உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டுமா?

0

நீங்கள் எதிர்பாராத காரணங்களால் ரயில் பயணம் செய்ய முடியாத போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை எளிதாக மற்றவருக்கு மாற்றலாம். இதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டுமா?
ரயில் டிக்கெட் :

இந்தியாவில் ரயில் டிக்கெட் புக் செய்வது ரொம்ப சுலபமாகி விட்டது. வீட்டில் இருந்த படியே IRCTC இணையதளம் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம். 

இவ்வாறு நீங்கள் புக் செய்யும் டிக்கெட்டில் எதிர்பாராத சில காரணங்களால் பயணம் செய்ய முடியாமல் போக நேரலாம். 

இத்தகைய நேரத்தில் இந்த உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை நீங்கள் உங்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மாற்றி விடலாம். ரயில் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் இதற்கான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.

ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது? தெரியுமா?

மேலும் ஒரு முறை மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை மற்றவருக்கு மாற்ற முடியும். இந்த டிக்கெட்டை மாற்ற ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டரில் டிக்கெட்டை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். 

அப்போது மாற்ற விரும்பும் நபரின் ஆதார் மற்றும் வாக்காளர் உள்ளிட்ட அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். மேலும் டிக்கெட்டையும் பிரிண்ட் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings