அஸ்வதி - அச்சு - அனுஸ்ரீ - அனு - இப்படி பெயர்கள் மட்டும் தான் வேறு வேறு. ஆனால், நபர் ஒன்று தான். சபலிஸ்ட்களை கண்டால் விட மாட்டார் இந்த பெண். ஏகப்பட்ட நபர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். யார் இந்த பெண்?
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். 66 வயதாகிறது. பேங்க்கில் வேலை பார்த்து விட்டு ரிடையர் ஆனவர். மனைவி இறந்து விட்டார்.
இவருடைய மகள் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். மனைவியும் இல்லாததால், மகளை சங்கரனால் கவனித்து கொள்ள முடியவில்லை.
பாஸ்ட் புட் சாப்பிட்டால் கேன்சர் உண்டாகும் !
66 வயதாகி விட்டதால், தன்னையும், மகளையும் யாராவது ஒரு பெண் கவனித்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இதற்காக தன்னுடைய நண்பர் மோகன் என்பவரிடம் இதை பற்றி சொல்லவும், அவரும் உதவி செய்வதாக கூறினார்.
ரேஷன் கார்டுகள்:
சில நாட்களுக்கு பிறகு, மோகன் நூரநாடு பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை பற்றி சொன்னார்.
39 வயதாகிறது என்றும், அந்த பெண் நன்றாக இருவரையும் கவனித்து கொள்வார் என்றும் சொல்லி, சங்கரன் வீட்டில் கொண்டு வந்து வேலைக்கு சேர்த்து விட்டார்.
ஒரு நாள் அஸ்வதி, தனக்கு நிறைய கடன் இருப்பதாகவும், அதனை உடனே கட்டவேண்டும் என்றும் சொல்லி ரூ.40 ஆயிரம் கேட்டிருக்கிறார். சங்கரனும் அந்த பணத்தை தந்து உதவி யிருக்கிறார்.
கடன் பிரச்சனை:
பிறகு சில நாட்களுக்கு சங்கரனிடம் திருமணம் செய்து கொள்வதாகவும், ஆனால், கடன் 60 ஆயிரம் இருக்கிறது.
அந்த கடனை அடைத்தால் உங்களையே கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் சொல்லி, ரூ.60 ஆயிரம் கேட்டுள்ளார். அந்த பணத்தையும் சங்கரன் தந்துள்ளார்.
ஒருநாள் அஸ்வதி, சங்கரனிடம் தன்னுடைய ஆதார்கார்டு, ரேஷன் கார்டு வீட்டில் உள்ளதால், அதை எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு போயிருக்கிறார். ஆனால், திரும்பி வரவே யில்லை.
டிஜிட்டல் திருட்டில் இருந்து நம்முடைய பணத்தைப் பாதுகாப்பது எப்படி?
அப்போது தான் சங்கரனுக்கு தான் ஏமாற்றப் பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரன் கொல்லம் போலீசில் புகார் தந்தார்.
போலீசாரும் வழக்குப்பதிவு பதிவு, தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை கைது செய்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் போலீசாரே மிரண்டு போய் விட்டார்கள்.
கொல்லத்தை சேர்ந்த அஸ்வதி, மனைவியை இழந்தவர்களை குறி வைத்து, அவர்களையே திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, பல பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமானது.
இதை வைத்து போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைக்குள் நுழைந்தனர்.
மெசேஞ்ஜர்:
இதில், தாங்கள் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த குற்றவாளி அஸ்வதி தான் என்பதையும் கண்டறிந்தனர். அதாவது, கேரள காவல்துறை போலீசார் சிலர், போலி கணக்குகளை முகநூலில் வைத்திருந்துள்ளனர்.
அழகான பெண்களின் போட்டோக்களை ப்ரொபைல்லாக வைத்து, ஃபேஸ்புக்கில் போலீசார் இயங்கி வந்துள்ளனர். இதை மோப்பம் பிடித்து விட்டார் அஸ்வதி.
போலி முகநூல் கணக்கு வைத்திருக்கும் போலீசார்களுக்கு குறி வைத்து, அவர்களுடன் மெசேஜ்ஞ்சரில் ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார்.
ஆபாசமாக சேட்டிங் செய்வதுதான் அஸ்வதியின் ஒரே ஆயுதம். ஆபாசமாக பேசியே நெருக்கமாகி விடுவதுடன், ஆன்லைன் மூலம் அவர்களிடம் பணத்தை கறந்து விடுவாராம்.
சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?
அப்படித் தான் கெல்லம் ரூரல் எஸ்ஐ ஒருவர், அஸ்வதியின் அழகில் மயங்கி விழுந்துள்ளார். விடிய விடிய ஆபாச சாட்டிங்கும் செய்துள்ளார். ஒரே இரவில் 1 லட்சம் ரூபாய் வரை பறி கொடுத்துள்ளார்.
அதே போல, 68 வயது முதியவர் ஒருவரும் அஸ்வதியிடம் சிக்கி உள்ளார். அஸ்வதியின் போட்டோவை பார்த்ததுமே, நைஸ் என்று கமெண்ட் செய்தாராம்.
இந்த ஒரு கமெண்ட்டை செய்து விட்டு, 40 ஆயிரம் ரூபாய் அஸ்வதியிடம் இழந்து விட்டார். அதாவது 68 வயது தாத்தாவையும் கல்யாணம் செய்வதாக சொல்லி, 40 ஆயிரம் பறித்துள்ளார் அஸ்வதி.
லீலைகள்: இது போல பல புகார்கள் அஸ்வதி மீது குவியவும், அவரது வங்கி கணக்கில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பரை வைத்து, அஸ்வதியை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.
3 வருடங்களுக்கு முன்பு, முன்னாள் தேவசம்போர்டு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் என்பவரும், அஸ்வதியின் விலையில் விழுந்து ஏமாந்து போனவர் தானாம்.
அது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கடகம்பள்ளி சுரேந்திரனும் அஸ்வதியின் லீலையில் விழுந்தவர் தான் என்பது, தற்போது பரவி வரும் ஆடியோ லீக் மூலம் தெரிய வந்துள்ளது.
கெட்டப் சேஞ்ச்: ஏதோ ஒரு வழக்கை விசாரிக்க போய், கடைசியில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இந்த பெண்ணின் ஒவ்வொரு வண்டவாளமும் வெளியே வந்து கொண்டிருக்கிறது.
முக்கிய புள்ளிகளும் இவரிடம் ஏமாந்தது அறிந்து போலீசார் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக, ஃபேஸ்புக்கில் அஸ்வதியின் மோசடிகள் நடந்துள்ளன.
இவரிடம் விழுந்தவர்கள் எல்லாருமே வயதானவர்கள். வயதுக்கு மீறிய நபர்களிடம் மட்டுமே ஆபாச சாட்டிங் செய்துள்ளார். வசதியானவர்கள் என்றால் அதற்கேற்றார் போல் டிரஸ் செய்து கொள்வாராம்.
மார்டன் டிரஸ் முதல் சேலை வரை கெட்டப் சேஞ்ச் நடந்து கொண்டே இருக்குமாம். இவரிடம் ஏமாந்த வயதானவர்களில் பெரும்பாலானோர் ரிடையர் ஆபீசர்ஸ் என்கிறார்கள்.
சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?
அதனால், அவர்கள் யாருமே புகார் கொடுக்க முன் வராத நிலையில், ஒருசிலர் மட்டுமே புகார் தந்துள்ளனர். அஸ்வதியிடம் விசாரணை நடந்து கொண்டிருக் கிறதாம்.
Thanks for Your Comments