Sharo beating என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஒரு மனைவியையும், சமூகத்தில் கௌரவத்தையும் சம்பாதிக்க, பிரம்படிகளை வாங்கிக் கொண்டால் தான் முடியும்.
இக் கலாச்சாரத்துடன் வாழும் இப் பிராந்தியத்தை Fulani என்றழைக்கிறார்கள். இங்குள்ள பிராந்தியத்தின் சில பகுதிகளில், இந்தப் பிரம்படிக் கலாச்சராம் இருப்பதை, இங்கு பயணிப்பவர்கள் நேரில் சென்று காண முடியும்.
பெண் வீட்டார் தமது பெண்ணை Sharo முறையில் தான் மாப்பிள்ளைக்கு தரமுடியும் என்றால், மாப்பிள்ளை, முதுகு வலிக்க, அடி வாங்க, தன்னைத் தயார் படுத்தியாகத் தான் வேண்டும்.
கல்லைத் துாக்கி உயர்த்தி, தமது பராக்கிரமத்தை காண்பித்து ஒரு பெண்ணை வென்றது போல, இதுவும் இந்த ஆபிரிக்க நாடுகளில் உள்ள ஒரு வியப்பான கலாச்சாரந்தான்!
பழைய சோறா? அப்படீன்னா என்ன?
அப்படியானால் யார் அடிப்பது?
வலியைத் தாங்கும் திராணி இல்லை யென்றால், மாப்பிள்ளையின் பெண் வேட்டை பட்டென்று முடிந்து விடும். வெறுங்கையோடு திரும்ப வேண்டியது தான்.
இன்றைய நாட்களில் அனேகமான இளைஞர்கள் சுருண்டு விடுவதால், ஒரு மாற்று முறையையும் இங்கே வைத்துள்ளார்கள். Koowgal என்பது நமது சீதன முறையை ஒத்தது. இதை மணமகன் தெரிவு செய்யலாம்.
பழைய சாதம் தான் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு !
இன்னொரு முறையை Kabbal என்கிறார்கள். இது இஸ்லாம் மதத் திருமணக் கொண்டாட்டத்தை ஒத்தது. Kabbal என்பது இதன் பெயர். மணமகனும் மணமகளும் சமூகமளி்க்காமல் இடம் பெறும் சடங்கு இது!
அனேமாக ஒரு பெண்ணுக்கு இரு இளைஞர்கள் போட்டியிட்டால், இந்த SHARO முறையைத்தான் இவர்கள் நாடுவதுண்டு.
இதில் வேடிக்கை என்ன வென்றால், இரண்டு மாப்பிள்ளைகளும் பிரம்புகளால் ஆளை ஆள் அடித்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் தான் இது நடக்கும்.
ஆளுக்கொரு பிரம்பை, கையில் கொடுத்து விட்டு, சுற்ற நின்று வேடிக்கை பார்ப்பார்கள் கிராமத்தவர்கள். இந்த நிகழ்வில் ஓர் ஆணின் வீரம், வலியைத் தாங்கும் துணிவு, ஆண்மை- இவை மூன்றும் பரிசீலிக்கப்படும்.
ஓர் ஆண்டில் இரு தடவைகள் இடம் பெறுவது தான் இப்படியான சடங்குகள்!
இங்கு வரட்சி நிலவும் கோடை காலத்திலும்,, முஸ்லீம் மக்களின் ஈட் எல் கபீர் (id-el-kabir) திருவிழாக் காலத்திலும், இந்தப் பிரம்படி நிகழ்வுகளைக் காண முடியும்.
இந்த நிகழ்வு, தொலைதுாரங்க ளிலிருந்து வந்து நேரில் பார்க்கும் அளவுக்கு பார்வை யாளர்களைக் கவர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.
ஆளை ஆள் அடிபட்டுக் கொள்வதற்கு முன்பாக, அழகிகள் பல இணைந்து இரு ஆண்களையும், பலத்த கூச்சல், ஆரவாரங்களுக்கு இடையே சந்தைக்கு அழைத்து வந்து விடுவார்கள்.
அடிகள் தவறான இடங்களில் பட்டு, மோசமான காயங்களை ஏற்படுத்தாது தடுக்க, ஒரு நடுவர், அடிபாடுகளின் போது, அங்கே பிரசன்னமாக இருப்பார்.
கொரோனாவில் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்?
சுற்றிவர நின்று, மாப்பிள்ளைகளின் உறவுகள் உற்சாகமாகக் குரலெழுப்பு வார்கள். மேளதாளங்கள் அமர்க்களமாக இருக்கும். முடிவில் வென்ற ஆண்மகன், ஒரு பெண்ணை வென்றெடுத்த பூரிப்புடன், புது மனைவியுடன் கைகோர்த்தபடி செல்வார்..
Thanks for Your Comments