ஜப்பானில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப் பட்டது.
இந்நிலையில் இன்று ஒசாகாவிலிருந்து டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.
இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் இரயிலில் பயணம் செய்கிறேன்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.
கொள்ளையனிடம் நகைகளை வாங்கி கொண்ட பிரபல நடிகை !
ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
— M.K.Stalin (@mkstalin) May 28, 2023
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை -… pic.twitter.com/bwxb7vGL8z
Thanks for Your Comments