உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

0

இன்று நம் உலகில் லட்சக்கணக்கான துறைமுகங்கள் உள்ளன. இந்தியாவில் எடுத்துக்கொண்டால் 13 பெரிய துறைமுகங்கள் (12 அரசுக்கு சொந்தமானது  மற்றும் ஒரு தனியார் துறைமுகம்) 

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

மற்றும் 187 அறிவிக்கப்பட்ட சிறு மற்றும் இடைநிலை துறைமுகங்கள் உள்ளன. ஆனால் இதற்கு எல்லாம் தொடக்க புள்ளி எது என்று தெரிய வேண்டாமா?

உலகின் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட துறைமுகம் நம் இந்தியாவில் தான் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? 

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

இந்தியாவின் பழமையான நாகரிகம் என்று சொல்லப்படும்,  சிந்து சமவெளி நாகரிகத்தின் வர்த்தக நகரமாக இருந்த லோத்தல் தான் உலகின் பழமையான துறைமுகத்தைக் கொண்டுள்ளது.

இன்றைய குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தல் நகரத்தில்,  சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிக சமூகத்தில் துறைமுகம் கட்டும் கலையில் வல்லுனர்கள் வாழ்ந்த இடமாக லோத்தல் இருந்துள்ளது. 

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

இந்த கிராமம் அகமதாபாத்தில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது. லோத்தல்,  இறந்தவர்களின் நகரம் என்றும் அழைக்கப் படுகிறது. 

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

ஏனெனில் குஜராத்தியில் லோத்தல் என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளால் ஆனது. லோத் மற்றும் தால் அதாவது இறந்தவர்களின் மேடு என்று பொருள்.

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான லோத்தல் மினி ஹரப்பா என்றும் அழைக்கப் படுகிறது. 

சபர்மதி ஆற்றின் பழைய கிளையுடன் இணைக்கப்பட்ட  இந்த நகரத்தில் வெளி நாடுகளுடன் வணிகம் செய்து பழகிய துறைமுகம் ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

இந்திய தொல்லியல் துறை 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அகழ் வாராய்ச்சியைத் தொடங்கியது. இது 19 மே 1960 அன்று முடிவடைந்தது. அந்த ஆய்வில் இந்த நகரம் கிமு 3700 இல் நிறுவப் பட்டதாக நம்பப் படுகிறது. 

சுவிஸ் பேங்க் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன?

அந்த நேரத்தில் இது குஜராத்தில் உள்ள சிந்து முதல் சௌராஷ்டிரா வரையிலான நதி வழியாக ஒரு முக்கிய வணிகமாக இருந்துள்ளது. 

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

எகிப்து மற்றும் மெசபடோமியாவுடன் வணிகம் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளது. இவை அக்காலத்தின் முக்கியமான வர்த்தக நகரமாக இந்த இடம் இருந்ததை சான்றுகளுடன் கூறுகின்றன. 

தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் கால்வாய்கள், செயற்கையான  மனிதனால் உருவாக்கப்பட்ட கப்பல் துறைகள், ஏலம் எடுக்கும் தொழிற் சாலைகள், குடோன்கள், வடிகால் அமைப்புகள் போன்றவற்றை  கண்டறிந்துள்ளனர். 

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

அதன் பின்னர் இந்த இடத்தின் முக்கியத்துவம் கருதி இந்த இடத்தை  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளது .

அனாமிகா வெப் சீரியஸ்... சன்னி லியோனுக்கு என்னாச்சு? வைரலாகும் வீடியோ !

மேலும் இங்கு இருந்து எடுக்கப்பட்ட  பொருட்களை அருகிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப் படுத்தியுள்ளனர். 

உலகின் பழமையான செயற்கை துறைமுகம் தெரியுமா?

அங்கு கிமு 3000 ஆண்டுகளில் இருந்து நகைகள், மட்பாண்டங்கள், முத்திரைகள், மத சின்னங்கள் போன்ற பல பொருட்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. 

இந்த அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings