பெட்ரோல்கள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் அதன் நிறம் மாற வாய்ப்புள்ளது. பெட்ரோலை அதன் நிறத்தை வைத்துத் தரத்தை முடிவு செய்ய முடியுமா? இது குறித்த விபரத்தைக் காணலாம்.
இப்படியாக நாம் வாழ்வில் பயணம் என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதற்கு இன்று உலகில் உள்ள பெரும்பாலான போக்குவரத்து வசதி பெட்ரோலிய பொருட்களையே எரிபொருளாகக் கொண்டுள்ளனர்.
இந்த பெட்ரோலும், டீசலும் ஒரு வாகனத்திற்கு ரத்த ஓட்டம் போல மிகவும் முக்கியமானது. இன்று பெட்ரோல், டீசல் கிடைக்காத ஊரே இல்லை என்கிற அளவிற்கு பெட்ரோல் பங்க்கள் அதிகமாகி விட்டது.
இது நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களில் எண்ணிக்கையின் எதிரொலி தான் இந்த பெட்ரோல் பங்க் பெருக்கம்.
பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
இப்படியான பெட்ரோல் மற்றும் டீசலின் நிறம் குறித்து இன்று பல விதமான புரளிகளும் போலியான தகவல்களும் சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது.
பெட்ரோல் அல்லது டீசல்கள் குறிப்பிட்ட நிறத்திலிருந்தால் தான் அது கலப்படம் இல்லாதது, குறிப்பிட்ட நிறத்திற்கு மாறாக இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் எனப் பலர் பேசி வருகின்றனர்.
இந்த தகவலின் படி உண்மையில் பெட்ரோல்களில் கலப்படம் செய்ய முடியுமா? கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல்கள் உண்மையில் கலர் மாறுமா?
இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெட்ரோலுக்கான நிறம் எப்படி வருகிறது எனக் காணலாம்.
நமக்கு எல்லாம் பெட்ரோல், டீசல் எல்லாம் கச்சா எண்ணெய்யி லிருந்து தான் பிரித்தெடுக்கிறார்கள். இப்படியாக பெட்ரோல்கள் பிரித்தெடுக்கும் போது அது டிரான்ஸ்பரன்ட்.
இது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வண்ணம் கலக்கப்படுகிறது. அந்த நாடு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப வண்ணம் மாறுபடும்.
பாலியல் கொடுமையால் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் !
இந்த டை கலப்பதற்கு முக்கியமான காரணம் பொதுவாகக் கச்சா எண்ணெய்யி லிருந்து பிரித்து எடுக்கப்படும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எல்லாம் ஒரே மாதிரியாக வண்ணம் இல்லாமல் இருக்கும்.
இது தயாரித்துப் பிரிக்கப்படும் இடத்தில் ஒவ்வொன்றையும் வேறுபாடு காண இதற்குத் தயாரிக்கும் இடத்திலேயே வண்ணம் கொடுக்கப் படுகிறது.
இதனால் பெட்ரோல் டீசலுக்கு சால்வென்ட் ரெட் மற்றும் சால்வென்ட் யெல்லோ ஆகிய நிறத்தில் கொடுக்கப் படுகிறது. மண்ணெண்ணெய்க்கு நீல நிற டை வழங்கப் படுகிறது.
இதனால் மண்ணென்னை நீல நிறத்தில் இருப்பதைக் காண முடியும். இது போன்ற எரி பொருள்களுக்கு டை கொடுப்பதற்கு முக்கியமான காரணம் நிறுவனங்களில் இதை அடையாளம் காணுவதற்காக மட்டுமல்ல.
மக்களும் இந்த நிறத்தை வைத்து அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவும் இந்த டை பயன்படுகிறது.
டை இல்லாமல் பெட்ரோல், டீசல் அல்லது மண்ணென்ன பயன்பாட்டிற்கு வந்தால் அது சில்லறை விநியோகத்திற்குச் செல்லும் போது தண்ணீர் போன்ற தோன்றம் வந்து விடும்.
இதனால் மக்களுக்குத் தண்ணீருக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியாமல் போகும். இதனால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்க இந்த முயற்சியை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
நிறத்தை வைத்துச் சொல்லவே முடியாது. பெட்ரோலின் நிறத்தில் வித்தியாசம் தெரிகிறதே ஏன் எனப் பலருக்குச் சந்தேகம் வரும்.
பொதுவாக பெட்ரோலை ரீஃபைன் செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு விதத்தில் டையிங்கை கலப்படம் செய்வார்கள். அதனால் இரு வேறு நிறுவனம் ரீஃபைன் செய்த பெட்ரோல்கள் வேறு வேறு நிறங்களில் இருக்கலாம்.
இதற்காகத் தரத்தில் மாறுபாடு இருக்கும் எனச் சொல்வது தவறு. அதே போல பெட்ரோலின் அளவுகள் வேறுவேறாக இருந்தாலும் அதை ஒப்பீட்டு பார்த்தாலும் நிறம் மாறு பாடு தெரியும்.
அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலையும் 5 லிட்டர் பெட்ரோலையும் சாம்பிளுக்காக அளந்து பார்த்தால் அதில் நிற வித்தியாசம் ஏற்படலாம்.
இது போக பெட்ரோலின் நிறம் நீங்கள் பார்க்கும் இடத்தில் உள்ள வெளிச்சம் மற்றும் மற்ற நிற பொருட்களின் ரிஃப்லெக்ஷனை கொண்டும் மாறுபடும்.
சில நாடுகளின் பெட்ரோலின் பயன்பாடு குறித்துப் பிரிக்கவும் இந்த நிறத்தைப் பயன்படுத்து கின்றனர்.
காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது?
அமெரிக்காவின் டெக்ஸான் மாகாணத்தில் ஆஃப் ரோடின் பயன்பாட்டிற்கான பெட்ரோலுக்கு வரி கிடையாது. அதனால் அதன் விலை குறைவாக இருக்கும். ஆஃப் ரோடு வாகனங்களுக்கு சிவப்பு நிற பெட்ரோல் பயன்படுத்தப்படும்.
அந்நாட்டு வாகன சோதனையில் சாதாரண ரோடுகளில் அல்லது ஆஃப்ரோடு இல்லாத வாகனங்களில் இந்த சிவப்பு நிற பெட்ரோல் இருந்தால் அதற்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
பெட்ரோல், டீசலுக்கு டை மூலம் நிறம் கொடுத்தற்குக் காரணம் இதுவாக தான் இருந்தாலும் மற்ற சில பலன்களையும் தருகிறது.
அதுல உள்ளது போல என்கிட்ட நடந்துக்க... டாக்டர் மனைவி டார்ச்சர் !
பொதுவாக பெட்ரோல் டேங்க்கில் பெட்ரோல் இருப்பதைப் பார்க்க வாகனத்தைக் குலுக்கி பார்த்தால் அது கலரில் இருப்பதால் தான் எளிதாகத் தெரிகிறது.
ஆனால் கண்ணாடி போல இருந்தால் அதன் அளவை காண்பது கடினம் இது கூடுதல் தகவல்.
Thanks for Your Comments