தெரு நாய்களை அடித்தே கொள்ளும் நபர்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஓர் நபர் நாய்க்காக பார்த்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை ஓர் நபர் இழந்து இருக்கின்றார்.
இதற்கேற்ப அவையும் சாலையில் அங்கும், இங்குமாக திரிந்த வண்ணமே இருக்கின்றன. பெரும்பாலும் அவை உணவிற்காகவே சாலையில் சுற்றி திரிந்தவாறு இருக்கின்றன.
நீர்மூழ்கிக் கப்பலில் போதை பொருள்கள் - அதிரடி கடற்படை வீரர்!
இந்த நேரத்திலேயே அவை அதிகளவில் வாகனங்களில் சிக்கி இறக்க நேரிடுகின்றன. சில நேரங்களில் நாய்களால் மிகப் பெரிய விபத்துகள் கூட அரங்கேறி இருக்கின்றன.
அந்த வகையிலான ஓர் விபத்து சம்பவே தற்போது நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான குர்கான் - ஃபரிதாபாத் நெடுஞ்சாலையில் அரங்கேறி இருக்கின்றது.
அப்போது முழுமையாக கன்ட்ரோல் இழந்ததனால் அந்த கார் மிக மோசமாக விபத்தைச் சந்தித்து நேரிட்டிருக்கின்றது.
சாலையின் டிவைடரில் மோதி காரின் முகப்பு பகுதி மற்றும் இடது பக்கம் முழுவதுமாக சிதிலமடைந்து இருக்கின்றது. இந்த நிலையிலும் அக்காரை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி இருக்கின்றார்.
குறிப்பாக, தூசியை தட்டி விட்டு அவர் வெளியேறியது மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர் சிறிதும் காயமின்றி பாதுகாப்பாக வெளியேறியதற்கு அந்த காரின் அதிக உறுதித் தன்மையே மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் வேறு யாருக்கும் எந்த பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிகின்றது.
உலகக் கோப்பை கனவு க்ளோஸ் - கோலி சொல்லும் லாஜிக் !
டாடா ஹாரியர் கார் இது போன்று விபத்துகளில் சிறப்பாக செயல்படுவது முதல் முறையல்ல. சமீபத்தில் கூட இதே கார் மாடல் ஓர் மிகப் பெரிய விபத்தில் சிக்கியது.
அந்த விபத்திலும் பயணிகளுக்கு அதீத பாதுகாப்பையே அந்த கார் வழங்கியது. தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விபத்து சம்பவத்தைக் காட்டிலும் மிக மோசமான விபத்து நிகழ்வு அதுவாகும்.
இதுவரை இந்த காரை எந்த மோதல் ஆய்வு அமைப்பும் கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தவில்லை. ஒரு வேளை அந்த கார் மோதல் ஆய்விற்கு உட்படுத்தினாலும் அதிக ஸ்டார் ரேட்டிங்கையே பெறும் என எதிர் பார்க்கப் படுகின்றது.
இத்தகைய திறனையும், மிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
விற்பனைக்கு வந்து நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகின்ற நிலையில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக டாடா ஹாரியர் கார்கள் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன.
ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 24.07 லட்சம் வரையிலான விலையிலேயே இந்த கார் விற்கப் படுகின்றது.
இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் ஆடம்பர வசதிகள், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏராளமாக வழங்கப் பட்டிருக்கின்றன.
அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் (Advanced Driver Assistant System) இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது.
லேன் மாறுவது குறித்து எச்சரிக்கை வழங்குதல், ஃபார்வார்டு கொல்லிசன் வார்னிங், ரியர் கொல்லிசன் வார்னிங், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் டிராஃபிக் சைன் போர்டை கண்டறியும் வசதி என பல வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள்
இது தவிர, 6 ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்சன் கன்ட்ரோல், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மல்டிபிள் டிரைவ் மோட், பிரேக் டிஸ்க் வைப்பிங் கருவி, க்ரூஸ் கன்ட்ரோல்,
ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ரோல் ஓவர் மிடிகேஷன், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் ஹாரியர் எஸ்யூவியில் காரில் வழங்கப் பட்டிருக்கின்றன.
இதை உறுதிப் படுத்தும் விதமாகவே தற்போதைய விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த ஹாரியர் கார் பயனர்களையும் பெருமையடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
Thanks for Your Comments