நாம் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்து கொள்கிறமோ அந்த அளவிற்கு வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் சுத்தமாக வைப்பது அவசியம்.
இக்காலத்தில் அனைவரது வீட்டிலும் ஃப்ரிட்ஜ் பயன்பாட்டில் உள்ளது. பிரிட்ஜின் உள்பகுதி மற்றும் வெளிப்புறத்தை சுத்தம் செய்து இருப்போம். ஆனால் பிரிட்ஜ் கதவில் உள்ள Gasket ரப்பரை சுத்தம் செய்து இருக்க மாட்டோம்.
இந்த ரப்பரை சுத்தம் செய்தல் மிகவும் அவசியம். பிரிட்ஜ் கதவில் உள்ள ரப்பரை சுத்தம் செய்யாவிட்டால் பிரிட்ஜ் கதவு சேதமடையும்.
அது மட்டுமில்லாமல் அதனை நாம் தொடும் போது உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே பிரிட்ஜ் கதவில் உள்ள Gasket ரப்பரை சுத்தம் செய்ய சில குறிப்புகளை இப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வினிகர்
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
வினிகரை பயன்படுத்தி சுத்தம் செய்வதன் மூலம் எளிதாக அழுக்குகள் நீங்கி சுத்தமாக ஆகிவிடும். இனி பிரிட்ஜை திறந்தாலே வாசம் மட்டும் தான் வரும். அதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..
சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு :
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன், தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பேஸ்டினை ஒரு பழைய டூத் பிரஷ் அல்லது ஒரு துணியில் எடுத்து பிரிட்ஜ் கதவில் உள்ள ரப்பர் இடுக்குகளில் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு ரப்பரை துடைத்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் ரப்பரில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் அனைத்தும் எளிதில் நீங்கி விடும்.
டூத் பேஸ்ட்
Thanks for Your Comments