அது உங்களின் வாகன ஜாதகத்தில் பதிவாகும். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், வேறெங்கேனும் மீண்டுமொரு முறை பிடிபட நேர்ந்தாலோ,
உங்களுடைய ஓட்டுநர் உரிமம் ரத்தாவதோடு மேலும் பல அரசு சேவைகளும் ரத்துச் செய்யப்படும். திரும்ப இதை நீங்கள் வாங்குவதற்குள் இன்னொரு ஜென்மம் எடுத்து வந்து விடலாம்.
எனவே, பார்த்துச் சூதானமா நடத்துக்குங்க. இனி முன்பு போலப் போக்குவரத்து விதி மீறிச் சென்றால், இன்று இல்லை யென்றாலும் என்றாவது மாட்டுவீர்கள், அதற்கான அபராதம் கடுமையாக இருக்கும்.
எனவே, போக்குவரத்து விதிகளை மீறாமல் இருங்கள்.
உணவில் சேர்க்க வேண்டிய வேர் காய்கறிகள் !
கோட்டை தாண்டினால் அபராதம்
இவ்வளோ நாளாகக் கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்திக் கொண்டு இருந்தால் அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால், தற்போதோ பிடிக்க வாய்ப்புள்ளது.
அதிக ஒலி எழுப்புவர் களுக்கும் ஒரு அபராதத்தை விதித்தால் புண்ணியமாகப் போகும், காதில் ரத்தம் வந்து விடும் போல, படுத்தி எடுக்குறாங்க.
முன்பெல்லாம் மாட்டினால், அபாரதமோ லஞ்சமோ கொடுத்துத் தப்பித்து விடுவார்கள். தற்போது மின்னணு முறையால் அபராதம் விதிக்கப் பட்டால், உங்களுடைய கணக்கில் வந்து விடும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் போக்குவரத்து விதியை மீறியதாக வந்தால், உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்படும். அனைத்தும் மின்னணு மயமாகி விட்டது.
நீங்களே சென்று Violation History யைப் பார்க்கலாம்.
எனவே, Violation Strike அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக, இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை.
வாளை மீன் குழம்பு செய்வது எப்படி?
உங்க ஓட்டுநர், வாகன உரிமமும் உங்கள் ஜாதகத்தையே கொடுத்து விடும்.
வாகன உரிமையாளர் பெயர்
வட்டார போக்குவரத்து அலுவலகம்
பதிவெண்
வருடம்
கலர்
வேரியண்ட்
முதலானவை தெளிவாக காட்டும்.
அதற்கெனவே செயலிகள் இருக்கின்றன. சாதாரணமாக யார் வேண்டு மானாலும் வாகன எண்ணை அதில் பதிவிட்டால் அபராத நோட்டீஸ், தொகை போன்றவை யெல்லாம் காட்டும்.
நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?
எனவே ஒரு முறை அபராதம் விதிக்கப் பட்டால் கண்டிப்பாக அதனை கட்டுவதே சாலச்சிறந்தது.
Thanks for Your Comments