ஐ.டி. துறையில் என்ன நடக்கிறது? சலுகை உண்டா?

0
இது பழைய கதைதான் ஆனால் இது இப்போ தேவையானது தான் படிங்க தெரிஞ்சிக்கோங்க... 2006... சென்னையில சாஃப்ட்வேர் நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேர் பிடிக்கத் தொடங்கின காலம்... 
ஐ.டி. துறையில் என்ன நடக்கிறது? சலுகை உண்டா?
அப்பல்லாம் இந்தத் துறையில வேலை செய்ற பெண்களோட எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிடலாம். நிறுவனத்துக்கு நாலைஞ்சு பேர் இருப்பாங்க. 

இப்போ 10 வருஷம் ஆயாச்சு. தொழில்நுட்பமும் நிறுவனங்களும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியாச்சு. ஆனா, சாஃப்ட்வேர்ல வேலை செய்ற பெண்களோட எண்ணிக்கை 25 சதவிகிதத்தை தாண்டலே. 
மானுடவியல் நீதிப்படி 50 சதவிகிதம் கூட வேண்டாம். நம் தலைவர்கள் பேசுறதுபோல 33 சதவிகிதமாவது பெண்களோட பங்களிப்பு இருக்கணும். 

இந்த நிலை மாறணும்னா, பெண்களோட உண்மையான பிரச்னைகளையும் தன்மைகளையும் புரிஞ்சுக்கிட்டு கார்பரேட்டுகள் விதிமுறைகளை வகுக்கணும்.
 
சமூகமும் குடும்பமும் பெண்களுக்கான இயல்பை பறிக்காம ஒத்துழைக்கணும். அதுக்கான விழிப்புணர்வை உருவாக்குறது தான் எங்க நோக்கம்... 

மிகுந்த அக்கறையும் ஆதங்கமுமாகப் பேசுகிறார்கள் சாரதா ரமணியும் நாமகிரி ரமேஷூம். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக பணியாற்றுகிறார் சாரதா. 

நாமகிரி ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இருவரும் Empowering Women in IT, ITES Industry (eWIT) என்ற அமைப்பின் நிறுவனர்கள். 

மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண்களின் பிரச்னைகளைப் பேசவும், பணித்திறனை மேம்படுத்தவும், உயர் பதவிகளுக்கு பெண்களைத் தயார்படுத்தவும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கிறது இந்த அமைப்பு.
 
இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு நிகழ்வை பாலின சமத்துவம்  எதிர் காலத்தின் பணி அமைவிடம் என்ற தலைப்பில் ஆக்கப் பூர்வமான கருத்தரங்காக கொண்டாடிக் கொண்டிருந்த சூழலில், நம்மிடம் விரிவாகப் பேசினார்கள் ரமணியும் நாமகிரியும். 

தொடக்கத்தில் ஐ.டி. ஹப்ன்னு சொன்னா அது பெங்களூர்தான். 2000த்துக்குப் பிறகான காலகட்டங்கள்ல தான் மெல்ல மெல்ல சென்னையை நோக்கி ஐ.டி. நிறுவனங்கள் வரத் தொடங்குச்சு. 

ஆரம்பத்தில பெண்கள் உள்ளே வர்றதே பெரிய விஷயமா இருந்துச்சு. நாங்க நாலைஞ்சு பேர் தான் இருப்போம். ரொம்பவே இறுக்கமா இருக்கும். இந்த துறை பத்தி பெரிசா வெளியில தெரியாத காலகட்டம் அது. 

சாஃப்ட்வேர் நிறுவனங்கள் சார்ந்த கண்காணிப்பு பணிகளை செய்யும் Software Technology Parks of India நிறுவனத்தோட பொறுப்புல ராஜலட்சுமி மேடம் இருந்தாங்க. 

பணி நிமித்தம் அவங்களை அடிக்கடி சந்திக்கிறதுண்டு. ரொம்ப ஆக்கப் பூர்வமான பெண். மென்பொருள் துறையோட தலைநகரமா சென்னையை மாத்தினதுல அவங்க பங்களிப்பு அதிகம்.
 
இப்படியொரு அமைப்பை ஆரம்பிக்கிற ஐடியாவை அவங்கதான் கொடுத்தாங்க. பெண்களுக்கு ரொம்பவே உகந்த துறை இது. பெரிய உயரத்துக்குப் போகலாம். 
பெண்களுக்கு ஏத்த மாதிரி இன்னும் நிறைய பாலிசி வரணும். அதுக்காக நீங்கள்லாம் சேர்ந்து ஒரு அமைப்பை தொடங்கணும்னு அவங்க சொன்ன வார்த்தைகள் தான் இந்த அமைப்போட விதை. 

2006ல அமைப்பை முழு வடிவத்தோட ஆரம்பிச்சோம். பல தளங்கள்ல பெண்களுக்காக வேலை செஞ்சோம்.
 
வழக்கமா, எல்லாத் துறைகள்லயுமே பெண்களுக்கு அழுத்தமான ரோல் இருக்கு. அதே நேரம் ஏகப்பட்ட சங்கடங்களும் இருக்கு. ஆண்களோட ஒப்பிடும் போது பெண்களுக்கான சுமைகள் அதிகம். 

ஒரு ஆண் அலுவலகத்தில கடினமா வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வரும் போது, அவரை வரவேற்று காபி போட்டுக் கொடுத்து ஆறுதலா பேசி சோர்வைப் போக்க மனைவி இருப்பாங்க. 

ஆனா, பெண் அலுவலகத்தில எவ்வளவு சிரமமான வேலையைப் பாத்துட்டு வந்தாலும் அவங்களுக்கு ஒரு காபி கொடுக்கக் கூட ஆளிருக்க மாட்டாங்க.
 
அவங்களே தான் போட்டுக் குடிக்கணும். அலுவலகத்தில வேலையை சுமக்கிறவங்க, வீட்டுச் சுமையையும் முற்று முழுதா சுமக்க வேண்டியிருக்கும். 
ஆண், அலுவலகத்தில மேனேஜர்னா, வீட்டிலயும் அதே அதிகாரத்தோட இருக்க முடியும். 

பெண், அலுவலகத்தில என்ன பொறுப்புல வேணுன்னாலும் இருக்கலாம், வீட்டில அம்மா, மருமகள், மனைவின்னு சமரசமில்லாம எல்லாப் பொறுப்பையும் கூடுதலா சுமக்கணும்.
 
மற்ற துறைகளை விட சாஃப்ட்வேர்ல வேலை செய்ற பெண்களுக்கு கூடுதல் நெருக்கடி இருக்கு. வெளியில ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். கலர்ஃபுல்லான வாழ்க்கையா தெரியலாம். 

பணிச்சூழல்..? குறிப்பிட்ட டார்கெட் இருக்கும். முடிச்சே ஆகணும். இந்த வேலையை இவர் தான் செய்யணும்கிற நிலையும் இருக்கும். மற்ற வேலைகள் மாதிரி பத்துக்கு வந்துட்டு ஆறுக்கு கிளம்ப முடியாது. 

நைட் பத்து மணியானாலும் வேலையை முடிச்சுட்டு தான் போக முடியும். இவ்வளவு அழுத்தத்தோட வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனாலும், அங்கும் பெண்களுக்கான இயல்பான பொறுப்புகள் காத்துக் கிட்டிருக்கும்.
 
இந்த நிலையை பேலன்ஸ் பண்ற இடத்துல தான் பெண்களுக்கு பிரச்னை வருது. இன்னைக்கு நிறைய பெண்கள் சாஃப்ட்வேர் துறைக்கு வர்றாங்க. 

என்ட்ரி லெவல்ல 25 சதவிகிதத்துக்கு மேல பெண்களுக்கு இடமிருக்கு. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல நிறைய பேர் தாக்குப் பிடிக்கிறதில்லை.
 
நிறைய சம்பளம் கிடைக்கிறது மட்டுமில்லை... சாஃப்ட்வேர் துறையில வேலை செய்றவங்களுக்கு தனி அடையாளமும் கிடைக்கும். அவங்க எதிர்பாராத உயரத்துக்கு போக முடியும். 

சாதிக்கிறதுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கு. அதுக்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஒரு லெவலுக்கு மேல நிறைய பயணங்கள் இருக்கும். 

வெளிநாடு போக வேண்டியிருக்கும். இந்தியா முழுவதும் சுத்த வேண்டியிருக்கும். பலநூறு பேர்கிட்ட வேலை வாங்க வேண்டியிருக்கும்.
 
