கொல்லப்பட்ட சிறுமியை இழுத்துச் சென்ற போலீஸ் !

0

மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது. 

கொல்லப்பட்ட சிறுமியை இழுத்துச் சென்ற போலீஸ் !
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், சிறுமியின் உடலை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.

சிறுமியின் உடலை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இதற்கிடையே, மேற்கு வங்க காவல்துறையை பா.ஜ.க தலைவர்கள் கடுமையாகச் சாடி வருகினறனர். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா, உத்தர் தினாஜ்பூரின் கலியாகஞ்சில் உள்ள ராஜ்போங்ஷி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப் பட்டிருக்கிறார். 

ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலை மேற்கு வங்க காவல்துறை உணர்ச்சியற்ற முறையில் இழுத்துச் செல்கிறது.

இதன் மூலம் ஆதாரங்களை அகற்றிக் குற்றத்தை மறைக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல் படுவதாகத் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார். 

மேலும், செய்தி யாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப் பட்டவரின்  குடும்பத்தைப் பார்க்க பா.ஜ.க தலைவர்கள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்க வில்லை. 

அதே நேரத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்  தலைவர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப் பட்டனர் எனக் குற்றம் சாட்டி யிருக்கிறார்.

இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, 

பணம் வைக்க இடம் இல்லாமல் பை நிறைய வழிந்த பணம் !
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அவமானப் படுத்தியதாக காவல்துறை மீது குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது. 

சிறுமிக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப் படவும் இன்று அங்கு சென்று விசாரணை நடத்த விருக்கிறேன். இது குறித்த தகவல் மாநில அரசுக்கு நேற்று தெரிவிக்கப் பட்டது. 

ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் விசாரனை களத்தில் இறங்கி யிருப்பது குறிப்பிடத் தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings