கேரள மாநிலத்தில் லாரி ஒன்றின் பின்னால் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் அதிகப் படியாக வாயு வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு கேரள எல்லையில் எப்போதும் வழக்கம் போல போக்குவரத்து சேவை இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள சாலைகள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.
இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக சரக்கு மற்றும் பேருந்து போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
சீனித் துளசியை இனிப்பூட்டியாக பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் !
இதனிடையே கேரளாவின் எர்ணா குளத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைட் ஏற்றி வந்த டேங்கர் லாரி தமிழக எல்லையில் விபத்தில் சிக்கியதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று வாளையாறு. இங்கே தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் கார்பன் டை ஆக்சைடு ஏற்றிச் செல்லப் பட்டது.
கோவையில் இருக்கும் சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்துள்ளனர்.
அப்போது அந்த டேங்கர் லாரி தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையாறு வட்டப்பாரா அருகே வந்த போது,
திடீரென கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, இந்த டேங்கர் லாரியில் பின்புறத்தில் மோதியுள்ளது.
விபத்து: எதிர்பாராத விதமாக காய்கறி லோடு லாரி மோதிய நிலையில், கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்த லாரி வால்வில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்ளே இருந்த கார்பன் டை ஆக்சைடு திடீரென வெளியேற தொடங்கியது.
ஆதார் அப்டேட்களுக்கு வீட்டில் உட்கார்ந்தே பதிவு செய்யலாம் !
பயங்கர சத்தத்துடன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற தொடங்கிய நிலையில், அங்கே வெள்ளை புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாளையாறு போலீசார், பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர்.
கஞ்சிக்கோடு தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க போராடினர்.
டேங்கர் லாரியில் வால்வு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆகியுள்ளது. தீவிர போராட்டத்திற்கு பின்னரே தீயணைப்புத் துறையினர் வால்வை சீர் செய்தனர்.
திடீரென கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் இப்படி அதீத சத்தத்துடன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி யுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வாளையாறு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி யுள்ளனர்.
Thanks for Your Comments