நிறைய பெண்கள் இதுக்கெல்லாம் தயாராகுறதில்லை. அவங்களே நம்ம எல்லை இவ்வளவுதான்னு ஒரு வரையறையை தீர்மானிச்சு வச்சிடுறாங்க. 

அதிக பட்சம் திருமணம் வரை... இல்லேன்னா குழந்தை பிறக்கிற வரை தான் வேலை... அதுக்கப்புறம் எவ்வளவு திறமைசாலியா இருந்தாலும் அவங்க உலகம் சுருங்கிடும்.
 
நாங்கள்லாம் திருமணம் செஞ்சுக்காம இல்லை. எங்களுக்கும் குழந்தைகள் இருக்காங்க. குழந்தைகளுக்கான, குடும்பத்துக்கான எந்தப் பொறுப்பையும் விட்டுக் கொடுத்ததில்லை. 

ரொம்ப மன நிறைவோட தான் இருக்கோம். நேரத்தைத் திட்டமிடுறதில நேர்த்தி இருக்கணும்... அது மட்டும் கை வந்துட்டா கவனம் சிதறாது.
 
சாஃப்ட்வேர்னா ஜீன்ஸ் போடணும்... பார்ட்டி அட்டர்ன் பண்ணணும்னு எல்லாம் சில பெண்கள் நினைக்கிறாங்க. சமூகத்திலயும் சாஃப்ட்வேர் துறை பத்தி நிறைய தவறான பார்வைகள் இருக்கு. 
யதார்த்தம் வேற... எல்லாத்தையும் தீர்மானிக்கறது நாமும் நம்முடைய செயல்பாடும் தான். இந்த உலகம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். 

நாம் எப்படி இருக்கோம்கிறது தான் முக்கியம். நம்முடைய பாதையை, செயல்பாட்டை நாம தெளிவா வரையறுத்து வச்சுக்கணும்.
 
நாங்க இன்னைக்கு இங்கே இருப்போம். நாளைக்கு யு.எஸ்ல இருப்போம். ஆனா, எங்கே போனாலும் எங்க கலாசாரம் மாறாது. எவ்வளவு பெரிய ஆளையும் தவழத் தவழ சேலை கட்டிக் கிட்டுப் போய் தான் சந்திப்போம். 

நாம என்ன உடை உடுத்துறோம்கிறது பெரிய விஷயம் இல்லை. நம்மோட திறன் என்ன? கம்யூனிகேஷன் எப்படியிருக்கு? 

யாரை எப்படி அணுகுறோம்? நம் ஆளுமைத் தன்மை எப்படிங்கிறதைப் பொறுத்துத் தான் நம்மை மதிப்பிடுவாங்க.
 
இன்னைக்கு மற்ற துறைகள்ல பெண்கள் எப்படி நடத்தப் படுறாங்களோ, அதை விட ஒரு படி நாகரிகமாவும் மரியாதையோடவும் தான் சாஃப்ட்வேர் துறையில பெண்கள் நடத்தப்படுறாங்க. 

இன்னும் சொல்லப்போனா, ஆண்களுக்கு இணையா அல்லது ஆண்களைக் காட்டிலும் அதிகமாவே பெண்களுக்கு ஊதியம் கிடைக்கிறது இங்கே தான். 
ஐ.டி. துறையில் என்ன நடக்கிறது? சலுகை உண்டா?
இங்கே தனித்துவமான வாழ்க்கை கிடைக்குது. அதே நேரம் வெளியில என்ன பிரச்னை இருக்கோ, அதே பிரச்னை பெண்களுக்கு இங்கேயும் இருக்கு.
 
விசாகா சம்பவத்துக்குப் பிறகு, கார்பரேட்ல பெண்களுக்கான பாதுகாப்பு முக்கிய பிரச்னையா கவனத்தில் எடுத்துக்கப்படுது. 

பல நிறுவனங்கள்ல செக்ஸூவல் ஹராஸ்மென்ட் விசாரணை கமிட்டியில நாங்களும் உறுப்பினரா இருக்கோம். புகார்கள் மேல தீவிரமா விசாரணை நடத்தப்படுது. 

இன்னைக்கு பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ரொம்பவே குறைஞ்சிருக்கு. அதே நேரம், ஐ.டி. துறையில பெண்களோட பங்களிப்பு குறைய அது தான் காரணம்னு சொல்ல முடியாது. 

