எந்த குறையும் சொல்ல முடியாத பேரரழகி . சரியான உயரம் அதேற்கேற்ற தேகம் , மொத்த அழகையும் கொண்ட முகம் . வசீகரத்தின் அடையாளம். அழகி மட்டுமல்ல உண்மையை பேசும் அதிசய மனிதர்.
இவ்வளவு அழகாய் இருந்தும் உலகப் புகழ் பெற்றும் தலைக்கனம் சிறிது கூட இல்லாதவர். தன் அழகை பற்றி பெருமிதம் கொள்ளாமல் பேட்டிகளின் போது தன்னம்பிக்கையை பற்றி பேசுவார்.
உலகம் முழுக்க டைட்டானிக் திரைப்படம் கொண்டாடப்படும் வேளையில் இந்தியா வந்து காசியிலும் ராமேஸ்வரத்திலும் இறந்த தன் நண்பனின் அஸ்தியை கரைத்து விட்டு அவருடைய ஆன்மா சாந்தியடைய கோவில்களில் பிரார்த்தித்து விட்டு சென்றார்.
எப்படிப் பட்ட உண்மையான தோழியாக கேட் இருந்திருக்கிறார். டைட்டானிக்கில் உடன் நடித்த லியர்ண்டோ டிகார்ப்ரியோவோடு 25 ஆண்டுகளையும் தாண்டியும் நெருங்கிய நண்பராய் இருக்கிறார்.
லியார்ண்டா குடும்பத்தோடு டூர் போகும் போதெல்லாம் கேட் மற்றும் அவர் குழந்தைகளையும் அழைத்து செல்வது வழக்கம்.
கேட் திருமணத்தில் மணப்பெண்ணின் சார்பாக கை பிடித்து அழைத்து வந்ததும் லியார்ண்டோ தான். அந்த அளவு நண்பரின் குடும்பத்தினர் நம்பிக்கையும் பெற்ற பெண்.
கேட் நடித்த 90 சதவீத படங்களை பார்த்திருப்பேன். அவர் நடிப்பு கூட ஆச்சர்யம் தான். நேரில் சந்திக்க விரும்பிய நடிகையும் அவர் தான்.
Thanks for Your Comments