ஆபிரிக்காவில் அரசருக்கு ஆண்டுக்கு ஒரு அழகி !

0
சுவிட்சிலாந்து நாடு நமக்கு தெரிந்தது. சுவாஸிலாந்து நமக்கு அதிகமாகத் தெரியாதது. தனது எல்லைகளில் ஒன்றாக, தெ. ஆப்ரிக்காவைக் கொண்ட மலை நாடு இது. 
ஆபிரிக்காவில் அரசருக்கு ஆண்டுக்கு ஒரு அழகி !
பணக்கார நாட்டின் பெயரோடு தங்கள் நாட்டைக் கலந்து குழப்புகிறார்கள் என்ற கோபம் மன்னருக்கு! நாட்டின் பெயர் Eswatini என்றாகி விட்டது. மன்னர் ஆட்சி கொண்ட இந்தக் குட்டி ராஜ்யம், மிகவும் வறியது. 

இங்கே வாழ்பவர்களில் (ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள்) மூன்றில் இரண்டு பகுதியினர் எயிட்ஸ் தொற்று உள்ளவர்கள் என்பது நம்மை அதிர வைக்கும் தகவல். 34 வீதமானவர்கள் தொழிலற்றவர்கள். 

விவசாயத்தையே நம்பியிருக்கும் அரைவாசிக்கு மேற்பட்டவர்களின் நாளாந்த வருமானம், ஒரு டாலருக்கு அதிகமில்லை என்பது இன்னொரு சோகம். 
ஆனால் ஆடம்பரமாக வாழ்கிறார் மன்னர்! நாட்டின் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் இவர் கையில் தான் இருக்கின்றது. எனவே தன் இஷ்டத்தி்ற்கு இவரால் ஆட, ஆட்டுவிக்க முடிகிறது.
 
இது இப்படியிருக்க, காலங்காலமாக இங்கே தொடரும் ஒரு கலாச்சார விழா நமக்கு வியப்பளிக்கின்றது. அது தேவைதானா என்ற கோபத்தையும் ஏற்படுத்துகின்றது. 

ஆனால் இந்த மலைநாட்டின் மிகப் பெரியதும், உலகப் பிரபல்யமானதுமான விழா இது. 2017 இல் எடுத்த ஒரு கணிப்பின்படி, (இந்த ஆண்டில் தான் தனது 14 வது மனைவியை பொறுக்கியெடுத்தார். 
மூன்றாவது Mswati என்று அழைக்கப்படும் இந்த மலை ராஜ்ய மன்னர்! இவருடைய பிந்திய மனைவிக்கு வயது 19. Siphelele Mashwama என்ற பெயர் கொண்ட இவள், ஓர் அமைச்சரின் மகள்!மன்னருக்கு இப்பொழுது வயது 52.
 
11 மனைவிமார்கள்
 
விக்கிபீடியாவைச் சல்லடை போட்டதில் சில மேலதிக குறிப்புகள் சிக்கின. தற்பொழுது இவரோடு 11 மனைவிமார் இருப்பதாகவும், இருவர் நிரந்தரமாக இவரை விட்டு விலகி விட்டதாகவும், இருவர் இறந்து விட்டதாகவும் சொல்லப் படுகின்றது. 

இந்தத் தெரிவு என்பது சில சமயங்களில் பெண் கடத்தலில் முடிவதாகவும் குற்றம் சாட்டப் படுகின்றது. 

இவருக்கு தற்பொழுது 35 பிள்ளைகளும், 6 பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். கவுண்சிலின் தெரிவில் வந்த முதல் இரு மனைவிமாரின் பிள்ளைகள், என்றுமே மன்னராக முடியாது.
 
மன்னரை சிங்கம் என்று பொருள்பட, தங்கள் மொழியில் Ngweyama என்று அழைத்து வருகிறார்கள். இவருக்குள்ள பல மனைவிமாரில் Indlovukazi (Great Wife) என்று தெரிவாகும். 
மனைவியின் பிள்ளை தான் அடுத்த மன்னராகும் தகுதி பெற்றவர். இவர் பொறுக்கி யெடுக்கும் பெண் அந்தப்புரத்தில் கர்ப்பமாகி விட்டால், மன்னரின் மனைவி என்ற என்ற அந்தஸ்தை பெற்று விடுகிறாள்.
 