அதையும் முற்று முழுதாக் குறைச்சு பாலின சமத்துவம் கோருவது தான் எங்க அமைப்போட பிரதான வேலை. பெண்களைப் பத்தி இங்கே சில கற்பிதங்கள் இருக்கு. 

ஆண்கள் அவங்களாவே பெண்களால இந்த வேலைகளை எல்லாம் செய்ய முடியாது, இந்த வேலை பெண்களுக்கு சரிவராது, இது மாதிரி வேலைகளை பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது.

இப்படி யெல்லாம் கற்பனை செஞ்சுக்கிட்டு தவிர்க்கிறாங்க. அதனால பெண்கள் சிறப்பான பல வாய்ப்புகளை இழந்துடுறாங்க. 

உண்மையில ஆண்களால செய்ய முடிந்த எல்லா வேலையும் பெண்களாலயும் செய்ய முடியும். இந்த யதார்த்தத்தை மேல் நிலையில இருக்கிற பெரும்பாலானோர் புரிஞ்சுக்கிற தில்லை. 

இந்த நிலை ஐ.டி. துறையில மட்டுமல்ல... ஒட்டுமொத்த சமூகத்திலயும் இருக்கு. ஏன்... உலகம் முழுவதும் அந்த எண்ணம் இருக்கு. இது தான் பெண்களோட வளர்ச்சிக்கு நடுவில இருக்கிற பெரும் தடை. 

இந்த மனோபாவத்தை மாத்தவும் நாங்க நிறைய முயற்சிகள் செஞ்சுக் கிட்டிருக்கோம். இன்னைக்கு மேனேஜர் நிலைக்கு, எக்ஸிகியூட்டிவ் நிலைக்குப் போற பெண்களோட எண்ணிக்கை ரொம்பவே கம்மியா இருக்கு. 
இந்திய அளவில் ஐ.டி. துறையில் பெண்களோட பங்களிப்பு... தொடக்க நிலையில் 24%. மேனேஜர், இயக்குனர் நிலையில 21%. சீனியர் மேனேஜர் நிலையில் 19%. எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் நிலையில் 14%. இது தான் யதார்த்தம். 

அதிக பட்சம் திருமணம் அல்லது குழந்தைகள் பிறந்துட்டா, அதோட பணிக்காலத்தை நிறைவு செஞ்சிடறாங்க. இப்படி இடைநிற்கிற பெண்களோட எண்ணிக்கை அதிகமாகிட்டிருக்கு.
 
இன்னைக்கு கிராமப் புறங்கள்ல இருந்து நிறைய பேர் ஐ.டி. வேலைகளுக்கு வர்றாங்க. பெண்களோட எண்ணிக்கையில சுமார் 25 சதவிகிதம் கிராமங்கள்ல இருந்து வர்றவங்க தான். 

தொடக்கத்திலே அவங்க சில சிக்கல்களை எதிர் கொள்றாங்க. முதல்ல கல்ச்சுரல் ஷாக். இங்கிருக்கிற கலாசாரம் அவங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துது. 

ஆண்களும் பெண்களும் கை குலுக்கிக்கிறது, பக்கத்துல உட்கார்றது, பெயர் சொல்லி அழைக்கிறதுன்னு தொடக்கமே அவங்களுக்கு மிரட்சியா இருக்கு.
 
அடுத்த பிரச்னை - தயக்கம். கருத்தைச் சொல்ல, கேள்விகள் கேட்க, சந்தேகங்களைக் கேட்டு தெளிவடைய எல்லாத்துக்கும் தயங்குறாங்க. 

அதுவும் வளர்ச்சியைத் தடுக்குது. மூன்றாவது பெரிய பிரச்னை மொழி... அடுத்து வேலைச் சூழல்... ஒரு கட்டத்துக்கு மேல பொறுப்புக்கு வந்துட்டா நேரம் காலம் பார்க்க முடியாது. 

நல்லது கெட்டதுக்கு லீவ் எடுக்க முடியாது. நாம வேலை செய்றது அமெரிக்காவுக்கோ, இங்கிலாந்துக்கோ... அவங்க நேரத்துக்குத் தகுந்த மாதிரி தான் இங்கே வேலை நடக்கும். 
ஐ.டி. துறையில் என்ன நடக்கிறது? சலுகை உண்டா?
அப்போ, ராத்திரி பகல்னு வித்தியாசம் இருக்காது. இதை ஏத்துக்கிட்டாகணும். டிராவல், இன்னைக்கு பெண்களுக்கு பெரிய பிரச்னையா இருக்கு. பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் ஓ.எம்.ஆர்.ல இருக்கு. 

ரோட்டுல ஏகப்பட்ட டிராபிக். காலையில 7 மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டியிருக்கு. இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவோம்னு தெரியாத சூழல். 

குழந்தைகள் இருந்தா இன்னும் சிக்கல். எதையும் இழக்க முடியாது தான். எல்லாத்தையும் விட குழந்தைகளும் குடும்பமும் தான் நமக்கு முக்கியம்.
 
ஆனா, சில புரிதல்கள் மூலம் இந்தச் சிக்கலை சரி செய்யலாம். குடும்பம் நமக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா போதும். குடும்பத்துக்காக நாம நிறைய தியாகங்கள் செய்யலாம். 

அதே நேரம் நமக்குன்னு சின்னதா ஒரு சுயம் இருக்குதானே? நமக்குன்னு ஒரு அடையாளம் வேணுமில்லையா? அதுக்காக சில விஷயங்களை சரி பண்ணிக்கணும். கூட்டுக் குடும்பமா இருந்தா சிக்கல் இல்லை. 

தனிக்குடித்தனம் இருக்கறவங் களுக்கு கொஞ்சம் சிரமம். கணவனும் மனைவியும் ஐ.டியில இருந்தா இன்னும் சிக்கல். கணவனோட சப்போர்ட் மனைவிக்கு அதிகமாகவே தேவைப்படும்.
 
பெண்கள் பணியில இருந்து பிரேக் ஆகுறதுக்கு இந்த சூழ்நிலை யெல்லாம் முக்கியக் காரணங்கள். குறிப்பிட்ட வருடங்கள் வேலை செஞ்சுட்டு, திடீர்னு பிரேக் அப் ஆகுற பெண்கள், 

திரும்பவும் சில வருடங்கள் கழிச்சு வேலைக்கு வர்றப்போ பல சிக்கல்கள் ஏற்படும். சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாற்றங்களை சந்திச்சிக் கிட்டிருக்கும்.
 
இவங்க வேலை செய்யும் போது இருந்த சாஃப்ட்வேர், திரும்ப வரும்போது இருக்காது. புதுசா ஒண்ணு இருக்கும். இவங்க கூட வேலை செஞ்ச கொலிக்ஸ், புரொமோஷன்ல போயிருப்பாங்க. 

பரீட்சையில ஃபெயிலாகி திரும்பவும் அதே வகுப்புல படிக்கிற ஸ்டூடன்ட் மனநிலை தான் வரும். நாங்க இது தொடர்பா நிறைய ஆய்வுகள் செஞ்சு தீர்வு தேடுறோம். 
இந்த சூழல்களை எதிர் கொண்டு வெற்றிகரமா பணிபுரிய பயிற்சிகள் கொடுக்கிறோம். பெண்களுக்கு ஆண்களை விட கூடுதலா லீடர்ஷிப் குவாலிட்டி தேவைப்படுது. அதையும் கொடுக்கிறோம்.
 
கார்பரேட் சைடுல நிறைய செய்ய வேண்டி யிருக்கு. நிறைய பேருக்கு பெண்களோட பிரச்னை புரியலே. பிரசவ விடுப்பு மாதிரி சின்னச் சின்ன உரிமைகளை பெரிய சலுகைகளை நினைக்கிறாங்க. 
ஐ.டி. துறையில் என்ன நடக்கிறது? சலுகை உண்டா?
பெண்களுக்கு நிறைய திறன் இருக்கு. அதை பயன்படுத்த கொஞ்சம் வசதிகள் வேண்டும். எல்லா பிரச்னைகளையும் மனசுல வச்சு பாலிசி உருவாக்கணும். 

அதுக்காக தொடர்ச்சியா பாலிசி மேக்கர்ஸ் கூட பேசுறோம். நிறைய ரிசர்ச் செஞ்சு கார்பரேட் பார்வைக்கு கொடுக்கிறோம்.
 
அடுத்து லீடர்ஷிப் டிரெயினிங். ஐ.டி. துறையில ஜெயிச்ச பெண்கள் மட்டுமில்லாம சமூகத்தில முன் மாதிரியா இருக்கிற பெண்களையும் அழைச்சுக் கிட்டு வந்து ஐ.டியில வேலை செய்யிற பெண்கள் முன்னாடி நிறுத்துறோம். 

எந்தச் சூழலை எப்படி எதிர் கொள்ளணும், யாரை எப்படி எதிர் கொள்ளணும்கிற நுட்பங்கள்... குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம், ஹெல்த்னு எல்லா அம்சங்களும் அந்த டிரெயினிங்ல இருக்கும்.
 
அடுத்து காலேஜ் லெவல்ல வேலை செய்றோம். இன்ஜினியரிங் கல்லூரிகளோட எண்ணிக்கை அதிகமாகிடுச்சு. நம் கல்வித்தரத்துல கொஞ்சம் பிரச்னை இருக்கு. 

சாஃப்ட்வேர் துறையில திறமையான பணியாளர்களுக்கு நிறைய தேவையிருக்கு. படிப்பை முடிச்சுட்டு வர்றவங்களோ பணித்திறன் இல்லாம வர்றாங்க. 

கல்லூரி லெவல்லயே இந்த நிலையை சரி செய்ய முயற்சிக்கிறோம். நிறைய எக்ஸ்பர்ட்ஸை பெண்கள் கல்லூரிகள்ல பேச வைக்கிறோம். கல்லூரிகள்லயே அவங்க திறமையை மேம்படுத்த முயற்சிக்கிறோம். 

சுவையான மஞ்சள் பூசணி பாயசம் செய்வது எப்படி?

இந்திய ஐ.டி. துறை அடுத்த பத்தாண்டுகள்ல மிகப்பெரிய வளர்ச்சியை எட்டப் போகுது. பல ஆயிரம் கோடி முதலீடு இந்தியாவுக்கு வர்றதுக்கான சாதகமான சூழல் நிலவுது. 

இந்தியாவுல 50% பெண்கள் இருக்காங்க. அவங்க அந்தத் துறையில ஆண்களுக்கு இணையா பங்களிக்கணும். அதுக்கான வேலைகளை எங்க அமைப்பு தீவிரமா செஞ்சுக் கிட்டிருக்கு. 

பாலிசி அளவுல, செயல்பாட்டு அளவுல, பணித்திறன் அளவுல பெண்கள் ஆண்களுக்கு இணையா வேலை செய்வாங்க. அவங்களால முடியாதது 

எதுவுமே இல்லை! உறுதியாக சொல்கிறார்கள் eWIT அமைப்பின் தலைவி சாரதா ரமணியும், செயலாளர் நாமகிரியும். ஒரு கட்டத்துக்கு மேல பொறுப்புக்கு வந்துட்டா நேரம் காலம் பார்க்க முடியாது. 

நல்லது கெட்டதுக்கு லீவ் எடுக்க முடியாது. நாம வேலை செய்றது அமெரிக்காவுக்கோ, இங்கிலாந்துக்கோ... அவங்க நேரத்துக்குத் தகுந்த மாதிரிதான் இங்கே வேலை நடக்கும். 
ஐ.டி. துறையில் என்ன நடக்கிறது? சலுகை உண்டா?
அப்போ, ராத்திரி பகல்னு வித்தியாசம் இருக்காது. எல்லாத்தையும் விட குழந்தைகளும் குடும்பமும் தான் நமக்கு முக்கியம். ஆனா, சில புரிதல்கள் மூலம் இந்தச் சிக்கலை சரி செய்யலாம். 

குடும்பத்துக்காக நாம நிறைய தியாகங்கள் செய்யலாம். அதே நேரம் நமக்குன்னு ஒரு அடையாளம் வேணும் இல்லையா? அதுக்காக குடும்பம் நமக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா போதும். 

கார்பரேட் சைடுல நிறைய செய்ய வேண்டியிருக்கு. நிறைய பேருக்கு பெண்களோட பிரச்னை புரியலே. பிரசவ விடுப்பு மாதிரி சின்னச் சின்ன உரிமைகளை பெரிய சலுகைகளை நினைக்கிறாங்க. 

பெண்களுக்கு நிறைய திறன் இருக்கு. அதை பயன்படுத்த கொஞ்சம் வசதிகள் வேண்டும். பாலிசி அளவுல, செயல்பாட்டு அளவுல, பணித்திறன் அளவுல பெண்கள் ஆண்களுக்கு இணையா வேலை செய்வாங்க. 

அவங்களால முடியாதது எதுவுமே இல்லை!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings