கண்ணாடிப் பொருட்களை எப்படி தயாரிக்கிறார்கள்?

0

கண்ணாடிப் பொருட்கள் மணலிலிருந்து உருவாக்கப் படுகின்றன! ஆம்! கடற்கரைகளிலும், ஆற்றுப் படுகைகளிலும், மற்றும் பிற பகுதிகளிலும் காணப்படும் மணலிலிருந்து கண்ணாடியை உருவாக்கலாம். 

கண்ணாடிப் பொருட்களை எப்படி தயாரிக்கிறார்கள்?
வியப்பாக இருக்கிறதா? சரி ! இது எப்படி முடியும்? மணலை அதிவெப்ப நிலைக்குச் சூடாக்கி, உருக்கி, பாகு போன்ற நீர்ம நிலைக்குக் கொண்டு வந்து, பின்பு அதிலிருந்து பல வடிவங்களை வார்க்கிறார்கள் அல்லது வடிவமைக் கிறார்கள். 

1700 செல்சியஸ் (அதாவது 3090   ஃபாரன்ஹீட்) வெப்ப நிலைக்கு மணலைச் சூடுபடுத்தினால், அது திட நிலையிலிருந்து உருகி பாகு போன்ற திரவ நிலையை அடைகிறது.  

சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?

மணலை (சிலிக்கா) உருக்கும் போது அதனுடன் சோடா சாம்பல் (Soda Ash - சோடியம் கார்பனேட்) மற்றும் சுண்ணாம்புக்கல் (Limestone கால்சியம் கார்பனேட்) சேர்க்கப் படுகின்றன. 

இதில் சோடா சாம்பல் சேர்ப்பதற்குக் காரணம், அது மணல் விரைவில் உருக வழி வகுக்கிறது. ஆனால், சோடா சாம்பல் சேர்ப்பதால், அது கண்ணாடியை நீரில் கரையும் தன்மை யுடையதாக மாற்றி விடும். 

இதைத் தடுக்கவே இரண்டாவது வேதிப்பொருளான சுண்ணாம்புக்கல் சேர்க்கப் படுகிறது. முடிவில் நமக்கு சோடா - சுண்ணாம்பு - சிலிக்கா கண்ணாடி கிடைக்கிறது.

பாகு போன்று உருகி, நீர்ம நிலையில் உள்ள மணலை வார்ப்புகளில் இட்டு அல்லது, குழாய்களைக் கொண்டு பலூன் போல் ஊதி, 

தேவைக்கேற்ப பல்வேறு வடிவங்கள் கொண்ட கண்ணாடிப் பொருட்கள், கொள்கலன்கள், சாளரத் தகடுகள் போன்றவற்றை உருவாக்கு கின்றனர். 

வெவ்வேறு வகையான பயன் பாடுகளுக்கு ஏற்ப, வேறுபட்ட தயாரிப்பு முறைகள், பிற வேதிக்கூட்டுப் பொருட்களின் கலவைகளைக் கொண்டு பலவகையான கண்ணாடிப் பொருட்கள் உருவாக்கப் படுகின்றன. 

கண்ணாடிப் பொருட்களை எப்படி தயாரிக்கிறார்கள்?

கண்ணாடி களாலான கட்டடங்கள், கண்ணாடிக் கதவுகள், சமையலறைப் பொருட்கள், ஊர்திகளில் பயன்படும் கண்ணாடிகள், தொலைக்காட்சித் திரைகள், கணிப்பொறி மற்றும் அலைபேசித் திரைகள், 

மூக்குக் கண்ணாடிகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், மிகக் கடினமான பல அடுக்கு கண்ணாடித் தகடுகள் போன்றவை அனைத்தும் இப்படித் தான் மணலிலிருந்து தயாரிக்கப் படுகின்றன.

சுவையான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் செய்வது எப்படி?

செயிண்ட் கோபெய்ன் கண்ணாடி நிறுவனத்தில் கண்ணாடிகள் உருவாக்கும் முறையைக் கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கிக் காணலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings