக்னீஷியன்) எளிதாக வேலை வாய்ப்புகளை பெறலாம்.
'லெதர் டெக்னாலஜி' படிப்பை முடித்தவர்கள், பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் விரிவுரை யாளர்களாக பணிபுரிய வாய்ப்புள்ளது.
அப்படிப்புகளை படித்தவர்கள் தொழில் துறை மட்டுமின்றி, கற்பித்தல் பணியும் ஒருங்கே மேற்கொள்ள முடியும்.
இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு, தோல் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் என்பது டிப்ளமோ படிப்பாகும்.
'எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' என்பது பொதுவாக மின்சாரம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்காந்தவியல் பற்றிய ஆய்வு, பயன்பாட்டை கையாளும் பொறியியல் துறையாகும்.
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த பின் பணியில் சேர விரும்புகிறீர்களா அல்லது இந்தத் துறையில் உங்கள் திறன்களையும், அறிவையும் மேம்படுத்தி, உங்கள் கல்வியை தொடர விரும்புகிறீர்களா என்பதை, நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
இயந்திர பொறியியல்(மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்)
டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்பது, 10 ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் தேர்வு செய்யும் 3 ஆண்டு பாலிடெக்னிக் படிப்பாகும்.
இயந்திரவியல் அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இயந்திர உபகரணங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கையாள கற்று தருவது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பாகும்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ, இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளிலும், நல்ல, மிகவும் விரும்பப்படும் பட்டங்களில் ஒன்றாகும்.
கடல் பொறியியல் (மரைன் இன்ஜினியரிங்)
மரைன் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை நிறைவு செய்த நபர்களுக்கு, பல தொழில் வாய்ப்புகள் உள்ளன.
அதாவது, போர்ட் மேலாளர், தொழில்நுட்ப கண்காணிப்பாளர், கப்பல் ஆபரேட்டர், கடல்சார் கல்வியாளர்கள் உள்ளிட்ட பணிகளில் பணியாற்றலாம்.
இதன் காரணமாக, டிப்ளமோ இன் மரைன் இன்ஜினியரிங் படிப்பின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிளஸ் 2க்கு பின் நுழைவுத் தேர்வு அல்லது தகுதி அடிப்படையில், டிப்ளமோ இன் மரைன் இன்ஜினியரிங் படிப்பில் சேர முடியும். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வரும் துறை என்றே அழைக்கலாம்.
டிப்ளமோ இன் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் உள்ள புகழ் பெற்ற தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், சிறந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பாக, தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக தேவை உள்ளது,
நாட்டிலேயே ஆட்டோ மொபைலின் மிகப்பெரிய மையமாக, தமிழகம் உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
டிப்ளமோ இன் பார்மஸி
பார்ம் டி என்பது டாக்டர் ஆஃப் பார்மசியைக் குறிக்கிறது. இது ஒரு முதுகலை முனைவர் பட்டப்படிப்பு ஆகும். பி பார்மசி, இது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு ஆகும்.
சிவில் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு, பரந்த அளவிலான வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சிவில் & இன்டீரியர் திட்டங்கள், ரயில்வே, ஆர்கிடெக்ட் நிறுவனங்கள், சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்டவைகளில், இப்படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
கட்டிடக்கலை உதவியாளர்
டிப்ளமோ இன் ஆர்க்கிடெக்சரல் அசிஸ்டெண்ட்ஷிப் என்பது சிவில் இன்ஜினியரிங், கட்டிடக்கலை மற்றும் உள்துறை வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகளை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டதாகும்.
மேற்குறிப்பிட்ட துறைகளில் மாணவர்களுக்கு, இப்படிப்பு பயிற்சி அளிக்கிறது. மேலும், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் சிவில் இன்ஜினியர்களின் கீழ் பணியாற்றவும், அவர்களை தயார் படுத்துகிறது.
சுற்று சூழல் பொறியியல்
சுற்றுச்சூழல் பொறியியல் டிப்ளமோ என்பது ஆறு செமஸ்டர்களாகப் பிரிக்கப்பட்ட மூன்று ஆண்டு படிப்பாகும்.
சுற்றுச்சூழல் பொறியியல் துறையில், ஆழமான அறிவைப் பெறவும், மாணவர்களுக்கு திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்குகிறது.
ஆடை தொழில்நுட்பம்
டிப்ளமோ இன் கார்மென்ட் டெக்னாலஜி என்பது மூன்று வருட படிப்பாகும். இந்தியாவில் உள்ள சில கல்லூரிகளால், இப்படிப்பு வழங்கப் படுகிறது.
மாணவர்களுக்கு ஆடைகளை வடிவமைத்தல், ஆடை வடிவமைப்பிற்கான தொழில் நுட்பங்கள், ஆடை வடிவமைப்பில் கணினிகளின் பயன்பாடு தொடர்பான பல்வேறு விஷயங்களை, இப்படிப்புகள் வாயிலாக கற்றுக் கொள்ளலாம்.
கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்
டிப்ளமோ இன் இன்ஸ்ட்ரு மென்டேஷன் & கண்ட்ரோல் இன்ஜினியரிங் என்பது இளங்கலை இன்ஜினியரிங் படிப்பாகும்.
கருவி என்பது உற்பத்தி அல்லது உற்பத்திப் பகுதியில் உள்ள செயல் முறையை அளவிடுதல் மற்றும் கட்டுப் படுத்துவதற்கான கலை மற்றும்
மார்டன் ஆபீஸ் ப்ராக்டீஸ்
அரசு மற்றும் தனியார் துறைகளில், வேலை வாய்ப்புகளை வழங்கும் படிப்பாகும். பட்டதாரிகள் நிர்வாக உதவியாளர், நிர்வாக உதவியாளர், விற்பனை உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்க முடியும்.
கணினி பொறியியல்
கம்ப்யூட்டர் புரோகிராமிங், ஆப்பரேட்டிங் சிஸ்டம், நெட்வொர்க்கிங், டேட்டாபேஸ் போன்ற அடிப்படையை உள்ளடக்கியது ஆகும்.
கணினி பொறியியலில் டிப்ளமோ சிறந்தது?
கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்ட்வேர் துறைகளில், தொழில் செய்ய விரும்புவோருக்கு மிகவும் லாபகரமான படிப்பு என்ன என்றால், அது கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ.
தொடக்க நிலையில் நல்ல ஊதியம் கிடைக்கப் பெறும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 முதல் 4 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பம் என்பது கணினி சார்ந்த படிப்பை உள்ளடக்கியது.
சேமிப்பு, மீட்டெடுப்பு, தரவு கையாளுதல், தகவல் தொடர்புகளைப் பகிருவது சாரந்த விஷயங்களை கற்கும் டிப்ளமோ பாடத்திட்டம் ஆகும்.
இத்திட்டம் பயன்பாட்டு கணிதம், இயற்பியல், வேதியியல், சி நிரலாக்கம், கணினி பகுப்பாய்வு, டிஜிட்டல் மின்னணுவியல் போன்றவையை உள்ளடக்கியது.
மெகாட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தேவை உள்ளதா?
மெகாட்ரானிக்ஸ் என்பது உயர் தொழில்நுட்பத் துறையாகும். பென்வெஸ்ட் கலிபோர்னியா பல்கலை போன்ற அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து மெகாட்ரானிக்ஸ் பொறியியல் தொழில்நுட்பப் பட்டம் பெற்ற நபர்களின் தேவை உள்ளது.
டூல் அண்ட் டை இன்ஜினியரிங்
டூல் அண்ட் டை இன்ஜினியரிங் உற்பத்தித் துறையில் உள்ள ஒரு சிறந்த துறையாகும். அளவீடுகள், வெட்டும் கருவிகள், இயந்திர கருவிகள், அச்சுகள், டைஸ்கள், ஃபிக்சர்கள்,
ஜிக்ஸ் மற்றும் உற்பத்தி செயல் முறைகளில் பயன்படுத்தப்படும் பிற கருவிகளை உருவாக்கும் இயந்திரவியல் நிபுணர்களை உள்ளடக்கியது.
பிரிண்டிங் டெக்னாலஜி (அச்சிடும் தொழில்நுட்பம்)
டிப்ளமோ (பிரிண்டிங் டெக்னாலஜி) அல்லது டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி என்பது இளங்கலை பட்டதாரிகளுக்கான 1 முதல் 2 ஆண்டு படிப்பாகும்.
மாணவர்களுக்கு அச்சு இயந்திர செயல்பாடுகள், வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் ஆகியவற்றைக் கையாளும் பொறியியல் குறித்து கற்கும் வாய்ப்பை, இப்படிப்பு வழங்குகிறது.
பொறியியல் பள்ளி அல்லது பாலிடெக்னிக் கல்லூரியின் இருப்பிடம் வாரியாக விவரங்கள்:
சி.எல். பெய்ட் மெத்தா பார்மசி கல்லூரி
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
மத்திய பாலிடெக்னிக் கல்லூரி
டான் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி
டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்களுக்கான பாலிடெக்னிக் கல்லூரி
எம்பீ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.கே.நகர்
அரசு தொழில்நுட்ப பயிற்சி மையம்
தோல் தொழில்நுட்ப நிறுவனம்
இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி
டெக்ஸ்டைல் டெக்னாலஜி நிறுவனம்
பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி
பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி
ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி
சிகா பாலிடெக்னிக் கல்லூரி
மாநில வணிகக் கல்வி நிறுவனம்
வி.ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி
பட்டியலில் இடம்பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளில் வேறு என்னென்ன படிப்புகள் அறிமுகம் உள்ளிட்ட இன்ன பிற தகவல்களை, அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்துக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
Thanks for Your Comments