இந்த பிரபஞ்சத்தில் பலப்பல அதிசய உண்மைகள் உள்ளன. ஆனால் நாம் அதிகம் பயன்படுத்தும் தண்ணீரின் அதிசயம் பற்றி நாம் இது வரை உணர்வது இல்லை.
நீர் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது. தற்போது மழை குறைவதும், வறட்சி நீடிப்பதுமான நிலை அவ்வப்போது அரங்கேறி கொண்டிருக்கிறது. உயிர்களின் வாழ்வாதாரமே தண்ணீர் தான்.
காதலிக்காமல் வெறுக்கும் பெண்ணா நீங்கள் !
அதனால் தண்ணீரை திரவத் தங்கம் என்று சிறப்பிக்கிறார்கள். திண்மம், திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் தண்ணீர் காணப்படுகிறது.
பனிக்கட்டியாக திண்ம நிலையிலும், நீராக திரவ நிலையிலும், நீராவி மற்றும் நீர்கோவையாக வாயு நிலையிலும் தண்ணீர் உள்ளது. நீர் சுவையற்ற, மணமற்ற, உருமற்ற பொருளாகும்.அது சார்ந்திருக்கும்
பொருட்களின் வடிவத்தை தண்ணீர் பெறுகிறது. புவிப் பரப்பில் 71 சதவீத பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. உலகில் உள்ள நீரில் 3 சதவீதம் மட்டுமே நன்னீர். இதிலும் 2 சதவீதம் பனிக்கட்டியாக உள்ளது.
மீதமுள்ள 1 சதவீதம் தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் பயன்படுத்தப் படுகிறது. உயிரினங்கள் வாழ தண்ணீர் மிக அவசியம். மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது.
தண்ணீர் இல்லையெனில் நம் உடலில் உள்ள செல்கள் அழிந்து மனிதன் இறக்க நேரிடும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நீர் பல விதமான பொருட்களை கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது.
பல்வேறு வேதிப்பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற் சாலைகளில் குளிர்விப்பானாகவும் மற்றும் சிறந்த கடத்தியாகவும் தண்ணீர் பயன்படுகிறது. எனவே வர்த்தக ரீதியாகவும் தண்ணீர் முக்கியத்துவம் பெறுகிறது.
தினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதா?
தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்கக் கூடாது என்பது தண்ணீரின் அருமையை விளக்கும் பழமொழி.
நீரானது ஒரு திரவம், நாம் அதை எந்த கொள்கலனில் ஊற்றுகிறோமோ அது அந்த கொள்கலனின் உருவத்தை அடையும். இது நமக்கு பள்ளிக்கூட பாலபாடம்.
ஆனால் உண்மையில் நம் கண்களுக்கு முன்னே நடக்கும் அதிசயம் என்ன வென்றால் நமது பூமியில் உள்ள அனைத்து கடல்களும் (ஒரு கடல் தான்) ஒன்று சேர்ந்து எவ்வித கொள்கலனின் உதவியும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய உருண்டையான வடிவத்தை அடைந்துள்ளது.
இது புவியின் நிறையீர்ப்பு சக்தியினால் உண்டான மிகப்பெரும் அதிசயம் ஆனால் நாம் அதை கண்டு உணர்வதில்லை.
நீரானது இப்பிரபஞ்சத்தில் இறைவனால் முதன் முதலில் படைக்கப்பட்டது என குர்ஆன் மற்றும் பைபிள் கூறுகின்றன, அது போல் யஜுர் வேதத்திலும் (தைத்திரிய ஆரண்யகத்தில்) நீரின் சிறப்புக் கூறுகள் கூறப்பட்டுள்ளன.
அதே போல் விஞ்ஞானமும் ஹைட்ரஜன் (நீரியம்) முதன் முதலில் உருவானதாக கூறுகிறது. தனிம அட்டவணை வரிசையில் நீரியத்திற்கு (ஹைட்ரஜன்) முதல் இடம் கொடுக்கப் பட்டுள்ளது.
நமக்கு தெரிந்த வரையில் எல்லா அணுக்களும் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் கொண்டவை ஆனால் நீரியம் (ஹைட்ரஜன்) மட்டும் ஒரே ஒரு புரோட்டான் மற்றும் ஒரே ஒரு எலக்ட்ரான் மட்டுமே கொண்டது.
நியூட்ரான் கிடையாது. ஹைட்ரஜன் எரியக்கூடிய தன்மை உடையது, அதேபோல ஆக்ஸிஜனும் எரியக் கூடிய தன்மை உடையது ஆனால் இரண்டும் சேர்ந்து நீராக உருவாகிய பிறகு எரியும் தன்மையை இழந்து விடுகின்றன.
எந்த ஒரு பொருளும் வெப்பத்தை உள்வாங்கினால் விரிவடையும். அதாவது தனது உருவத்தை பெரிதுபடுத்தும். அதே சமயம் குளிர் நிலையில் தன் உருவத்தை சிறிதாக்கும் (சுருங்கி விடும்).
கர்ப்பமான பெண்கள் கவனிக்க வேண்டியவை !
ஆனால் நீரானது குளிர் நிலையில் தன் உருவத்தை பெரிதாக்கும். குளிர் பிரதேசங்களில் உள்ள தண்ணீர் குழாய்கள் குளிர் காலத்தில் அதன் உள்ளே உள்ள நீரினால் வெடிப்படையும்.
(அதற்கு மாற்று ஏற்பாடுகள் பல உண்டு ஆனால் நீரின் தன்மை இது தான்). நாம் வீட்டில் தயார்செய்யும் ஐஸ் கட்டிகளில் இதனை பார்க்கலாம்.
அதாவது நாம் வைக்கும் தண்ணீர் ஐஸ் ஆக மாறிய பிறகு அதன் அளவு சிறிது கூடியிருப்பதை காணலாம்.
நமது உடலிலும் சரி நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களிலும் சரி நீரே ராஜாதிராஜா. நீரின்றி அமையாது உலகு என்பதை விட, நீரின்றி அமையாது பிரபஞ்சம் (பேரண்டம்) என்பது தான் பொருத்தமானது.
தண்ணீருக்கு போதுமான அளவு காலம் கொடுக்கப் பட்டால் அது எவ்வளவு கடினமான உலோகத்தையும் அரித்து காணாமல் ஆக்கி விடும். பிளாஸ்டிக்கே ஆனாலும் சரி (கொஞ்சம் காலங்கள் கூடுதலாக தேவைப்படும்).
அதி பயங்கரமான அணுக்கதிர் வீச்சினையே சிறிது சிறிதாக வீரியம் இழக்கச் செய்யும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டு.
ஏரி, குளம் போன்றவற்றில் உள்ள நீரானது கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெது வெதுப்பையும் வெளியிடும் தன்மை யுடையது.
உண்மையிலேயே அதிசயம் நிறைந்த நீரைப் பற்றி நான் இங்கு எழுதி யிருப்பது சிறு குறிப்பு மட்டுமே, இன்னும் நிறைய நிறைய இருக்கின்றன.
Thanks for Your Comments