மேலாடை அணியாது ஆடும் நடனம்
ஆபிரிக்காவில் அரசருக்கு ஆண்டுக்கு ஒரு அழகி !
கன்னி கழியாத இளம் பெண்கள், இந்த reed dance இல் (Umhlanga) கலந்து கொள்கிறார்கள் .கலந்து கொள்ளும் இங்குள்ள Zulu,Swazi இனப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்பது ஒரு நிபந்தனை. 

பவனி ஆரம்பத்திற்கு முன்னர், இந்தக் கன்னிகள் ஆற்றங்கரைக்கு சென்று அங்கு நெடுத்து வளர்ந்திருக்கும் இரு நாணல் கம்புகளை வெட்டி எடுத்துவர வேண்டும். 

குழுகுழுவாகச் செல்லும் இவர்களுடன் இளவரசிகளும் இணைவார்கள். இதற்காக சில சமயங்களில் 30 கிலோ மீ்றறர் துாரம் நடையில் செல்வதும் உண்டு.

இங்கே உயர்ந்து வளர்ந்திருக்கும் நாணல் கம்புகளை வெட்டி, சிலவற்றை சேர்த்து பிணைத்து, கைகளில் எடுத்துக் கொள்வார்கள். 
இந்தக் கம்புகளை இராணியின் மாளிகை முன்றலுக்கு கொண்டு சென்று, ஆன்மீக இராணியின் பாதுகாப்பிற்காக, இவற்றை அவர் பாதங்களில் வைப்பதுண்டு. 

முதல் ஐந்து நாட்கள் இசையும் பாட்டுமாக, இந்தக் கிராமம் அமர்க்களப்படும். விழா ஆரம்பித்து ஆறாவது நாளின் பிற்பகுதியில் தான் இந்த நிகழ்வு இடம்பெறும். இந்த விழா ஏழு நாட்கள் தொடர்வதுண்டு. 

இந்தப் பவனியில் பங்குபற்றுபவர்கள், தங்கள் கன்னித் தன்மையை உறுதிப் படுத்தும் வகையில், முன்னேற்பாடாக மருத்துவ பரிசோதனைகள் செய்வது வலியுறுத்தப் படுகின்றது. 

பாசிமாலைகள், கைகளில் வளையல்கள் என்று இவர்கள் தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள்.
 
கன்னிகளின் பவனி
ஆபிரிக்காவில் அரசருக்கு ஆண்டுக்கு ஒரு அழகி !
இராணியின் வாசஸ்தலமான Ludzidzini என்ற கிராமத்திலேயே இந்த விழாவை நடாத்துகிறார்கள். 40,000 வரையிலான இளம் பெண்கள் வண்ணமயமான குட்டைப் பாவாடை அணிந்து கலந்து கொள்கிறார்கள்.

விழாவின் ஏழாம் நாளில ்தான் மன்னர் பிரசன்னமாகிறார். இந்த நாட்டின் மிகப் பெரிய விழா இதுதான். இந்த நாள் இங்கு பொது விடுமுறை தினமாகும். 

கடந்த வருடம் இந்த விழாவின் ஏழாவது நாள் ஆகஸ்ட் 27 அன்று வந்துள்ளது. இந்தப் பவனியில் மன்னரை நெருங்கியதும் தங்கள் கைகளில் உள்ள கம்புகளை இவர்கள், கீழே வைத்து விட வேண்டும்.
 
இவர்களில் ஒருத்தியை மன்னர் தனது புதிய இளவரசியாக தேர்ந்தெடுப்பார். 20 தொடக்கம் 25 ஆடுகள் வெட்டப்பட்டு, இதில் பங்குபற்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு துண்டு மாமிசம், மன்னர் கையால் வழங்கப் படுவதுண்டு.
கொசுறுச் செய்தி
நம்பினால் நம்புங்கள். சுவாசிலாந்தை 1920க்கும் 70க்கும் இடையில் ஆண்ட மன்னர் Sobhuza , 70 மனைவிமாரை வைத்திருந்தாராம். இவர்களின் உறவால் 210 பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. 

இவர்களில் 97ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும், 2000மாவது ஆண்டு வரை வாழ்ந்திருக் கிறார்கள்
 
சிங்கம் சிங்கம் தான்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings