பெட்ரோல் போடும் போது கவனமா இருங்க?

0

வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது அதனின் தரத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? மீட்டர் 0-வின் இருந்து தொடங்குகிறதா என்று பார்த்தால் போதாது அதனின் தரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெட்ரோல் போடும் போது கவனமா இருங்க?
வாகனங்கள் இயங்க எரிப்பொருளாக திகழும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் தினமும் ரூ.100க்கு மேல் பணம் செலுத்தி பெட்ரோல் பெற வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், நீங்கள் பணம் கொடுத்துப் போடும் பெட்ரோல் தரமாக உள்ளதா என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனைத் தெரிந்து கொள்ளுவது மிக எளிமையான விஷயமே.

பெண்கள் மட்டும் படிப்பதற்கு !

பெட்ரோல் பங்கில் Display-வில் பெட்ரோலில் Density அளவு இடம்பெற்று இருக்கும். அதனை வைத்து நீங்கள் பெட்ரோலின் தரத்தைக் கண்டறியலாம். 

அரசு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு என்று தர மதிப்பீட்டை நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும். 

பெட்ரோல் / டீசல் போடும் இயந்திரத்தின் Display மற்றும் பில் ஆகியவற்றில் நீங்கள் போட்டுக் கொண்ட எரிபொருளின் Density அளவு இடம் பெற்று இருக்கும்.

பெட்ரோல் போடும் போது கவனமா இருங்க?

இதுவும் இல்லை யென்றால், Pump Meter-இல் கண்டிப்பாக பெட்ரோல் / டீசலின் தரத்தின் அளவு இடம் பெற்றிருக்கும். மத்திய அரசு விதியில் படி, பெட்ரோல் Density அளவு 730 to 800 kg per cubic meter இருக்க வேண்டும். 

அதே போல், டீசலுக்கு 830 to 900 kg per cubic meter இருக்க வேண்டும். அதிக வெப்பநிலை காரணத்தினால் சில நேரங்களில் அளவில் மாற்றம் ஏற்படலாம்.

கர்ப்பம் தரிக்கும் காலம் எது?

இதற்குக் குறைவான அடர்த்தி அளவில் உங்களுக்கு பெட்ரோல்/டீசல் விநியோகம் செய்யப்பட்டால் உங்களால் அந்த நிறுவனத்தின் மேல் புகார் அளிக்க முடியும். 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் படி, ஒவ்வொரு நுகர்வோருக்கும் பெட்ரோலின் தூய்மையை அளவிட உரிமை உண்டு.

(nextPage)

பின் குறிப்பு : . 

பெட்ரோல் போட ஆரம்பம் செய்வதற்கு முன்பு‌ அந்த மீட்டரில் எல்லா எண்களும்‌ பூஜ்ஜியம் இருக்கிறதா என்று பார்த்து பிறகு போட அனுமதியுங்கள்.

( ஏன் என்றால் அந்த pump ஐ நீண்ட‌ நேரம் இயக்காமல் இருந்தால் ஏர் பிரஷர் ஏற்பட்டு பெட்ரோல் போடும் gun எடுத்தவுடன்‌ மீட்டர் தன்னாலே ஓட‌ ஆரம்பிக்கும். 

இது அவர்கள் தவறு இல்லை இதைஅவர்களும் கவனிக்க‌ மாட்டார்கள் நம்ம காசு நாம‌‌தான் உஷாரா இருக்கனும். பெட்ரோல் போடும்‌‌ போது தொலைபேசியிலோ அருகில்‌ இருப்பவரிடமோ பெட்ரோல்‌ போடுபவரிடமோ பேசுவதை தவிர்க்கவும். 

இது பெட்ரோல் போடுபவருக்கு‌ சாதகமாக இருக்கும் பாதி போட்டு டக்குனு எடுத்துடுவாங்க. சார் வண்டிய முன்னாடி போய்ட்டு காசு குடுங்க. 

பெட்ரோல் போடும் போது கவனமா இருங்க?

பின்னாடி வண்டி நீக்குது என்று நமக்கு பதட்டத்தை ஏற்படுத்தி கடைசியில் போட்டானா இல்லையா என்று தோன்றும்.

பெட்ரோல்‌ போடுவதற்கு முன்பே வண்டியை முன்னாடியே ஓரமா நிறுத்தி பணத்தை எடுத்து வைத்து கொள்ளுங்கள் சில பேர்‌ பெட்ரோல்‌ போடும்‌ போது தான் பர்ஸை தேடுவார்கள். 

பெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் !

குறிப்பாக பெண்கள் பெட்ரோல் போட சொல்லிட்டு ஸ்கூட்டி டிக்கில இருக்குற பேக்ல ஆராய்ச்சி பண்ணிட்டு‌ இருப்பாங்க. 

உடனே பெண்களை தப்பா பேசிட்டேனு நெனைக்காதிங்க இது தான் உன்மை உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் இதுவும் அவர்களுக்கு சாதகமாக அமைந்து ‌விடும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings